தூத்துக்குடி மாவட்ட மருத்துவர் மற்றும் முடிதிருத்துவோர் சங்கம் சார்பில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி யிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது!
ஷ்யாம் நீயூஸ்
21.06.2032
தூத்துக்குடி மாவட்ட மருத்துவர் மற்றும் முடிதிருத்துவோர் சங்கம் சார்பில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி யிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது!
தூத்துக்குடி மாவட்ட மருத்துவர் மற்றும் முடி திருத்துவோர் சங்க நிர்வாகிகள் கூட்டம் எட்டயபுரம் சாலையில் அமைந்துள்ள CITU அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
இந்தக் கூட்டம் சங்க கௌரவத் தலைவர் K. சதாசிவன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு CITU மாநில செயலாளர் ரசல் சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் நிர்வாகிகள் சார்பில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானங்கள் 1.)முடிதிருத்தும் நிலையங்களுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்கிட வேண்டும் . 2.)தூத்துக்குடி மாநகராட்சியில் கடைகளுக்கு தொழில் வரி 500 என்று இருப்பதை 200 ஆக குறைப்பது அபராத தொகை ரத்து செய்யக் கோரியும் 3.)முடிதிருத்தும் தொழிலாளர்க்கு தொழில் உபகரணங்கள் நல வாரியம் மூலமாக உடனடியாக வழங்கிடவும் 4.) முடிதிருத்துவோர் குடும்ப சூழல் கருதி ( கடை வாடகை ) வீட்டு வாடகை குழந்தைகள் படிப்பு , வீட்டுமனைப் பட்டா கொடுக்க கோரியும் 5.) சங்க உறுப்பினர்களை வாரியத்தில் உடனடியாக பதிவு செய்திடவும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .
நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் S. நாகராஜ் . பொருளாளர்
K. வேல்முருகன் , துணைத்தலைவர் ஞானசேகர் தலைவர் S.டென்சிங் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்ட மருத்துவர் மற்றும் முடிதிருத்துவோர் சங்கம் சார்பில் கடந்த வாரம்
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட சுமார் 1000 முடி திருத்துவோர் கடைகளுக்கு உரிமம் வழங்கும் கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டி தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் கடை திறக்க முடியாமல் இரண்டு ஆண்டுகளாக இன்னல்களுக்கு ஆளான எங்கள் குடும்பத்தினருக்கு ஒரு மாதத்திற்கு தேவையான உணவுப் பொருட்களை சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் வழங்கி உதவினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இயல்பு நிலை திரும்பிய போதிலும் எங்கள் தொழில் முன்புபோல் சரிவர நடைபெறவில்லை ஆகையால் முடிதிருத்தும் தொழிலாளர்கள் குடும்பம் மிக வறுமையில் இருப்பதால்
முடி திருத்துவோர்
கடைகளுக்கு உரிமம் வழங்கும் கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டி கோரிக்கை மேயரிடம் முன்வைக்கப்பட்டது . இந்தக் கோரிக்கையை பரிசீலிப்பதாக மேயர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நேற்று தூத்துக்குடி மாவட்ட மருத்துவர் மற்றும் முடிதிருத்துவோர் சங்கம் கூட்டத்தில் முக்கியமான 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானங்கள் அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் நிலையில் அவர்களுக்கு அரசு வீட்டுமனை பட்டா மற்றும் போதிய உதவிகள் செய்யும் என அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது .