தூத்துக்குடியில் உலக உயர்ரத்த அழுத்த தினத்தை முன்னிட்டு கனிமொழி எம்.பி. அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் சாருஸ்ரீ நடைபயிற்சி மேற்கொண்டனர்.
ஷ்யாம் நீயூஸ்
17.05.2022
தூத்துக்குடியில் உலக உயர் ரத்த அழுத்த தினத்தை முன்னிட்டு கனிமொழி எம்.பி. அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் சாருஸ்ரீ நடைபயிற்சி மேற்கொண்டனர்.
தூத்துக்குடி உலக அளவில் உலக உயர் ரத்த அழுத்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் கடற்சாலை ரோச் பூங்கா முன்பு மாநகராட்சி சுகாதாரதுறை மூலம் நடைபெற்ற உயர்ரத்த அழுத்த பரிசோதனை முகாமை கனிமொழி எம்.பி., சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ ஆகியோர் தொடங்கி வைத்து விழிப்புணர்வு நடைபயிச்சியை கொடியசைத்து துவக்கி வைத்து படகு குழாம் வரை விழிப்புணர்வு நடைபயிற்சியை மேற்கொண்டனர்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ், (திட்டம்) ரங்கநாதன் உதவி ஆணையர்கள் சேகர், ராமசந்திரன், மாநகராட்சி நகர்நல அலுவலர் அருண்குமார், சுகாதார துறை அதிகாரி ஸ்டாலின் பாக்கியநாதன், மாநகராட்சி மண்டல தலைவர் நிர்மல்ராஜ், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் ரமேஷ், மகளிர் அணி செயலாளர் கஸ்தூரிதங்கம், மாநகர செயலாளர் ஜெயக்கனி, அரசு வக்கீல் மோகன்தாஸ் சாமுவேல், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணைச்செயலாளர் அந்தோணி கண்ணன், மாவட்ட பிரதிநிதி சக்திவேல், பகுதி செயலாளர்கள் மேகநாதன், ஜெயக்குமார், கவுன்சிலர்கள் கீதா முருகேசன், கனகராஜ், சுரேஷ்குமார், பொன்னப்பன், ஜான், வைதேகி, சரவணக்குமார், சந்திரபோஸ், விஜயகுமார், அந்தோணி பிரகாஷ் மார்ஷல், இசக்கிராஜா, பேபி ஏஞ்சலின், திமுக வட்டச்செயலாளர்கள் பொன்னுச்சாமி, பொன்ராஜ், சுரேஷ், வட்டப்பிரதிநிதி பாஸ்கர், பகுதி இளைஞர் அணி செயலாளர் சூர்யா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீரபாண்டியன், தாசில்தார் செல்வகுமார், மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி, போல்பேட்டை பகுதி இளைஞர் அணி துணைச்செயலாளர் அல்பட், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், லிங்கராஜா, மற்றும் மணி, ஜோஸ்பர், ஜோதிடர் முருகன், மகேஸ்வரசிங், முன்னாள் கவுன்சிலர்கள் செந்தில்குமார், ஜெயசிங், சுகாதார துறை மண்டல அலுவலர்கள் ராஜசேகர், ஹரிகணேஷ், கோட்டாச்சியர் சிவசுப்பிரமணியன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதற்கான சிறப்பு ஏற்பாடாக மாவட்டம் முழுவதும் 450 மருத்துவ பணியாளர்களை கொண்டு 752 நடமாடும் முகாம்கள் மூலமாக அனைத்து அரசு அலுவலகங்களிலும் ரத்த அழுத்த பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளது இந்த வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். என்று கலெக்டர் செந்தில்ராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.