மாநகர பகுதியில் குடியிருப்பவர்கள் இணையதளம் மூலம் கருத்துக்களை பதிவு செய்யலாம். உள்பட 39 தீர்மானங்கள் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நிறைவேறியது.
ஷ்யாம் நீயூஸ்
30.05.2022
மாநகர பகுதியில் குடியிருப்பவர்கள் இணையதளம் மூலம் கருத்துக்களை பதிவு செய்யலாம். உள்பட 39 தீர்மானங்கள் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நிறைவேறியது.
தூத்துக்குடி மாநகராட்சி அவரச கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் துணை மேயர் ஜெனிட்டா, ஆணையர் சாருஸ்ரீ, முன்னிலையில் தொடங்கிய கூட்டத்தில் அதிமுகவை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் வக்கீல் வீரபாகு, வெற்றிச்செல்வன், வக்கீல் மந்திரமூர்த்தி, முன்இருக்கையில் அமர்ந்து கொண்டனர். அகர வரிசை படி உறுப்பினர்களுக்கு இருப்பிடம் ஓதுக்கப்பட்டுள்ளது. மண்டல தலைவர்கள் 4 பேர் முன்வரிசையில் இடமளிக்கப்பட்டுள்ளது. ஆகவே உங்களுக்குரிய இடத்தில் அமரும்படி மேயர் ஜெகன் பெரியசாமி கேட்டுக்கொண்டார். அதன்படி அவர்களது இடத்திற்கு சென்றனர். பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி மாநகராட்சி நகர் நல அலுவலர் மூலம் ஹோலிகிராஸ் பள்ளி அருகிலிருந்த ஆரம்ப சுகாதார மையம், சத்திரம் பகுதியில் மாற்றப்பட இருந்ததை மீண்டும் பழைய இடத்திலேயே அமைப்பதற்கும் சிவந்தாகுளம் சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அதிகம் இருப்பதால் கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு எதிரில் உள்ள உப்பு இலாக்காவிற்கு சொந்தமான மத்திய அரசு இடத்தை கனிமொழி எம்.பி மூலம் 10 ஏக்கர் கேட்டு பெற்றுக்கொள்வது வீட்டுத்தீர்வை சம்மந்தமாக வெப்சைட் இணையதளம் ஆரம்பிக்கப்பிக்கப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள் கருத்துகளை பதிவு செய்து கொள்ளலாம். மாநகராட்சி பகுதியில் 60வது வார்டுகளிலும் உள்ள கழிவு நீர் கால்வாய்கள் முழுமையாக சீரமைத்து மழைநீர் தேங்காதபடி பயன்பாட்டிற்கு கொண்டு வருதல் தீர்மானத்தை கொண்டு வந்தார். பின்னர் கூட்ட அரங்கில் மேயர் உதவியாளர் ரமேஷ், 35 தீர்மானங்களை வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், காந்திமதி, பிரின்ஸ், உதவி ஆணையர் சேகர், ராமசந்திரன், மண்டல தலைவர்கள் அன்னலட்சுமி கோட்டுராஜா, கலைச்செல்வி திலகராஜ், நிர்மல்ராஜ், பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், சுகாதரகுழு தலைவர் சுரேஷ்குமார், கல்விக்குழு தலைவர் அதிஷ்டமணி, நகர அமைப்பு குழு தலைவர் ராமகிருஷ்ணன், மற்றும் கவுன்சிலர்கள் சரண்யா, பேபி ஏஞ்சலின், ரெங்கசாமி, கண்ணன், விஜயலட்சுமி, ரெக்ஸ்லின், தனலட்சுமி, சரவணக்குமார், ஜாக்குலின் ஜெயா, மெட்டில்டா, அந்தோணி பிரகாஷ் மார்ஷல், இசக்கிராஜா, கந்தசாமி, பொன்னப்பன், ராமர், மரியகீதா, மகேஷ்வரி, சந்திரபோஸ், எடின்டா, கற்பககனி, மும்தாஜ். ராமுத்தம்மாள், ராஜேந்திரன், விஜயகுமார், பாப்பாத்தி, வைதேகி, முத்துமாரி, பவாணி மார்ஷல், கனகராஜ், முத்துவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.