பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து காங்கிரஸ் அறப்போராட்டம். ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.
ஷ்யாம் நீயூஸ்
19.05.2022
பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து காங்கிரஸ் அறப்போராட்டம். ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராஜீவ்காந்தி கொலையாளி பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து காங்கிரஸ் அறப்போராட்டம். ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ராஜீவ்காந்தி படுகொலை செய்த குற்றவாளிகள் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வன்முறையை எதிர்ப்போம் என்ற தலைப்பில் வாயில் வெள்ளைத்துணி கட்டி பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற அறவழி போராட்டத்திற்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் சண்முகம், முன்னாள் எம்.எல்.ஏக்கள் சுடலையாண்டி, டேனியல்ராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் போராட்டத்தை தொடங்கி வைத்தார்..
போராட்டத்தில் மாநில இளைஞர் காங்கிரஸ் செயலாளர் நடேஷ்குமார், மாநில செயலாளர் சிந்தியா வைலட், மண்டலத் தலைவர்கள் ஐசன்சில்வா, சேகர், செந்தூர்பாண்டி,; மாநகர துணைத்தலைவர்கள் பிரபாகரன், அருணாச்சலம், ஜெயராஜ், மாநகர செயலாளர்கள் கதிர்வேல், மரிய செல்வராஜ், பொதுச்செயலாளர்கள் கோபால், மைக்கேல், ஐஎன்டியுசி தொழிற்சங்க தலைவர் ராஜு,வழக்கறிஞர் பிரிவு தலைவர் பர்னபாஸ், கவுன்சிலர் சந்திரபோஸ், முன்னாள் கவுன்சிலர்கள் கந்தசாமி, கனியம்மாள், சாமுவேல் ஞானதுரை, ராதாகிருஷ்ணன், மண்டல மகளிர் காங்கிரஸ் தலைவர் சாந்தி, வார்டு தலைவர்கள் தனுஷ், முத்துராஜ், மைக்கேல் பிரபாகர், தெற்கு மாவட்ட செயலாளர் சந்தனகுமார், தெற்கு மாவட்ட பொருளாளர் காங்கிரஸ் எடிசன், வட்டராத் தலைவர்கள் நல்லக்கன்னு, தாசன், சுந்தன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் இசைசங்கர், முன்னாள் தலைவர் ஜெயசீலன், மாநகர் இளைஞர் காங்கிரஸ் தலைவர் திலகேஷ், ஊடகப்பிரிவு மாநில செயலாளர் முத்துமணி, தொழிலாளர் நல யூனியன் பிரிவு தலைவர் சிவராஜ் மோகன், மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவர் பிரவீன், ஸ்ரீவைகுண்டம் நகர தலைவர் கருப்பசாமி, இலக்கிய அணி மாவட்ட தலைவர் சித்தார்த்தன், பொதுச்செயலாளர் சிவகளை பிச்சையா, மாவட்ட வக்கீல் பிரிவு பாலசுப்பிரமணி, ஸ்ரீவைகுண்டம் கிழக்கு வட்டார மகளிர் அணி தலைவர் மீனா, வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல ஐயம்பெருமாள், மதி, சுல்தான், கருங்குளம் மாரிச்செல்வம், ஹரிதாஸ், நயினார், மாரியப்பன், செல்வம், பாரதி, முத்துகிருஷ்ணன், மகாராஜா, ராமர், உஸ்மான், ஜேசுவா, வெள்ளச்சாமி, பெத்துகணேசன், கனகராஜா, ராஜன், உள்பட 300க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.