ஷ்யாம் நீயூஸ்
17.06.2022
ஏபிசிவி சண்முகம் தலைமையில் காங்கிரசார் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்!
அமலாக்கத்துறை கண்டித்து தூத்துக்குடி காங்கிரஸ் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ராகுல் காந்தி மீது நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை நிறுவனத்தில் முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத் துறை சுப்ரமணியசாமி தொடுத்த வழக்கில் நோட்டீஸ் வழங்கி விசாரணை செய்து வருகிறது எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடுக்கப்பட்ட வழக்கு பலமுறை விளக்கம் கொடுத்தும் வழக்கு பதியாமல் விசாரித்து வருகின்றனர் இதனை கண்டித்து தூத்துக்குடி காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் நடத்தினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏபிசிவி சண்முகம் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுடலையாண்டி, டேனியல் ராஜ், தூத்துக்குடி தொழிலாளர் யூனியன் தலைவர் ஆடிட்டர் சிவராஜ் மோகன் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் சகாயராஜ், முத்தையாபுரம் பிரபாகரன் மற்றும் சில காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே உள்ள கருத்து வேறுபாடுகளால் காங்கிரஸ் தொண்டர்கள் இல்லாமல் நிர்வாகிகள் மட்டும் கடமைக்கு கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்பதே சில காங்கிரஸ் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் வெளியேற தொடங்கினர் இந்திய தேசிய அளவில் பெரும் கட்சியாக இருக்கும் காங்கிரஸ் தூத்துக்குடியில் உள் மாவட்ட நிர்வாகிகள் இடையே ஒற்றுமை இல்லாமல் தேய்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.