ஷ்யாம் நீயூஸ்
28.05.2022
இந்தியாவின் முதல் பிரதமரான நேருவின் இறந்த நாளான நேற்று தூத்துக்குடி காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் சார்பில் நேருவின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் மாநில தலைவர் டாக்டர் புவனேஸ்வரி நஞ்சப்பன் அறிவுறுத்தலின் படியும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி S. அமிர்த ராஜ் ஆலோசனை படியும் நேற்று 27.05.2022 காலை இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு நினைவு நாள் தினத்தைமுன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் அலுவலகம் முன்பு தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஆடிட்டர் சிவ் ராஜ் மோகன் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. TC TU நிர்வாகிகள் அருண் தேவராஜ்.ராஜப்பா, ஊடக பிரிவு சுந்தர்ராஜ் மற்றும் பல காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.