தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும், விற்கும் முடிவை கைவிட வேண்டும் கிராம மக்கள் தொடர் போராட்டம்
ஷ்யாம் நீயூஸ்
22.06.2022
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும், விற்கும் முடிவை கைவிட வேண்டும் கிராம மக்கள் தொடர் போராட்டம்
தூத்துக்குடியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 400 கோடி மதிப்பில் ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டது. பல்வேறு உற்பத்தியின் மூலம் மத்திய, மாநில அரசுக்கு பெறும் வருமானம் பல்வேறு வகையில் கிடைத்தது. துறைமுகத்தின் மூலம் சுங்கத்துறை மற்றும் துறைமுகத்திற்கும், தொழிற்லாளர்களுக்கும் வேலைவாய்ப்பும், வருமானமும் கிடைத்தன. ஸ்டெர்லைட்டை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒப்பந்த அடிப்படையில் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றினார்கள். அதன் மூலம் பல குடும்பங்கள் வாழ்ந்தன. ஸ்டெர்லைட்டை சுற்றியுள்ள 25க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு அடிப்படை தேவையான சாலை குடித்தண்ணீர், பள்ளிக்கட்டிடம், அங்கன்வாடி ஆகியவைகளை கட்டி கொடுத்து மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு உதவிகள் பள்ளி படிப்பு முதல் கல்லூரி படிப்பு வரை பலருக்கும் கல்வி உதவித்தொகை என பல்வேறு வகையில் உதவிகள் செய்து வந்தன. மாவட்டமும் பல்வேறு வகையில் தொழில்துறையில் வளர்ச்சி அடைந்தது. அரசுக்கு தேவையான காப்பர் உற்பத்தி செய்து கொடுத்து வந்தனர். 4 வருடங்களுக்கு முன்பு எதிர்பாராமல் நடைபெற்ற ஒரு சம்பவத்தால் மூடி கிடக்கின்றது. இதன் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருந்து வரும் நிலையில் திடீரென ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்வதாக நிர்வாகம் அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த ஆலையால் பயனடைந்த ஆதாரவாளர்கள் மூடும் முடிவை கைவிட வேண்டும் என்று பேட்டி கொடுத்த நிலையில் மீண்டும் தொழிற்சாலை எங்களுக்கு வேண்டும். விற்கும் முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்தி பண்டாரம்பட்டி, சங்கரபேரி, மீளவிட்டான், மடத்தூர், குமாரரெட்டியார்புரம், நடுவக்குறிச்சி, ராஜாவின்கோவில், புதூர் பாண்டியாபுரம், சில்லாநத்தம், சாமிநத்தம், அய்யனடைப்பு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தன் எழுச்சியாக தங்களது பகுதிகளில் தொடர் ஆதரவு உண்ணாவிரத போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இது குறித்து ஒருவர் கூறுகையில் மக்களுக்கான நன்மைகள் தொடர்ந்து செய்து வந்த இந்த நிறுவனம் சிலர் செய்த தவறுகளால் மூடப்பட்டுள்ளது. இதனால் எங்களை போன்ற பல்வேறு கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். இந்தியா வளர்ச்சி அடைந்து வல்லரசாக வேண்டும் என்பதை போல் இந்த மாவட்டமும் வளர்ச்சி அடைந்து மக்களும் பலன் பெற்று மத்திய, மாநில அரசுகளுக்கும் நன்மை கிடைத்த நிறுவனத்தை மீண்டும் திறக்க வேண்டும். மூடும் முடிவை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்துவோம் என்றார்.