ஷ்யாம் நீயூஸ்
28.06.2022
தூத்துக்குடி அருகே தீயணைப்பு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது
தூத்துக்குடி அருகே உள்ள காலாங்கரை கிராமத்தில் தூத்துக்குடி சிப்காட் தீயணைப்பு நிலையம் மற்றும் மீட்புப் பணிகள் சார்பாக அபாயகரமான நீர்நிலை மற்றும் இயற்கை பேரிடர் நிகழும் பகுதிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒத்திகை மற்றும் பிரச்சாரம் நடைபெற்றது.
கோரம்பள்ளம் கிராம நிர்வாக அலுவலர் ராஜலட்சுமியின் ஏற்பாட்டில் தூத்துக்குடி மாவட்ட அலுவலர் உத்தரவின் பேரில் நிலை அலுவலர் முனியசாமி மற்றும் போக்குவரத்து அலுவலர் புன்னைகட்டி முன்னிலையில் மழைக்கால வெள்ளத்தடுப்பு வகுப்பு மற்றும் தற்காப்பு பயிற்சி நடத்தப்பட்டது இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை வருவாய் ஆய்வாளர் சந்தன ராஜ் ,கோரம்பள்ளம் பஞ்சாயத்து தலைவர் செல்வப்பிரபா அதிசயராஜ், காலாங்கரை வார்டு உறுப்பினர் ஞானக்கண் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்