திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனை இந்தியாவிற்கே வழிகாட்டுகிறது. விளாத்திகுளம் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் போச்சு.
ஷ்யாம் நீயூஸ்
24.05.2022
திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனை இந்தியாவிற்கே வழிகாட்டுகிறது. விளாத்திகுளம் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்கள்.
தூத்துக்குடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அயராது உழைப்பின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் விளாத்திகுளம் காய்கறி மார்க்கெட் அருகில் ஜி.வி.மார்கண்டேயன் எம்.எல்.ஏ தலைமையில் திமுக பொதுக்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் சின்னமாரிமுத்து, வசந்தம் ஜெயக்குமார், செல்வராஜ், மும்மூர்த்தி, காசிவிஸ்வநாதன், நவநீதகண்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ராஜசேகரன் வரவேற்புரையாற்றினார். வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆகியோர் பேசுகiயில் தமிழகத்தில் 10 ஆண்டுகாலம் அதிமுக ஆட்சி இருந்தகாலமாக இருந்தது புதிய திட்டங்கள் எதுவும் செயல்படுத்தவில்லை. 2006 முதல் 2011 வரை முதலமைச்சராக இருந்த கலைஞர் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தியதை கூட முடக்கிய ஆட்சி தான் அதிமுக தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் தளபதி கருவுற்ற தாய்மார்கள் முதல் குழந்தைகளுக்கு கல்லூரி படிப்பு வரை பல்வேறு உதவிகள் வழங்கப்படுகிறது. விவசாயிகள் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் திட்டங்களை தொடங்கியுள்ளார். விளாத்திகுளம் தொகுதி வளர்ச்சியடைய வேண்டும் என்பதற்காக திமுக ஆட்சி அமைந்தபின் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியின் போது சாலை மேம்படுத்தப்பட்டு புறவழிச்சாலை மூலம் போக்குவரத்து சீராக செயல்படுகிறது. எல்லாத்துறைகளிலும் தமிழகம் வளர்ச்சியடைந்து தமிழக மக்கள் அனைவரும் பலனடைய வேண்டும். என்ற தொலைநோக்கு சிந்தனையோடு இருபது மணி நேரம் உழைக்கும் முதலமைச்சரை நாம் பெற்றுள்ளோம். இந்தியாவில் சிறந்த முதலமைச்சராக தளபதியார் விளங்குகிறார். அவருடைய உழைப்பும் மக்கள் நன்மையும் கடைகோடி மக்கள் வரை சென்றடைகிறது. ஆட்சி பொறுப்பேற்றதும் கொரோனா தொற்று 38 ஆயிரம் வரை இருந்தது. தடுப்பு ஊசி எல்லோரும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டதுடன் முன் உதாராணமாக இருந்து தடுப்பு ஊசி எடுத்துக்கொண்டார் முதல்வர். அதனால் தமிழகத்தில் கொரோனா தடுக்கப்பட்டுள்ளது. ஓராண்டு ஆட்சியில் இவ்வளவு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இன்னும் நான்காண்டு ஆட்சியில் பல்வேறு சாதனைகள் நிகழ்;த்தி தமிழகம் எல்லா வகையிலும் முன்னேரிய மாநிலங்களில் நம்பர் ஒன்னாக திகழும் என்று பேசினார்கள்.
கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர்கள் ஆரணி மாலா இராமர் சரத்பாலா ஆகியோரும் உரையாற்றினார்கள். பொதுக்கூட்டத்தில் மாவட்ட ஒன்றிய பேரூர் கிளைக்கழக நிர்வாகிகள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.