தூத்துக்குடி சிப்காட் நிறுவன பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது கலெக்டர் செந்தில்ராஜ் துவக்கி வைத்தார
ஷ்யாம் நீயூஸ்
27.06.2022
தூத்துக்குடி சிப்காட் நிறுவன பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது கலெக்டர் செந்தில்ராஜ் துவக்கி வைத்தார்
தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம், சிப்காட் வளாகத்தில் சர்வதேச குறு சிறு நடுத்தர நிறுவனங்கள் தின விழாவினை முன்னிட்டு குறு சிறு நடுத்தர தொழில் நிறுவன பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது இன்று காலை நடந்த மருத்துவ முகாமினை தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் (இஆப)தொடங்கி வைத்தார். தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் 71 மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன அதில் பணிபுரிந்து வரும் பணியாளர்களுக்கு நடைபெற்ற மருத்துவ முகாமில் 300க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பயனடைந்தனர் இதில் மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் சொர்ணலதா தலைமை தாங்கினார் தூத்துக்குடி சுகாதாரத் துறை இணைச் செயலாளர் மருத்துவர் பொன் செல்வன் சிப்காட் திட்ட அலுவலர் ஜோ பிரகாஷ் மற்றும் சொர்ணலதா, தாசில்தார் செல்வகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்