ஷ்யாம் நீயுஸ்
27.06.22
தெற்கு ரயில்வேயின் தூத்துக்குடி நகர மக்கள் விரோத போக்கை கைவிட சிபிஎம் மாநகர் செயலாளர் ராஜா கோரிக்கை
இது தொடர்பாக மாசிலாமணி புரத்தில் உள்ள சிபி எம் மாநகரக்குழு சார்பில் சிபிஎம் மாநகர் செயலாளர் தா.ராஜா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்
நாகர்கோவில் - கோவை ரயிலில் தூத்துக்குடி மக்களுக்காக லிங்க் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வந்தது. அந்த லிங்க் எக்ஸ்பிரஸ் கொரானா காலத்தில் நிறுத்தப்பட்டது. தற்பொழுது அந்த லிங்க் எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிகிறோம்.
ஜூலை 2முதல் லிங்க் எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டு, இணைப்பு ரயில் விடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த இணைப்பு ரயிலில் நள்ளிரவு மணியாச்சி சென்று கோவை நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் இரவு 11.30 மணிக்கு ஏறவேண்டும். கோவையிலிருந்து - தூததுக்குடிக்கு வரும் பயணிகள் அதிகாலை 2.40 மணிக்கு மணியாச்சியில் இறங்கி தூத்துக்குடி இணைப்பு ரயிலுக்கு மாற வேண்டும். இதனால் பயணிகள் இரவு முழுவதும் தூங்காமல் பயணிக்க நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். தூத்துக்குடி-கோவை லிங்க் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்ட பொழுது முன்பதிவு இல்லாத பெட்டிகளில் சுமார் 300 பேர் வரை தினசரி பயணம் செய்தனர். இணைப்பு ரயிலில் செல்லும் முன் பதிவு இல்லாமல் செல்லும் பயணிகளுக்கு நாகர்கோவில்-கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் மூன் பதிவு இல்லா பெட்டிகளில் இடம் எப்படி கிடைக்கும். இடம் இல்லாத நிலையில் அவர்கள் நள்ளிரவில் தூத்துக்குடி திரும்ப என்ன செய்வார்கள்.
எனவே சாதாரண மக்களை பாதிக்கும் இந்த இணைப்பு ரயில் திட்டத்தை தெற்கு ரயில்வே நிர்வாகம் கைவிட்டு, மீண்டும் லிங்க் எக்ஸ்ப்பிரஸையே இயக்க வேண்டும். அல்லது தூத்துக்குடி - கோயம்புத்தூர் புதிய ரயில் இயக்க வேண்டும்.
தெற்கு ரயில்வேயின் தூத்துக்குடி நகர மக்கள் விரோத போக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. லிங்க் எக்ஸ்பிரஸ் ரயிவை இயக்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என கூறியுள்ளார்.