ஷ்யாம் நீயூஸ்
06.05.2022
தூத்துக்குடி சண்முகபுரம் புதிய கட்டுமான பணியை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ பல்வேறு பணிகள் குறிப்பாக சாலை கால்வாய் புதிய கட்டுமான பணிகள் என பல்வேறு பணிகள் மாநகராட்சி முழுவதும் நடைபெற்று வருகின்றன. அதில் கான்வென்;ட் பள்ளி அருகில் ஆரம்பசுகாதார நிலையம் மற்றும் மகப்பேறு தாய் சேய் நல மையம் பழைய மாநகராட்சி அலுவலகத்திற்கு மாற்றப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இதனை மீண்டும் இப்பகுதியில் அமைத்திட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டத்தையடுத்து புதிய கட்டிடம் கட்டுவதற்கு சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன்பெரியசாமி ஆகியோர் கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஓதுக்கீடு செய்திருந்த நிலையில் இப்பகுதி மக்கள் கட்டுமாண பணிகள் விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். என்று மேயரிடம் தெரிவித்ததையடுத்து திமுக பொதுக்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டு ஓப்பந்ததாரர்களிடம் நல்லமுறையில் பணிகளை செய்து விரைவாக பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு ஓத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அதேபோல் அப்பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த மாநகராட்சி வரி வீட்டுத்தீர்வை, குடிநீர் கட்டணம் உள்ளிட்டவைகளை செலுத்தும் அலுவலகம் செயல்பட்டுவந்தன. அது பழுதடைந்து இடியும் நிலையில் இருந்ததால் மாற்று ஏற்பாடு செய்து புதிய கட்டிடம் கட்டி தரவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டதையடுத்து அப்பகுதியில் இயங்கி வந்த அலுவலக பணிகள் சந்தை ரோட்டிலுள்ள அலுவலகத்தில் கூடுதலாக இயங்கி வருகிறது. அதையும் விரைவாக இந்த பகுதியில் அமைத்திட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆய்வின் போது துணை மேயர் ஜெனிட்டா, உதவி செயற்பொறியாளர் சரவணன், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மற்றும் பிரபாகர், ஜோஸ்பர் உடனிருந்தனர்.