ஷ்யாம் நீயூஸ்
35.06.2022
தமிழக அரசால் அனுப்பிய நிவாரணப் பொருட்கள் இலங்கை சென்று அடைந்தது.
தமிழக மக்கள் சார்பில் இலங்கைக்கு 2-ம் கட்டமாக நிவாரணப் பொருட்களுடன் தூத்துக்குடியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட கப்பல் கொழும்பு சென்றடைந்தது.இலங்கையில் ஏற்பட்டுள்ல பொருளாதார நெருக்கடி, உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டைத் தொடர்ந்து தமிழக மக்கள் சார்பில் அனைத்து இலங்கை மக்களுக்கும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதனடிப்படையில் கடந்த மே மாதம் 18-ந் தேதி முதல் கட்டமாக சென்னை துறைமுகத்தில் இருந்து ரூ30 கோடி மதிப்பிலான அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.தமிழக அரசின் இந்த நிவாரணப் பொருட்கள் ஈழத் தமிழர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.
இதையடுத்து 2-ம் கட்டமாக ரூ67.70 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிவாரணப் பொருட்களுடனான கப்பல் நேற்று கொழும்பு துறைமுகம் சென்றடைந்தது.
இலங்கைக்கு தமிழக அரசு 4,712 மெட்ரிக் டன் அரிசி, 250 மெட்ரிக் டன் பால் மற்றும் 38 மெட்ரிக் டன் மருந்துகள் ஆகியவற்றை 2-வது கப்பலில் சமூகநலம் மற்றும் பெண்கள் பாதுகாப்பு அமைச்சர் கீதா ஜீவன் ,உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ,வெளிநாட்டு தமிழர்வாழ் மற்றும் சிறுபான்மை துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் தூத்துக்குடி துறைமுகத்தில் கொடியசைத்து இந்த கப்பலை அனுப்பி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது