அரசு பள்ளியில் ஜாதியை பேசிய ஆசிரியரை கைது செய்ய வேண்டும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் வேண்டுகோள்
ஷ்யாம் நீயூஸ்
16.06.2022
அரசு பள்ளியில் ஜாதியை பேசிய ஆசிரியரை கைது செய்ய வேண்டும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் வேண்டுகோள்!
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூரில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியரான கலைச்செல்வி மற்றும் கணினி ஆசிரியர் மீனா என்பவரும் தன் பள்ளியில் பயிலும் மாணவனிடம் ஜாதியை தூண்டும் வகையிலும், பள்ளியில் நடைபெறவிருக்கும் பெற்றோர் ஆசிரியர் கழக தேர்தலில் தலித் ஒருவர் தலைவராக வந்து விடக்கூடாது என்ற ஜாதிய வண்மத்துடன் பேசியிருப்பது மிகவும் கண்டனத்திற்குறியது. பள்ளியில் பயிலும் பிற மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் தலித் ஆசிரியர்கள். மாணவர்களை பிரித்து தீண்டாமையை உருவாக்கும்.
மாணவர்கள் மத்தியில் தீண்டாமையை விதைக்கும் வகையில் பேசிய குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர் கலைச்செல்வி. உறுதுணையாக ருந்த கணினி ஆசிரியர் மீனா ஆகியோர் மீது தீண்டாமை வண்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, பணி நீக்கம் செய்து, கைது செய்ய வேண்டும். மேலும் இது போன்ற தீண்டாமை சம்பவங்கள் தொடராமல் இருக்க கடுமையான நடவடைக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசையும், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தையும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னனி சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் புவி ராஜ், மாவட்ட தலைவர் காசி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்