ஷ்யாம் நீயூஸ்
15.05.2022
ஏபிசி மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி ஏபிசி மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் செஞ்சுருள் சங்கம் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அணி எண் 47 மற்றும் 57 சார்பாக ஓரு நாள் மருத்துவ முகாம் நடைபெற்றது. செஞ்சுருள் சங்கத்திட்ட அலுவலர் பேராசிரியர் வசந்த சேனா வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் மீனாகுமாரி வாழ்த்துரை வணங்கினார்.
நிகழ்ச்சியில் மருத்துவ துறை சுகாதார துணை இயக்குநர் பொற்செல்வன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்லீரல் ஓவ்வாமை நோயின் தன்மைகளையும் குணமாக்கும் வழிமுறைகளையும் மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். மாநகர நகர் நல அதிகாரி அருண்குமார், சுகாதாரம் முக்கியத்துவத்தை குறித்து எடுத்துரைத்தார். தொழில்நுட்ப அதிகாரி மதுரம் பிரைட்டன் ரத்ததானத்தில் முக்கியத்துவத்தையும் டாக்டர் வேனுகா புகையிலை பயன்படுத்துவதால் தீய விளைவுகளை பற்றி மாணவிகளுக்கு எடுத்துக் கூறினார்கள்.
முகாமில் 210 பேருக்கு நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் ஆசிரியர் அல்லாத அலுவலர்களுக்கு இரத்த அனுக்களில் எண்ணிக்கை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. தூத்துக்குடி மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ஹரிகணேஷ், டாக்டர் கார்த்திக், மருத்துவ குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செஞ்சுருள் சங்க திட்ட அலுவலர் வசந்தசேனா, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கோகிலா, சுபத்ரா, கிறிஸ்டி, ஆகியோர் செய்திருந்தனர்.