முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அதிமுக ஆட்சியில் மக்களைபற்றி சிந்திக்காமல் அமைச்சர்கள் தங்களது நலனைபற்றி மட்டுமே சிந்தித்தார்கள். தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் குற்றச்சாட்டு

 ஷ்யாம் நீயூஸ்

30.05.2022

அதிமுக ஆட்சியில் மக்களைபற்றி சிந்திக்காமல் அமைச்சர்கள் தங்களது நலனைபற்றி மட்டுமே சிந்தித்தார்கள். தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் குற்றச்சாட்டு


 தூத்துக்குடி மாநகர திமுக சார்பில் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் சிதம்பரநகர் பேருந்துநிறுத்தம் அருகில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமையில் பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், நிர்மல்ராஜ், சுரேஷ்குமார், ரவீந்திரன், ராமகிருஷ்ணன், மேகநாதன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. 


கூட்டத்தில் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற போது 35ஆயிரம் வரை கொரோனா தொற்று இருந்தது. அவர் பொறுப்பேற்பதற்கு முன்பே அதிகாரிகளுடன் கட்டுபடுத்துவதற்கு  குறித்து ஆலோசனை நடத்தினார். ஓவ்வொரு முயற்சியாக மேற்கொண்டதில் 2வது அலை 3வது அலை அனைத்தையும் முறியடித்தார். எந்தனை அலை வந்தாலும் நாட்டுமக்களை காப்பாற்றுவார். முதல்வராக பொறுப்பேற்ற காலத்தில் நிதிபற்றாக்குறை கஜானா காலி என்ற நிலை இருந்தது. அதை மீட்டெடுப்பதற்கு எந்த செலவை குறைக்கலாம் கட்டுப்படுத்தலாம் என்பது குறித்து ஆய்வுகள் நடத்தி நெருக்கடி ஓரளவு குறைக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற பின்பு பல பணிகள் மாவட்ட அளவில் தான் நடைபெற்றது.


     தற்போது ஊராட்சி மற்றும் ஒன்றியங்களில் செய்ய வேண்டிய பணிகளுக்கு இந்த நிர்வாகத்தில் இருப்பவர்களே பணிகளை செய்வதற்கு மாநில அரசு நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெறுகிறது. முறைப்படி நடைபெறுகின்ற பணியை பொதுமக்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் வரவேற்று பாராட்டுகின்றனர். திமுக அரசு பொறுப்பேற்ற பின் அறநிலைத்துறை மூலம் 2500 கோடி மதிப்புள்ள கோவிலுக்கு சொந்தமான இடம் மீட்கப்பட்டுள்ளது. 81 கோவிலுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.  வரும் ஆண்டில் ஆயிரம் கோடி ஓதுக்கீடு செய்யப்பட்டு குடமுழுக்கு பணிகளுக்கு ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பூசாரிகளுக்கு மாத ஊதியம் உயர்த்தப்பட்;டுள்ளது.


     சமூக நலத்துறை மூலம் காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார். தமிழகம் முழுவதும் குழந்தைகள் கணக்கெடுப்பின் மூலம் 10 லட்சம் குழந்தைகள் சத்துக்குறைவு உள்ளது என கண்டறியபட்டு அதற்கு தேவையான ஊட்டச்சத்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. குழந்தை பருவம் தான் நல்ல ஆரோக்கியம் மூளை வளர்ச்சி அறிவுத்திறன் பெறும் காலம் கர்ப்பினி பெண்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கல்வி புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு 150 கோடி ஓதுக்கப்பட்டுள்ளது. டெல்லி மாதிரி பள்ளியின் தரம் உயர்த்த திட்டம் வகுக்கப்பட்டடுள்ளது. வேலை வாய்ப்பில் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் இங்கு வந்து தேர்வு எழுதி அரசு பணியில் சேர்வதை தடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு தமிழில் எழுத்து தேர்வு பெற்று வெற்றி பெற வேண்டும். தமிழர்களுக்கு மட்டும்  தான் இனி அரசு வேலை என்பதை முதலமைச்சர் உறுதி செய்துள்ளார். நம்முடைய தமிழ்மொழி தான் நமக்கு அடையாளம் அந்த மொழி அழிப்பதை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. தமிழ்மொழி செம்மொழி அந்தஸ்தை பெற்றுள்ளது. கடந்த 21ம் தேதி தமிழக இளைஞர்களுக்கு முதலமைச்சர் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் 5500 பணியிடங்களுக்கு 11 லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளார்கள். அரசு காலி இடங்கள் தொடர்ந்து நிரப்பப்பட்டு வருகின்றன. தொடர்ந்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.


     மாவட்டத்தில் 1100 ஏக்கரில் 1400 கோடி முதலீட்டில் பர்னிச்சர் பூங்கா அமைப்பதற்காக முதல்கட்ட பணியாக சாலை போடும் பணி நடைபெறுகிறது. மலேசியா சிங்கப்பூர் போன்ற இடங்களிலிருந்து இங்கு தொழில் தொடங்க தயாராகி வருகின்றனர். இதன்மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் நம்வீட்டு பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் அதே போல் நான் முதல்வன் திட்டத்தை முதல்வர் தொடங்கி தனியார் நிறுவனங்களில் அவர்களது நிறுவனத்திற்கேற்ப பணிகேற்றாற்போல் இளைஞர்களை ஊக்குவித்து திறனாய்வு மூலம் பணியமர்த்தும் திட்டம் தான் நான் முதல்வன் திட்டம் இதன்மூலமும் பலர் பணியாற்றி வருகின்றனர். அரசு பேருந்தில் இலவசமாக பயணம் செய்யும் பெண்களுக்கு மாதந்தோறும் 600 முதல் 1200 வரை மிச்சப்படுகிறது. இதனால் பெண்கள் மகிழ்ச்சியடைந்தனர். பொதுமக்களின் சிரமம் அறிந்து அறிவித்த திட்டம் முறையாக செயல்படுகிறதா என்பதையும் கலைஞரின் வழியில் ஆய்வு செய்து அதிலுள்ள குறைகளையும் தீர்ப்பதற்காக இரவு பகல் பாராமல் முதலமைச்சர் பணியாற்றுகிறார். இதுதான் திராவிட மாடல் ஆட்சி சமூக நிதி சமத்துவம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்.


     நரிக்குறவர்களுக்கு இருப்பிடம் இன்றி தவித்த நிலையில் திமுக ஆட்சி வந்த பின் வாக்களர் அடையாள அட்டை ரேசன்கார்டு வீட்டுமனை பட்டா தொழில் தொடங்க கடன் என அவர்களுக்கு வாழ்வாதரம் உயர்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாநில சுய ஆட்சிக்காக பல்வேறு பணிகளை முதல்வர் மேற்கொண்டு தமிழகத்தை தலை நிமிர செய்து வருகிறார். தமிழக முதல்வர் நம்பர் 1 என்று இருப்பதை விட தமிழ்நாடு எல்லாத்துறைகளிலும் நம்பர் 1 ஆக இருக்க வேண்டும் என்று பணியாற்றுகிறார். தமிழனின் கலாச்சாரம் பன்பாடு 3ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உள்ளது. தமிழக வீட்டுவசதி துறை மூலம் சொந்த இடம் வைத்திருப்பவர்களுக்கு 2லட்சத்து 10 ஆயிரம் கொடுத்தால் போதும் மாநில அரசும் ஒன்றிய அரசும் நிதியுதவி வழங்கி கான்கீரிட் வீடுகள் கட்டி தருகின்றனர். மாற்று திறனாளிகளுக்கு பல்வேறு திட்டங்கள் பெண்களுக்கு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தொழில்கடன், என பல்வேறு சலுகைகள் வழங்கி ஓய்வின்றி உழைத்து கொண்டிருக்கும் முதலமைச்சர் பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதற்கென்று தனி துறை ஓன்றை உருவாக்கி அதன் மூலம் பட்டா உள்ளிட்ட பல்வேறு குறைகள் தீர்க்கப்பட்டுள்ளது. பொருளாதார நிலையை உயர்த்த முதலமைச்சர் அமைத்துள்ள வல்லுநர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன.


      கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடவடிக்கை எடுக்காமல் இருந்த நிலையில் தற்போது அதன்மீதும்; நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, அப்படி நடைபெற்ற சம்பவங்களில் ஒன்று தான் விருதுநகர் சம்பவம் முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் பெண்களுக்கு எல்லா தொலை தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டு குற்றங்கள் குறைக்கப்பட்டு வருகின்றன நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாத எடப்பாடி பழனிச்சாமி சொன்னதையே திரும்ப திரும்ப சொல்கிறார். கடந்த 10 ஆண்டு காலம் அதிமுக ஆட்சியில் தமிழக வளர்ச்சிக்கென்று எந்த திட்டங்களும் செயல்படுத்தாமல் அமைச்சர்களின் நலன் மட்டுமே முக்கியம் என்று பணியாற்றினார்கள் திமுக ஆட்சியில் ஓராண்டு சாதனை அனைவரும் வரவேற்கும் வகையில் உள்ளது என்றார்.


          மாநில பேச்சாளர்கள் இளங்கோவன், இருதயராஜ், மாவட்ட துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, உள்பட பலர் பேசினார்கள்.


    கூட்டத்தில் மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் ரவீந்திரன், மாநகராட்சி மண்டலதலைவர்கள் அன்னலட்சுமி, பாலகுருசாமி, கலைச்செல்வி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் மதியழகன், மகளிர் அணி செயலாளர் கஸ்தூரிதங்கம், மகளிர் தொண்டரணி செயலாளர் உமாதேவி, தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் அபிராமிநாதன், சுற்றுச்சூழல் அணி செயலாளர் ஜெபசிங், மாவட்ட தொண்டரணி துணைச்செயலாளர் ராமர், மீனவரணி துணைச்செயலாளர் ஜேசையா, மாணவரணி துணைச்செயலாளர் சீனிவாசன், மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ், துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், மாநகர தொண்டரணி செயலாளர் முருகஇசக்கி, வக்கீல் அணி செயலாளர் சாமுவேல் ராஜேந்திரன்,  பொறியாளர் அணி துணைச்செயலாளர் உலகநாதன், ஆதிதிராவிட நல அணி துணைச்செயலாளர் பால்ராஜ், மாணவரணி துணைச்செயலாளர் பால்மாரி, மாநகர இளைஞர் அணி துணைச்செயலாளர் செல்வின், பகுதி துணைச்செயலாளர் பாலு, கவுன்சிலர்கள் விஜயகுமார், தெய்வேந்திரன், கந்தசாமி, கண்ணன், பொன்னப்பன், சரவணக்குமார், வைதேகி, அந்தோணிபிரகாஷ் மார்ஷல், ராஜேந்திரன், ரெக்ஸின், நாகேஸ்வரி, இசக்கிராஜா, வட்டச்செயலாளர்கள் பொன்னுச்சாமி, நாராயணன், வன்னியராஜ், பொன்ராஜ், ரவீந்திரன், சதிஷ்குமார், கீதாசெல்வமாரியப்பன், சாரதி, மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், கதிரேசன், அண்டன்பொன்சேகா, மாநகர மீனவரணி துணைச்செயலாளர் ஆர்தர் மச்சாது, வட்டப்பிரதிநிகள் சுப்பையா, பாஸ்கர், போல்பேட்டை பகுதி இளைஞர் அணி துணைச்செயலாளர் அல்பட் மற்றும் கருணா, மகேஸ்வரசிங்,  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...