ஷ்யாம் நீயூஸ்
29.06.2022
தூத்துக்குடி டாஸ்மாக் கடை ஊழியரை தாக்கி பணம் கொள்ளை. கஞ்சா போதை கும்பல் அட்டூழியம்
தூத்துக்குடி சிவந்த குளம் 5வது தெருவில் அரசு டாஸ்மாக் கடை எண் 10147 இயங்கி வருகிறது இன்று மாலை 4.30 மணி அளவில் மது வாங்குவது போல் நான்கைந்து நபர்கள் வந்து கடையில் இருந்த டாஸ்மாக் விற்பனையாளர் சங்கர் ,ரமேஷைபீர் பாட்டிலால் தாக்கி விட்டு விற்பனைத் தொகை சுமார் ஒரு லட்சம் அளவில் உள்ள பணத்தை எடுத்து விட்டு தப்பி சென்றனர் இதை தடுத்த விற்பனையாளர் சங்கருக்கு தலையில் அடிபட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் மற்றொரு விற்பனையாளர் ரமேஷுக்கு காயம் ஏற்பட்டுள்ளது கடையின் மேற்பார்வையாளர் முத்துக்குமார் தூத்துக்குடி மாவட்ட மேலாளர் முருகனுக்கு தகவல் கொடுத்தார் மற்றும் தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது விரைந்து வந்த காவல் நிலைய காவலர்கள் குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர் .