வடக்கு மாவட்டம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கருணாநிதி பிறந்தநாளை கொண்டாட வேண்டும் அமைச்சர் கீதாஜீவன் வேண்டுகோள்.
ஷ்யாம் நீயூஸ்
30.05.2022
வடக்கு மாவட்டம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கருணாநிதி பிறந்தநாளை கொண்டாட வேண்டும் அமைச்சர் கீதாஜீவன் வேண்டுகோள்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் எட்டையாபுரம் சாலையி;ல் உள்ள கலைஞர் அரங்கில் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமையில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் கடந்த திமுக ஆட்சியில் முதலமைச்சராக இருந்து கருணாநிதி புதிய தலைமை செயலகத்தை தனது நேரடி பார்வையில் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து கட்டினார். அப்குதியில் பெரியார், அண்ணா, சிலைகளுக்கு மத்தியில் இரண்டு தினங்களுக்கு முன்பு முழு உருவ வெண்கல சிலை முதலமைச்சர் ஸ்டாலின் நேரடி பார்வையில் உருவாக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது வரும் 3ம் தேதி கருணாநிதி பிறந்தநாளை வடக்கு மாவட்டம் முழுவதும் சிறப்பாக நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். திமுக கழகத்தை தோற்றுவித்த அண்ணா மறைவுக்குபின் அவர் வழி தொட்டு இயக்கத்தை கட்டிக்காத்தவர் கலைஞர். இயக்கத்திற்கு பல்வேறு சோதனைகள் வந்தபோது எல்லாம் அதை தகர்த்தெறிந்தவர் 13 முறை சட்டமன்றத்திற்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற தலைவர்5 முறை தமிழகத்தில் முதலமைச்சராக பணியாற்றி பல்வேறு திட்டங்களை தந்து தமிழ்நாட்டை உலக அரங்கில் உயர்த்தி காட்டியவர் பல ஜனாதிபதிகளையும் பிரதமர்களையும் உருவாக்கி அழகு பார்த்தவர். சமூகநிதி சமச்சீரான வளர்ச்சி சமஉரிமை இவற்றை அடித்தளமாக கொண்டு திராவிட மாடல் ஆட்சியை நடத்தியவரும் தமிழக மக்களுக்காகவும் தமிழ் மொழிக்காவும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காவும் அல்லும் பகலும் அயராது தனது இறுதிகாலம் வரை உழைத்த கலைஞர் 99வது பிறந்தநாளை முன்னிட்டு இந்தியாவின நம்1 முதலமைச்சரும் ஒராண்டில் நூறாண்டு சாதனை புரிந்து சரித்திரம் போற்றும் முதல்வர் ஸ்டாலின் சென்னை ஓமந்தூர் அரசின் தோட்டத்தில் முழுவுருவ வெண்கல சிலை அமைத்து அதனை இந்திய குடியரசு துணைத்தலைவர் வெங்கைய நாயுடு திருக்கரங்களால் திறந்து வைக்கப்பட்டு கலைஞர் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்த தளபதியாருக்கு நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்வது என வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட மாநகர நகர ஒன்றிய பகுதி வார்டு மற்றும் கிளைக்கழகங்கள் தோறும் கலைஞர் படத்தை வைத்து அஞ்சலி செலுத்தியும் திமுக கொடியேற்றியும் இனிப்புகள் வழங்கியும் கழக கொள்கை பாடல்களை ஓலிப்பரப்பி ஏழை எளியோர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கி உற்சாகமாக கொண்டாட வேண்டும மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து முதியோர்கள் அனாதைகள் இல்லங்களுக்கு உணவகள் வழங்கி மருத்துவமணையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், ஏஞ்சலா, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர துணைச்செயலாளரகள்; கீதாமுருகேசன், கனகராஜ், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், மாவட்ட மாணவரணி துணைச் செயலாளரும் மாநகராட்சி மண்டல தலைவருமான வக்கீல் பாலகுருசாமி, மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ரமேஷ், துணை அமைப்பாளர் ராமர், பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், சுற்றுச்சுழல் அணி அமைப்பாளர் ஜெபசிங், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் சித்திரை செல்வன், நெசவாளர் அணி அமைப்பாளர் சங்கரநாராயணன், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் உமாதேவி, மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் கலைச்செல்வி, நிர்மல்ராஜ், மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் மோகன்தாஸ் சாமுவேல், ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் பரமசிவம், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், சுரேஷ்குமார், ரவீந்திரன், ராமகிருஷ்ணன், ஓன்றிய செயலாளர்கள் முருகேசன், காசிவிஸ்வநாதன், சின்னமாரிமுத்து, வசந்தம் ஜெயக்குமார், செல்வராஜ், மும்மூர்த்தி, நவநீதிகண்ணன், சின்னபாண்டி, தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, ராஜா, கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, கவுன்சிலர்கள் வைதேகி, சரவணக்குமார், பொன்னப்பன், கண்ணன், ராமர், இசக்கிராஜா, ஜாக்குலின் ஜெயா, ஜான்சிராணி, தெய்வேந்திரன், விஜயகுமார், கந்தசாமி, முத்துவேல், உள்பட பலர் கலந்து கொண்டனர்.