மாப்பிள்ளையூரணி பகுதியில் தூய்மை பணியை சிறப்பாக செய்ய வேண்டும் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் ஆலோசனை கூட்டத்தில் வேண்டுகோள்.
ஷ்யாம் நியூஸ் 29.10.2022 மாப்பிள்ளையூரணி பகுதியில் தூய்மை பணியை சிறப்பாக செய்ய வேண்டும் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் ஆலோசனை கூட்டத்தில் வேண்டுகோள். தூத்துக்குடி மத்திய அரசு இந்தியா முழுவதும் தூய்மை பாரதம் திட்டத்தை தொடங்கி கிராமங்கள் முதல் மாநகரம் வரை அனைத்து பகுதிகளும் தூய்மையாக இருக்க வேண்டும் என்று திட்டத்தை தொடங்கி வைத்து நடைபெற்று வருகின்றன. தமிழக அரசும் இதே போல் கிராம ஊராட்சி திட்டத்தின் கீழ் தூய்மை பணிகளையும் மேற்கொண்டு வருகின்றன. ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி தூய்மை காவலர்கள் மூலம் தூய்மை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதையொட்டி மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற கூட்ட அரங்கில் தூய்மை காவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்றது. பின்னர் பேசுகையில் ஓரு நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருப்பது கிராம ஊராட்சி தான் ஊராட்சி வளர்ச்சி மூலம் தான் நாட்டின் வளர்ச்...