ஷ்யாம் நீயூஸ்
27.06.2022
மாப்பிள்ளையூரணி திமுக வேட்பாளர் தொம்மை சேவியர் சண்முகையா எம்.எல்.ஏ முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி 3வது வார்டு திமுக ஒன்றிய கவுன்சிலராக இருந்த கோயில்மணி மறைவை யொட்டி தேர்தல் நடைபெறாமல் இருந்த நிலையில் அடுத்த மாதம் 9ம் தேதி ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. திமுக வேட்பாளராக தொம்மை சேவியரை திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
இதனையொட்டி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து வேட்பாளர் சேவியர் சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். புதுக்கோட்டையில் உள்ள தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் நாகராஜுடம் சண்முகையா எம்.எல்.ஏ, மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான சரவணக்குமார் ஆகியோர் முன்னிலையில் தொம்மை சேவியர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
முன்னாள் எம்.எல்.ஏ டேவிட் செல்வின், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சுரேஷ். மாவட்ட விவசாய அணி அமைப்பாளரும் ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவருமான ஆஸ்கர், சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் ரவி என்ற பொண்பாண்டி, தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, துணை அமைப்பாளர் கண்ணன், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ரகுராமன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் கணேசன், ஒன்றிய செயலாளர்கள் மாடசாமி, ஜெயக்கொடி, சுப்பிரமணி, மாவட்ட பிரதிநிதி சப்பானிமுத்து, ஒன்றிய கவுன்சிலர் அந்தோணிதனுஷ்பாலன், மாப்பிள்ளையூரணி கூட்டுறவு கடன் சங்க துணைத்தலைவர் சிவக்குமார், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கபாண்டி, தங்க மாரிமுத்து, பெலிக்ஸ், பாலம்மாள், சக்திவேல், கதிர்வேல், உள்பட அனைத்து கிளைச்செயலாளர்கள் கலந்து கொண்டனர்.