ஷ்யாம் நீயூஸ்
06.06.2022
தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை சூப்பர். எம்.பி, அமைச்சர், கலெக்டர், மேயர், ஆணையர் பெருமிதம்!
தூத்துக்குடி மாநகராட்சி சீர்மிகு திட்டத்தின் கீழ் 4.45 கோடி ஓதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு புதிய உத்திகளை கையாண்டு புதுப்பிக்கப்பட்ட முத்துநகர் கடற்கரை சென்னை மெரினா கடற்கரையை போன்று சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வந்து இருந்து செல்வதற்கு ஏற்றவாறு கேளரி போன்ற இருக்கை அமைப்புகள் அழகிய முத்துபோன்ற சிலை செல்பி பியர்களை கவர்வதற்காக ஐ லவ் டூடி என்ற எழுத்து கொண்ட கண்களை கவரும் அழகான விளக்குகள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதைகள் ஊஞ்சல் உள்பட மற்றும் மாற்றுதிறனாளிகள் சருக்கு மூலம் வீல் சேரில் சென்று கடலில் நீராடுவதற்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள முத்துநகர் கடற்கரை திறப்பு விழாவிற்கு அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்தார். மேயர் ஜெகன் பெரியசாமி கலெக்டர் செந்தில்ராஜ், ஆணையர் சாருஸ்ரீ, துணை மேயர் ஜெனிட்டா, கவுன்சிலர் எடின்டா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கனிமொழி எம்.பி திறந்து வைத்து மரக்கன்று நட்டி மாற்று திறனாளிகளின் புதிய திட்டமான கடல் சருக்கில் கால்நனைத்து நீராடும் மாற்று திறனாளிகளுடன் பங்கேற்று பின்னர் பேசுகையில் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு இருக்கின்றனர். மாற்றுத்திறனாளிகளின் நீண்டநாள் கோரிக்கையான மற்றவர்களை போல் தாங்களும் கடலில் கால்நனைத்து நீராட வேண்டும் என்ற கோரிக்கையை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நிறைவேற்றி கொடுத்துள்ளார். அவர்களின் மகிழ்ச்சியை கண்டோம் இன்னும்10 வருடம் கடந்தாலும் இன்று இருப்பதை போல் சுத்தமாகவும் நல்ல முறையில் பொதுமக்கள் பயன்படுத்துக்கொண்டு தூத்துக்குடி மாநகரமட்டுமின்றி மாவட்டம் முழுவதுமே மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும் இளைஞர்கள் இளம்பெண்களின் திறமைகளை வளர்க்கும் வகையில் ஒவ்வொரு வாரமும் நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும் என்றார்.
கலெக்டர் செந்தில்ராஜ் பேசுகையில் சென்னைக்கு அடுத்தப்படியாக இது போன்ற கட்டமைப்புகள் உள்ள இடமாக தூத்துக்குடி கடற்கரை இருக்கிறது. பசுமையை ஏற்படுத்தும் வகையில் ஒருகோடி மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு செயல்படுத்தப்படவுள்ளன. மக்கும் குப்பை மக்காத குப்பை என்பதை தரம் பிரித்து கொடுத்து அனைவரும் தூய்மையை கடைபிடிக்க வேண்டும் என்றார்.
அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் அனைவரும் மகிழ்ச்சியோடு இருப்பதை காணமுடிகிறது. இதுபோன்ற நிகழ்வுகளுக்கு அனைவருடைய ஓத்துழைப்பு இருக்க வேண்டும் என்றார்.
மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு மாநகரம் முழுவதும் புதுப்பொலிவுடன் விரைவில் முழுமைபெறவுள்ளது. பொதுமக்களும் ஓத்துழைப்பு கொடுக்க வேண்டும். உங்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம் என்றார்.
மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, மாநகராட்சி பொறியாளர் ரூபன்சுரேஷ் பொன்னையா, உதவி பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ், உதவி ஆணையர்கள் சேகர், தனசிங், மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ்,பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பகுதி செயலாளாகள் சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், ஜெயக்குமார், மாவட்ட அணி செயலாளர்கள் அன்பழகன், கஸ்தூரிதங்கம், மோகன்தாஸ் சாமுவேல், ரமேஷ், ஜெபசிங், துணைச்செயலாளர்கள் சீனிவாசன், அருணாதேவி, மாநகர அணி செயலாளர்கள் அருண்குமார், முருகஇசக்கி, ஜெயக்கனி, டேனி, துணைச்செயலாளர்கள் ஆர்தர்மச்சாது, கிறிஸ்டோபர் விஜயராஜ், பால்மாரி, பகுதி துணைச்செயலாளர் பாலு, கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயகுமார், ராமர், கண்ணன், ஜாக்குலின்ஜெயா, வைதேகி, தனலட்சுமி, பவானி மார்ஷல், மெட்டில்டா, சரண்யா, தெய்வேந்திரன், கந்தசாமி, சுயம்பு, பச்சிராஜ், ராஜதுரை, ரெங்கசாமி, மும்தாஜ், முத்துமாரி, ஜான், ஜாண்;சிராணி, ராமும்மாள், ரிக்டா, பேபிஏஞ்சலின், சந்திரபோஸ், கற்பககனி, நாகேஸ்வரி, ஜெயசீலி, மாவட்ட பிரதிநிதி கதிரேசன், வட்டச்செயலாளர்கள் அண்டோ, டென்சிங், ரவிசந்திரன், சதீஷ்குமார், கீதாசெல்வமாரியப்பன், பொன்னுச்சாமி, வண்ணிராஜ், முக்கையா, சுரேஷ், வட்டப்பிரதிநிதிகள் சுப்பையா, பாஸ்கர், மாநில காங்கிரஸ் துணை தலைவர் சண்முகம், முன்னாள் மாவட்ட தலைவர் அருள், முன்னாள் கவுன்சிலர்கள் செந்தில்குமார், செல்வகுமார், போல்பேட்டை பகுதி இளைஞர் அணி துணை செயலாளர் அல்பட், பிரதிநிதிகள் பிரபாகர், லிங்கராஜா, மற்றும் மணி, சுகாதர ஆய்வாளர் ராஜசேகர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீர பாண்டியன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வாலெட் சுஷ்மா, மாநகராட்சி ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், கோட்டாச்சியர் சிவசுப்பிரமணியன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இன்னிசை கச்சேரி, நிகழ்ச்சியை கனிமொழி எம்.பி. பலமணிநேரம் அமர்ந்திருந்து பொதுமக்களோடு கண்டு களித்தார்.