ஷ்யாம் நீயூஸ்
22.06.2022
கொடநாடு சம்பவத்தில் எடப்பாடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக அரசுக்கு இசக்கிராஜா கோரிக்கை
தூத்துக்குடி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பி.எம்.டி. நிறுவன தலைவர் கே.என்.இசக்கிராஜா வெளீயிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது தமிழக முதலமைச்சராக அதிமுக பொது செயலாளரும் மறைந்த ஜெயலலிதா பணியாற்றினார். எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின்பு அதிமுகவில் தொடர் முதலமைச்சராக இருந்த காலத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதா பல சமயங்களில் ஓய்வு எடுப்பதும், அரசியல் சம்பந்தமாக சில முடிவுகளையும் எடுக்கும் மற்றும் ஒரு வேதாந்தா இல்லம் போல் கொடநாடு பங்களா இருந்தது. அவரது மறைவுக்குப் பின் ஜெயலலிதா இருந்த சிம்மாசனத்தில் சசிகலா துணையோடு எடப்பாடி பழனிச்சாமி அமர்ந்து பணியாற்றினார். ஜெயலலிதா இருந்த காலத்தில் தனது அமைச்சரவையில் அமைச்சராக இருந்த பலருடைய சொத்துக்கள் அவர்கள் சார்ந்த தொழில்கள் உறவினர்களின் பணிகள் என்னவென்று உளவுத்துறை மூலம் சேகரிக்கப்பட்டு அதன் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அங்கு வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்பு முதலமைச்சராக பொறுப்பேற்றியிருந்த எடப்பாடி பழனிச்சாமி மேற்பார்வையில் கொடநாடு எஸ்டேட் இருந்தது. இதற்கிடையில் பாதுகாப்பு பணியில் பல ஆண்டுகளாக இருந்த காவலாளி மர்மமான முறையில் இறந்தார். அங்கு பல ஆண்டுகளாக பொருத்தப்பட்டிருந்த சிசிடி கேமரா அவர் மறைவின் போது இயங்காமல் இருந்தது. அதனால் குற்றவாளிகளை தேடும் பணி தொடர்கிறது என்று அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி எதிர்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் கேள்விக்கு பதிலளித்திருந்தார். ஆனால் அச்சம்பவத்திற்கு பிறகு தொடர் கதையாக மேலும் சில இறந்தனர். திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அரசு முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் கொடநாடு காவலாளி உள்பட பலர் மர்மமான முறையில் இறந்தது குறித்து அது சம்பந்தமாக யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு நாட்டு மக்களுக்கு குற்றவாளி யார் என்று அடையாளம் காட்டப்படும் என்று தெரிவித்திருந்தார். அதில் சம்பந்தப்பட்டவர்கள் என சிலரை கைது செய்ததாகவும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு பல்வேறு கட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டது. சிறிது காலத்திற்கு பிறகு அதில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலை காணப்படுகிறது. இதற்கு காரணம் என்ன ஒரு சம்பவம் நடைப்பெற்று ஓராண்டுக்கு மேல் ஆகியும் அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியை கைது செய்து முழு விசாரணை செய்ய வேண்டும் சட்டம் அனைவருக்கும் ஒன்று தான் என்ற இந்திய ஜனநாயக முறைப்படி விசாரணை மேற்க்கொண்டு மர்மமான முறையில் இறந்த காவலாளி கார் டிரைவர் உள்ளிட்டவர்கள் மறைவுக்கு காரணமானவர்களை நாட்டு மக்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடையாளம் காட்ட வேண்டும் என்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பி.எம்.டி நிறுவன தலைவர் கே.என்.இசக்கிராஜா வெளீயிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.