ஷ்யாம் நீயூஸ்
28.06.2022
தூத்துக்குடி மாவட்ட அளவிலானப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது
தூத்துக்குடி மாவட்ட அளவிலான மாணவ, மாணவியர்களுக்குப் பாட்டுப்போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதை எழுதும் போட்டியை தூத்துக்குடி தமிழ் இயக்கம் நடத்தியது இதில் மாவட்டக் கல்லூரி அளவிலானக் கவிதை எழுதும் போட்டியில் தூத்துக்குடி வ.உசி.கல்வியியல் கல்லூரி மாணவி த.நர்மதா, கட்டுரைப் போட்டியில் மறவன்மடம் கால்டுவெல் கல்லூரி மாணவி க.வேலம்மாள், பேச்சுப்போட்டியில் தூயமரியன்னைக் கல்லூரி மாணவி அ.முத்துமதுமிதாவும், பள்ளி அளவிலானப் பாட்டுப்போட்டியில் மறவன்மடம் அமிர்தா வித்யாலயா பள்ளி மாணவன் சோ.வள்ளிவிநாயகம், பேச்சுப்போட்டியில் சக்திவிநாயகர் பள்ளி மாணவி கே.சனனி, கட்டுரைப்போட்டியில் சக்திவிநாயகர் பள்ளி மாணவி மித்ரா ஆகியோர் முதலாவதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2வது, 3வது தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கும், போட்டியில்கலந்து கொண்டவர்களுக்கும் சான்றிதழ், நூல் வழங்கும் விழா சி.எம்.மேனிலைப்பள்ளி அரங்கில் தமிழியக்கத்தின் மாவட்டச் செயலாளர் மோ.அன்பழகன் தலைமையிலும், அரிமா ச.தனராசு, செய்யது முகம்மது செரிப், துறைமுகம் முருகேசன் முன்னிலையிலும் நடைபெற்றது. பாவல இளமுருகு வரவேற்றுப் பேசினார். 'திருக்குறள்' வே.அறிவுச்செல்வம் தமிழ்த்தா வாழ்த்துப் பாடினார். மாநில அளவிலானக் கவிதை எழுதும் போட்டியி வ.உ.சி.கல்வியியல் கல்லூரி மாணவி த.நர்மதா, பள்ளி அளவிலான பேச்சுப்போட்டியில் சக்தி விநாயகர் பள்ளி மாணவி கே.சனனி பெற்றார்கள். தமிழியக்கத்தின் தலைவர் வி.ஐ.டி 2வது பரிச பல்கலைக்கழக வேந்த கோ.விசுவநாதன் பரிசுத்தொகை ரூ.7500-மும், சான்றிதழையும் வேலூரில் வழங்கினர் தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் சரவணாசு ஆ.செந்தில்ஆறுமுகம், மாண மாணவியர்களுக்கு சான்றிதழ்களும், நூல்களும் வழங்கி உரையாற்றினார். தமிழிய தென்தமிழக ஒருங்கிணைப்பாளர் மதுரை மு.சிதம்பரபாரதி தமிழியக்கத்தின் நோக் சிறப்புரையாற்றினார். போட்டியின் நடுவர்களாக செயல்பட்ட ஆசி ம.பால்ராசேந்திரம், பாவலர் இளமுருகு, ஆசிரியர் சுந்தரி ஆகியோரைப் பாராட்டி பிறப்பு செய்யப்பட்டது. விழாவின் நிறைவாக பொறியாளர் ஞா.தபராசு நன்றி கூறினார்.