தூத்துக்குடி அம்பேத்கர் நகரில் வீணாக போன குடிநீர் உடனடியாக சரி செய்ய உத்தரவிட்டார் தூத்துக்குடி மேயர் ஜெகன்
ஷ்யாம் நீயூஸ்
08.06.2022
தூத்துக்குடி அம்பேத்கர் நகரில் வீணாக போன குடிநீர் உடனடியாக சரி செய்ய உத்தரவிட்டார் தூத்துக்குடி மேயர் ஜெகன்!
தூத்துக்குடி அம்பேத்கர் நகர் பகுதியில குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் குடிதண்ணீர் ஒரு வருடத்திற்கு மேலாக வீணாகி உள்ளது. கடந்த ஆட்சி காலத்தில் பலமுறை பொதுமக்கள் புகார் கூறியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது இன்று பிற்பகல் 12 மணி அளவில் தூத்துக்குடி மேயர் ஜெகன் வேறு ஒரு வேலையாக அந்த வழியாக சென்றுள்ளார் அப்போது ரோட்டில் தண்ணீர் தேங்கி குடி நீர் வீணாவதை கண்டுள்ளார் உடனே தான் சென்ற வாகனத்தை நிறுத்தி ஆய்வு செய்துள்ளார் அப்போது ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த பகுதியில் குடிநீர் வீணாக சென்றுள்ளதை தெரிந்து கொண்டார் உடனடியாக அதிகாரிகளை தொடர்பு கொண்டு குழாயை அடைத்து குடிநீர் வீணாவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார் இது அப்பகுதியில் பொதுமக்கள் மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது