ஷ்யாம் நீயூஸ்
15.05.2022
தூய்மை சுகாதாரம் பசுமை வளர்ச்சி தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அதிரடி நடவடிக்கை
தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பெரியசாமி பதவியேற்கும் போது இந்த பொறுப்பை எனக்கு வழங்கிய முதலமைச்சர் தளபதிக்கும் கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன், ஆகியோருக்கும் நன்றியை தெரிவித்து கடந்த காலத்தில் நகர்மன்ற தலைவராக பணியாற்றிய தனது தந்தை பெரியசாமி பணிகளையும் நினைவில் கொண்டு பொறுப்பேற்றுக் கொண்ட நாள் முதல் மாநகரின் வளர்ச்சிக்கு அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் செந்தில்ராஜ், ஆணையர் சாருஸ்ரீ, ஆகியோருடன் பல்வேறு ஆலோசனைகளை பெற்று அதிகாரிகள் ஊழியர்கள் அரவணைத்து மாநகரில் உள்ள 60 வார்டு பகுதிகளிலும் மக்களின் குறைகளை தீர்ப்பதற்கு குறைதீர்க்கும் வாட்சப் எண்கள் பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்டு அதன் மூலம வரும் புகார்கள் குறைகள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் பணியாளர்களுக்கு உத்தரவு இடப்பட்டு தனது அழைபேசிக்கும் வரும் புகார்கள் குறைகள் குறித்து தனது உதவியாளர்களிடம் தகவல்கொடுக்கப்பட்டு நேரடியாக பல இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொள்வது மட்டுமின்றி பொதுமக்களின் நலன் மட்டுமே முக்கியம் என்று சுயநலமின்றி பொது நலத்தோடு பணியாற்றி வரும் சூழ்நிலையில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளையும் நல்ல முறையில் செய்திட வேண்டும் என்று ஓப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வளர்ச்சிக்கு வேண்டிய பல கட்டமைப்புகளையும் ஓவ்வொரு பகுதிகளிலும் உருவாக்குவது குறித்து கவுன்சிலர்களிடமும் கருத்துகளை கேட்கப்பட்டு அதற்கான பணிகளை மேற்கொண்டு வரும் சூழ்நிலையில் மாசு இல்லாத தூய்மையான சுகாதாரமான மாநகராட்சியை உருவாக்குவதற்கு திட்டங்கள் தீட்டப்பட்டு தனது வார்டு பகுதி உள்பட பல இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு மாசு இல்லாத மாநகராட்சியை உருவாக்குவதற்கு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி தூய்மையை கடைபிடிக்க வேண்டும் என்று அனைத்து மாநகராட்சிக்கு உத்தரவு பிறப்பித்ததையடுத்து மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை தோறும் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட பொதுமக்கள் கூடும் பூங்கா, மற்றும் பல்வேறு இடங்களில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மாநகராட்சி தூய்மை பணிகளை செய்து வருகின்றனர். இதற்கிடையில் மூன்றாவது சனிக்கிழமைகளில் ஒவ்வொரு வார்டுக்குட்பட்ட பகுதிகளில் தூய்மை பணிகளை மேற்கொள்ள உள்ளனர். மாநகராட்சி பகுதிகளில் அமைந்துள்ள பயணிகள் நிழற்குடை பகுதிகளிலும் தூய்மை சுகாதாரம் பணிகளையும் மாநகராட்சி செய்து வருகிறது. மாநகரம் முழுவதும் மாசு இல்லாத தூய்மையான சுகாதாரமான நிலையை உருவாக்குவதற்கு அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வரும் மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்களின் போக்குவரத்து நெரிசல்களை குறைப்பதற்கும் புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டு ஆரம்ப கட்;ட பணிகள் நடைபெற்று வருகின்றன எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையுடன் சீறிய முயற்சியுடன் மாநகாட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. 2023க்குள் தூத்துக்குடி மாநகராட்சி பகுதி முழுவதும் புதிய பொலிவுடன் அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கும் வகையில் ஜொலிக்க உள்ளன. மக்கள் சேவையே தனக்கு முக்கியம் என கருதி திமுக பொதுக்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி பணியாற்றி வருகிறார்.