ஷ்யாம் நீயூஸ்
29.06.2022
தூத்துக்குடியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி டாஸ்மாக் ஊழியர் பலி!
தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து (48) த/பெ சிவனைந்த பெருமாள். இவர் இன்று காலை தூத்துக்குடி திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலை பொட்டலூரணி விலக்கு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் .சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புதுக்கோட்டை காவல் துறை ஆய்வாளர் ரமேஷ், சார்பு ஆய்வாளர் முத்து விஜயன் ஆகியோர் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர் தூத்துக்குடி டாஸ்மாக் கடை எண்10110 கடையில் உதவி விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு குறைந்த அளவு ஊதியம் என்பதால் ஓய்வு நேரங்களில் இவர் நடமாடும் வாழைப்பழ வியாபாரம் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார் தனது சைக்கிளில் காய்கறிகள் பழங்களை வைத்துக் கொண்டு சுற்று வட்டார கிராமங்களில் வியாபாரத்திற்கு சென்றபோது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது இவருக்கு மனைவி சுடர்மதி(45) மகன் சதீஷ் (13) மகள் திவ்யா(12) ஆகியோர் உள்ளனர். இச்சம்பவம் ஒட்டுமொத்த தமிழக டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . டாஸ்மாக் ஊழியர்களுக்கு போதிய ஊதியம் இல்லாததால் குடும்ப செலவினங்களை சமாளிப்பதற்கு ஓய்வு நேரங்களில் வேறொரு வேலையை செய்ய வேண்டிய கட்டாயத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் உள்ளனர் .இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க தமிழக அரசு டாஸ்மாக் ஊழியர்களுக்கு சரியான வழிகாட்டுதல் ஏற்படுத்த வேண்டுமென தூத்துக்குடி டாஸ்மாக் ஏஐடியுசி மாநில துணைத்தலைவர் நெல்லை நெப்போலியன் கோரிக்கை வைத்துள்ளார்.