ஷ்யாம் நீயூஸ்
13.05.2022
திமுக எம்எல்ஏ சண்முகையா நடவடிக்கை தூத்துக்குடி சார் பதிவாளர் பணிநீக்கம் செய்ய பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட தெற்கு சிலுக்கபட்டி, வடக்கு சிலுக்கன்பட்டி கிராமத்தை சுற்றி வீட்டு மனை மற்றும் விவசாய நிலம் சுமார் 2,200 ஏக்கர் தனிநபருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்த நிலையில் நேற்று தெற்கு சிலுக்கன்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர் இதனைத்தொடர்ந்து இச்சம்பவத்தைக் கேள்விப்பட்ட ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா விபரத்தை அறிந்து மாவட்ட பதிவாளரை தொடர்பு கொண்டு விசாரணை நடத்தினார் விசாரணையில் தவறு நடந்திருப்பது கண்டறியப்பட்டது இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி புதுக்கோட்டை சார்பதிவாளர் மோகன்தாஸ் தற்காலிக பணி நக்கம் செய்யப்பட்டுள்ளார் மற்றும் தனிநபருக்கு 2,200 ஏக்கர் பவர் பதிவு செய்ததை செல்லாது என்று ஆணை வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது இன்று முதல் புதுக்கோட்டைக்கு புதிய சார்பதிவாளர் பணிக்குபுதியவர் நியமிக்கபடுவார் என தெரிகிறது.