துத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஸ்டெர்லைட் சார்பில் 12பேருக்கு தலா ரூ.2.5லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டது.
ஷ்யாம் நீயூஸ்
17.06.2022
துத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஸ்டெர்லைட் சார்பில் 12பேருக்கு தலா ரூ.2.5லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயமடைந்த 12பேர்களுக்கு ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் தலா ரூ.2.5லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. தூத்துக்குடியில் கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையின் போது அதனை கட்டுபடுத்த தடியடி மற்றும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் அதிகளவில் காயமடைந்தவர்களுக்கு உடலுறுப்பு பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக இயல்பாக வேலை செய்யமுடியாத அவர்கள் இயல்பு வாழ்வை இழந்தனர். பலரது உதவியை அவர்கள் நாடியுள்ளனர் என்று தெரிவித்தனர். இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தை நாடியபொழுது அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 12 பேருக்கு ரூ.2.5லட்சம் நிதியுதவியை ஸ்டெர்லைட் நிறுவனம் வழங்கியது. இந்த நிதியுதவியை பெற்ற பயனாளிகள் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு நன்றியைத் தெரிவித்து கொண்டனர். மேலும் இந்த நிதி அவர்களின் வாழ்க்கைக்கு பெரும் உதவியாக இருக்கும் என தெரிவித்தனர் இவ்வாறு ஸ்டெர்லைட் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.