ஷ்யாம் நீயூஸ்
17.06.2022
தூத்துக்குடி மாநகராட்சி பள்ளியில் மேயர் அதிரடி ஆய்வு
தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி பள்ளியில் மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் சாருஸ்ரீ ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். தூத்துக்குடி சிவந்தாகுளம் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் வகுப்பறைகள், புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடங்களை மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் ஆணையர் சாருஸ்ரீ ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பின்னர் மேயர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக முதலமைச்சராக தளபதியாளர் பொறுப்பேற்ற பின் தமிழகத்தில் அனைத்து துறைகளும் முன்னேற்ற பாதையில் எடுத்துச்செல்லப்படுகிறது. இந்தியாவிற்கே தமிழகம் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் எல்லோரையும் மக்கள் பணியை சிறப்பாக செய்யவேண்டும் என்ற அறிவுறுத்தியுள்ளார்கள். அதே போல் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். என்ற உத்தரவு அரசு விடுத்ததையடுத்து மாநகராட்;சி முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவ மாணவிகளின் சேர்க்கையை அதிகாரிக்கவும் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்கும் நடவடிக்கை மேற்கொண்டு தற்போது தூத்துக்குடியில் உள்ள அரசு பள்ளிகளில் அதிகமாக மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதனால் மாணவர்களுக்காக கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கும், தேவையான அளவு பெஞ்ச், மேஜை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி பள்ளியில் 400ஆக இருந்த மாணவர்கள் எண்ணிக்கை தற்போது 1200ஐ கடந்துள்ளது. இப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தவும், பள்ளியின் வளர்ச்சிக்காக உப்பு இலாக்காவிற்கு சொந்தமான பள்ளி எதிரே உள்ள மைதானத்தை கனிமொழி எம்.பி. அமைச்சர் கீதாஜீவன் மூலம் இடம் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டு அதில் விளையாட்டு மைதானம்; அமைக்கவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றார். ஆய்வின் போது பள்ளி தலைமை ஆசிரியை எமல்டா, மேயரின் உதவியாளர்கள் ரமேஷ், பிரபாகர், ஜோஸ்பர், ஆணையரின் உதவியாளர் துரைமணி, உள்பட பலர் ஆய்வின் போது உடனிருந்தனர். மேயரின் உற்சாகமான செயல்பாட்டை மக்கள் பெரிதும் பாராட்டி வருகிறார்கள்.