தூத்துக்குடி எம்.ஜி.ஆர் பூங்கா ராஜாஜி பூங்கா திரேஸ்புரம் பகுதியில் தூய்மை பணி அமைச்சர் கலெக்டர் மேயர் ஆணையர் துவக்கி வைத்தனர்.
ஷ்யாம் நீயூஸ்
14.05.2022
தூத்துக்குடி எம்.ஜி.ஆர் பூங்கா ராஜாஜி பூங்கா திரேஸ்புரம் பகுதியில் தூய்மை பணி அமைச்சர் கலெக்டர் மேயர் ஆணையர் துவக்கி வைத்தனர்.
தூத்துக்குடி தமிழக அரசின் ஆணைக்கிணங்க மாதத்தின் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமை தோறும் பொதுமக்கள் மற்றும் தன்னார்வ நிறுவனங்களுடன் இணைந்து தூய்மை பணியை நிறைவேற்றும் விதமாகவும் பொதுமக்கள் மற்றும் இளம் தலைமுறையினருக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் தமிழ்சாலையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் பூங்காவில் தூய்மை படுத்தும் பணிகளையும் தேசிய தூய்மை காற்று திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை பணிக்காக வாங்கப்பட்டுள்ள நான்கு டாடா ஏசி வாகனங்களையும் கொடியசைத்து சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் சாரூஸ்ரீ ஆகியோர் துவக்கி வைத்து பொதுமக்கள் வர்த்தக நிறுவனங்கள் தன்னார்வலர்கள் தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை ஓருங்கிணைந்து நடைபெற்ற தூய்மை பணிகளை பார்வையிட்டனர்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், காந்திமதி, பிரின்ஸ், (திட்டம்) ரங்கநாதன் உதவி ஆணையர்கள் சேகர், ராமசந்திரன், மாநகராட்சி நகர்நல அலுவலர் அருண்குமார், சுகாதார துறை அதிகாரி ஸ்டாலின் பாக்கியநாதன், மாநகராட்சி மண்டல தலைவர் நிர்மல்ராஜ், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட இலக்கிய அணி துணைச்செயலாளர் நலம் ராஜேந்திரன், பகுதி செயலாளர் ரவீந்திரன், ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன், கவுன்சிலர்கள் சுரேஷ்குமார், பொன்னப்பன், கந்தசாமி, ஜான், பவாணி மார்ஷல்,
திமுக வட்டச்செயலாளர் பொன்னுச்சாமி, வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கர், குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீரபாண்டியன், தாசில்தார் செல்வகுமார், மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி, போல்பேட்டை பகுதி இளைஞர் அணி துணைச்செயலாளர் அல்பட், மற்றும் மணி, ஜோஸ்பர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களிடம் கூறுகையில் தமிழகம் முழுவதும் தூய்மை பணியை மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்திரவிற்கிணங்க தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி பகுதியில் இது போன்ற பணிகள் நடைபெறுகிறது. தூத்துக்குடி மாநகர மக்கள் தூய்மையாகவும் சுகாதாரமான முறையில் வாழ்வதற்கும் மாநகராட்சி மூலம் இப்பணி நடைபெறுகிறது. அரசின் நோக்கம் எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும் தூய்மையை கடைபிடிக்க வேண்டும். சுகாதாரத்தையும் பேண வேண்டும். என்பது தான் நோக்கம் என்றார். பின்னர் ராஜாஜி பூங்கா, திரேஸ்புரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் தூய்மை பணிகளை பார்வையிட்டனர்.