தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்புதுக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றியஅலுவலகத்தில் நடைபெற்றது,ஒன்றியசோ்மன் அ.வசுமதி அம்பாசங்கா் தலைமை வகித்தார் யூனியன் ஆணையாளர் ராமராஜ்,வட்டாரவளர்ச்சி அலுவலர் நாகராஜன்,ஒன்றிய பொறியாளர் தளவாய்,உதவி பொறியாளர்கள் பல்வேறு அரசுத் துறையினர் முன்னிலை வகித்தனா், ஒன்றிய மேலாளர் மாசாணம் வரவேற்றார்,கூட்டத்தில் 27வகையான பொருட் குறிப்புகள் வாசிக்கப்பட்டது.
அப்போது ஒன்றிய சேர்மன் வசுமதி அம்பாசங்கர் பேசுகையில், தூத்துக்குடி ஒன்றியம் கோரம்பள்ளம் ஊராட்சி அன்னை சதுக்கம் குறுக்கு தெருவில் பேவர் பிளாக் சாலை அமைத்தல்,முள்ளக்காடு ஊராட்சி நேசமணி நகரில் ஒரு கீ.மீ தூரம் தார் சாலை அமைத்தல்,மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் சுகாதாரப் பணிகள் மேற்கொண்டது உட்பட வளா்ச்சி திட்டப்பணிகள் குறித்து பேசினார்.தொடர்ந்து கூட்டத்தில் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் கவுன்சிலா்இரா.அந்தோணிதனுஸ்பாலன் எழுப்பிய கேள்விகளுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜன் மற்றும் அதிகாரிகள் பதில் அளித்தனர்,கூட்டத்தில் கவுன்சிலா்கள் ஆனந்தி,முத்துமாலை,ஜெயகணபதி.மாியசெல்வி,முத்துலெட்சுமி,செல்வபாா்வதி,முத்துக்குமாா்,நா்மதா,ஆஸ்கா்,சுதா்சன்,மற்றும் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவா்கள்,மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்,