ஷ்யாம் நீயூஸ்
23.06.2022
தூத்துக்குடி சண்முகபுரம் தூய பேதுரு ஆலய 29ம் ஆண்டு அசன விழா நடைபெறுகிறது.
தூத்துக்குடி தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி நாசரேத் திருமணடலத்திற்குட்பட்ட சண்முகபுரம் தூய பேதுரு ஆலய 29ம் ஆண்டு அசனவிழா மற்றும் 72வது ஆலய பிரதிஷ்டை பண்டிகை வரும் 29ம் தேதி புதன்கிழமை வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது. இதற்கான அசன விழா நிகழ்வுகளை சேகர தலைவர் செல்வின் ராஜ் சார்லஸ் செயலாளர் ஜவஹர் சுந்தர்ராஜ், பொருளாளர் ஞான்ராஜ் டேனியல், அசன கமிட்டி ஒருங்கிணைப்பாளர் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் செயலாளர் ஜாய்சன் பொன்னுத்துரை, உள்பட நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் ஆலய அசன விழா கமிட்டி உறுப்பினர்கள் கௌரவ சங்கத்தினர் செய்து வருகின்றனர். சேகர தலைவர் செல்வின்ராஜ் சார்லஸ் உதவி குருவானவர் கிங்ஸ்;லி ஜான், ஆகியோர் ஜெபம் செய்து விழா நடைபெறுகிறது.