ஷ்யாம் நீயூஸ்
23.05.2022
மாப்பிள்ளையூரணியில் வேளாண்மை வளர்ச்சி திட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கானொலி மூலம் பேசினார்
தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் கலைஞரின் அனைத்து கிராம ஓருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் தமிழகம் முழுவதும் 2021 2022ம் ஆண்டு, 1997 கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்திட அத்திட்டத்தை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கானொலி காட்சி வாயிலாக பேசினார். தூத்துக்குடி மாவட்டத்தில் 48 கிராம பஞ்சயாத்துகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. மாவட்ட அளவிலான துவக்க விழா நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள 48 கிராம பஞ்சாயத்துகளில் 35 தரிசு நிலத்தொகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் முக்கிய நோக்கமானது கிராம பஞ்சாயத்துகளில் உள்ள தரிசு நிலங்களை தேர்வு செய்து தரிசு நில தொகுப்புகள் உருவாக்கப்பட்டு தரிசு நிலங்களை சாகுப்படிக்கு கொண்டு வருதல் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்ற தேவையான நீர்வள ஆதாரங்களான ஆழ்துளைக் கிணறு அமைத்தல் ஆழ்துளைக் கிணறுகளுக்கு சோலார் பம்பு செட்டுகள் அல்லது மின் மோட்டார் மூலம் மின் இணைப்பு கொடுத்து நுண்ணிர் பாசன முறைகளை கடைபிடித்தல் பயிரை தேர்வு செய்து சாகுபடி செய்திட தொழில்நுட்பங்களை அளித்து வேளாண் விளைபொருட்களை சந்தைப்படுத்துதல் மற்றும் மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துதல் கால்நடைகளில் நலன் காத்து பால் உற்பத்தியை பெருக்குதல் வருவாய்துறையின் மூலம் புதிய பட்டா வழங்குதல் பட்டா மாறுதல் வழங்குதல் கூட்டுறவு சங்கங்கள் மூலம் அதிக அளவு பயிர் கடன் வழங்குதல் கால்வாய் பாசன நீர்வழித் தடங்களை தூர் வாருதல் போன்ற பணிகள் நடைபெறவுள்ளன. மாப்பிள்ளையூரணியில் நடைபெற்ற கானொலி காட்சி நிகழ்ச்சியில் விவசாயிகள் கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்துக்களை கேட்டறிந்தனர். அவருடன் வேளாண் உழவர்நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமை செயலாளர் இறையன்பு, மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
பின்னர் வேளாண்மை துறை மூலம் விவசாயத்திற்கு தேவையான உரம் விதைகள் பூச்சி மருந்துகள் கைதெளிப்பான் கருவிகள், தென்னங்கன்று உள்ளிட்ட இடு பொருட்களை ஊராட்சி மன்ற தலைவரும் நகர கூட்டுறவு கடன் சங்க தலைவருமான சரவணக்குமார் வழங்கி பின்னர் அப்பகுதியில் மரக்கன்று நட்டினார்.
விழாவில் வேளாண்மை உதவி அலுவலர் மீனாட்சி, உதவி வேளாண்மை வணிகம் மற்றும் வேளாண்மை விற்பனை துறை உதவி அலுவலர்கள் மணிகண்டன், வேடியப்பன், கிங்ஸ்டன், உதவி தொழில்நுட்ப மேலாளர் செல்வகுமார், நகர கூட்டுறவு கடன் சங்க துணைத்தலைவர் சிவகுமார், ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஷ்பாலன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, ஜீனத்பிபீ, வசந்தகுமாரி, மகேஷ்வரி காமராஜ், சக்திவேல், பாலம்மாள், கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ், மற்றும் சுதாகர், கௌதம், உள்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார் நன்றியுரை கூறினார்.