ஷ்யாம் நீயூஸ்
01.05.2022
மாப்பிள்ளையூரணி கிராமசபை கூட்டம் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி கிராமசபை கூட்டம் மாதாநகர் சந்தனமாரியம்மன் கோவிலில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஊராட்சியின் பொதுநிதி செலவினம், பொது சுகாதாரம், ஊராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு பிரிவுகளின் முன்னேற்றம் குறித்து விவாதித்தல் அனைத்து கிராம அண்ணா மறுமலர்;ச்சி திட்டம் ஊட்டசத்து இயக்கம், தூய்மை பாரத இயக்கம், 2022 23ம் ஆண்டு ஊரக வேலை உறுதி திட்ட பணிகள் விவசாயிகளின் கடன் அட்டை உள்ளிட்ட சம்பந்தமாக விவாதிக்கப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் காவல்துறை ஆய்வாளர் மணிமாறன், ஊராட்சி பகுதிகள்pல் அனைத்து பகுதி மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு செயல்படுவோம் எந்த குற்றசம்பவங்கள் நடைபெறாத வகையில் தடுப்பதற்கு பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கூட்டத்தில் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரி, வேளாண்மை உதவி அலுவலர் மீனாட்சி, ஊரக குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திலகா, தமிழ்நாடு வாழந்து காட்டுவோம் திட்ட செயல் அலுவலர் ராதா, மீன்வளத்துறை சார்ந்த உதவி இயக்குநர் விஜயயோகேஸ்வரி, மீன்வளம் துறை அதிகாரி இந்துசாரா, வட்டார புள்ளியியல் ஆய்வாளர் மாரிச்செல்வி, மாப்பிள்ளையூரணி சுகாதார ஆய்வாளர் முகமது ஆசிக் அரபி, சுகாதார ஆய்வாளர் பிரதீப்குமார், கிராம நிர்வாக அலுவலர் விக்னேஷ், மாப்பிள்ளையூரணி ஆரம்ப சுகாதார உதவி மருத்துவர் வினோத், ஓன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஷ்பாலன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தமிழ்செல்வி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, சக்திவேல், மகேஸ்வரி காமராஜ், உமாமகேஸ்வரி தங்கபாண்டி, ஜீனத்பீவி, தங்கமாரிமுத்து, மாப்பிள்ளையூரணி கூட்டுறவு கடன்சங்க துணைத்தலைவர் சிவக்குமார், மாவட்ட சுற்றுச்சுழல் அணி செயலாளர் ரவி என்ற பொன்பாண்டி, வர்த்தக அணி துணைச்செயலாளர் கணேசன், சப் இன்ஸ்பெக்டர் மரியஇருதயம், மற்றும் கௌதம், உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.