முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் தூத்துக்குடி மாணவ மாணவியர்கள் சாதனை

 ஷ்யாம் நீயூஸ் 31.05.2022 தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் தூத்துக்குடி மாணவ மாணவியர்கள் சாதனை தூத்துக்குடி மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் மே மாதம் 27 முதல் 29ம் தேதி வரை நடைபெற்ற தேசிய அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் தூத்துக்குடி ரஜோ ஸ்கட்டிங் கிளப்பை சேர்ந்த 11 மாணவர்கள் பயிற்சியாளர் ராஜேஷ் பாலன் தலைமையில் தமிழ்நாட்டிற்காக களமிறங்கி 9 தங்கம், 4 வெள்ளி மற்றும் 7 வெண்கலம் ஆகிய பதக்கங்கள் வென்று வெற்றி வாகை சூடி புள்ளி பட்டியலில் 3ம் இடத்தை பிடித்தனர்.      இப்போட்டியில் மும்பை, கர்நாடகா, குஜராத், ஆந்திர பிரதேசம், நாக்பூர், மத்திய பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களை சார்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

மாநகர பகுதியில் குடியிருப்பவர்கள் இணையதளம் மூலம் கருத்துக்களை பதிவு செய்யலாம். உள்பட 39 தீர்மானங்கள் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நிறைவேறியது.

ஷ்யாம் நீயூஸ் 30.05.2022 மாநகர பகுதியில் குடியிருப்பவர்கள் இணையதளம் மூலம் கருத்துக்களை பதிவு செய்யலாம். உள்பட 39 தீர்மானங்கள் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நிறைவேறியது. தூத்துக்குடி மாநகராட்சி அவரச கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் துணை மேயர் ஜெனிட்டா, ஆணையர் சாருஸ்ரீ, முன்னிலையில் தொடங்கிய கூட்டத்தில் அதிமுகவை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் வக்கீல் வீரபாகு, வெற்றிச்செல்வன், வக்கீல் மந்திரமூர்த்தி, முன்இருக்கையில் அமர்ந்து கொண்டனர். அகர வரிசை படி உறுப்பினர்களுக்கு இருப்பிடம் ஓதுக்கப்பட்டுள்ளது. மண்டல தலைவர்கள் 4 பேர் முன்வரிசையில் இடமளிக்கப்பட்டுள்ளது. ஆகவே உங்களுக்குரிய இடத்தில் அமரும்படி மேயர் ஜெகன் பெரியசாமி கேட்டுக்கொண்டார். அதன்படி அவர்களது இடத்திற்கு சென்றனர். பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி மாநகராட்சி நகர் நல அலுவலர் மூலம் ஹோலிகிராஸ் பள்ளி அருகிலிருந்த ஆரம்ப சுகாதார மையம், சத்திரம் பகுதியில் மாற்றப்பட இருந்ததை மீண்டும் பழைய இடத்திலேயே அமைப்பதற்கும் சிவந்தாகுளம் சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அதிகம் இருப்பதால் கூடுதல் கட்டிடம்...

வடக்கு மாவட்டம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கருணாநிதி பிறந்தநாளை கொண்டாட வேண்டும் அமைச்சர் கீதாஜீவன் வேண்டுகோள்.

 ஷ்யாம் நீயூஸ் 30.05.2022 வடக்கு மாவட்டம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கருணாநிதி பிறந்தநாளை கொண்டாட வேண்டும் அமைச்சர் கீதாஜீவன் வேண்டுகோள். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் எட்டையாபுரம் சாலையி;ல் உள்ள கலைஞர் அரங்கில் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமையில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் கடந்த திமுக ஆட்சியில் முதலமைச்சராக இருந்து கருணாநிதி புதிய தலைமை செயலகத்தை தனது நேரடி பார்வையில் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து கட்டினார். அப்குதியில் பெரியார், அண்ணா, சிலைகளுக்கு மத்தியில் இரண்டு தினங்களுக்கு முன்பு முழு உருவ வெண்கல சிலை முதலமைச்சர் ஸ்டாலின் நேரடி பார்வையில் உருவாக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது வரும் 3ம் தேதி கருணாநிதி பிறந்தநாளை வடக்கு மாவட்டம் முழுவதும் சிறப்பாக நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். திமுக கழகத்தை தோற்றுவித்த...

அதிமுக ஆட்சியில் மக்களைபற்றி சிந்திக்காமல் அமைச்சர்கள் தங்களது நலனைபற்றி மட்டுமே சிந்தித்தார்கள். தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் குற்றச்சாட்டு

 ஷ்யாம் நீயூஸ் 30.05.2022 அதிமுக ஆட்சியில் மக்களைபற்றி சிந்திக்காமல் அமைச்சர்கள் தங்களது நலனைபற்றி மட்டுமே சிந்தித்தார்கள். தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் குற்றச்சாட்டு  தூத்துக்குடி மாநகர திமுக சார்பில் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் சிதம்பரநகர் பேருந்துநிறுத்தம் அருகில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமையில் பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், நிர்மல்ராஜ், சுரேஷ்குமார், ரவீந்திரன், ராமகிருஷ்ணன், மேகநாதன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.  கூட்டத்தில் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற போது 35ஆயிரம் வரை கொரோனா தொற்று இருந்தது. அவர் பொறுப்பேற்பதற்கு முன்பே அதிகாரிகளுடன் கட்டுபடுத்துவதற்கு  குறித்து ஆலோசனை நடத்தினார். ஓவ்வொரு முயற்சியாக மேற்கொண்டதில் 2வது அலை 3வது அலை அனைத்தையும் முறியடித்தார். எந்தனை அலை வந்தாலும் நாட்டுமக்களை காப்பாற்றுவார். முதல்வராக பொறுப்பேற்ற காலத்தில் நிதிபற்றாக்குறை கஜானா காலி என்ற நிலை இருந்தது. அதை மீட்டெடுப்பதற்கு எந்த செலவை குறைக்கலாம்...

பிரதமர் நேரு நினைவு நாள் அனுசரிப்பு !

 ஷ்யாம் நீயூஸ் 28.05.2022 இந்தியாவின் முதல் பிரதமரான நேருவின் இறந்த நாளான நேற்று தூத்துக்குடி காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் சார்பில் நேருவின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் மாநில தலைவர்  டாக்டர் புவனேஸ்வரி நஞ்சப்பன்  அறிவுறுத்தலின் படியும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி S. அமிர்த ராஜ்  ஆலோசனை படியும் நேற்று 27.05.2022 காலை இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு  நினைவு நாள் தினத்தைமுன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் அலுவலகம் முன்பு தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஆடிட்டர் சிவ் ராஜ் மோகன் தலைமையில் மாலை அணிவித்து  அஞ்சலி செலுத்தப்பட்டது. TC TU நிர்வாகிகள் அருண் தேவராஜ்.ராஜப்பா, ஊடக பிரிவு சுந்தர்ராஜ் மற்றும் பல காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

நிதானத்தை இழந்தார் அண்ணாமலை சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம்.

 ஷ்யாம் நீயூஸ் 28.05.2022 நிதானத்தை இழந்தார் அண்ணாமலை  சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம்.  நேற்று  (27-05-2022) மாலை சென்னையில் செய்தியாளர் சந்திப்பை நடத்தியிருக்கிறார் பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை. ஊடகவியலாளர் ஒருவரின் கேள்வியை எதிர்கொள்ள முடியாமல் தன் நிதானத்தை இழந்த அண்ணாமலை  கேள்வி கேட்டவரைப் பார்த்து அறிவாலயத்தில் இருந்து 200 ரூபாய் கிடைத்துவிடும் என்று ஆரம்பித்து திடீர் ஏலதாரராய் மாறிப் போய்க் கொண்டே 3000 ரூபாய் என்று அவதூறான  வகையில் பேசியிருக்கிறார் அண்ணாமலை   ஊடகவியலாளர் கேள்வியை எதிர்கொள்ள முடியாவிட்டால் அமைதி காக்கலாம். மாறாக ஊடகவியலாளர்கள் , தங்களுடைய கடமைகளை செய்ய அறிவாலயத்தில் கையூட்டு பெறுகிறார்கள் என்று அவலமான அவதூறு செய்திருப்பதை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது.இந்த ஆணவப் போக்கு ஒரு கட்சியின் தலைவருக்கு அழகல்ல. மேலும் தனது அவதூறான பேச்சை இதுதான் தர்மம் என நியாயப்படுத்தும் பேச்சு இன்னும் கொடுமையாக உள்ளது. இது போன்ற பேச்சுக்களை அண்ணாமலை தொடர்ந்து பேசி வருவது ஊடகங்களின் உரிமையை உணர்வுகளை உரசிப்பார்க்கு...

தூத்துக்குடியில் நடந்த கண் மருத்துவ முகாமில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன் அடைந்தனர்

 ஷ்யாம் நீயூஸ் 27.05.2022!! தூத்துக்குடியில் நடந்த கண் மருத்துவ முகாமில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன் அடைந்தனர் தூத்துக்குடி நாடார்கள் மகமை   மற்றும் தூத்துக்குடி பியர்ல் அரிமா சங்கம்  இணைந்து தூத்துக்குடி அகர்வால் கண் மருத்துவ மனை சார்பாக இலவச கண் பரிசோதனை முகாமும் டாக்டர் மோகன்ஸ் மருத்துவ மனை சார்பாக  இலவச இரத்த பரிசோதனை முகாமும் மற்றும் இலவச பல் மருத்துவ முகாமும்   கே.ஏ.பேச்சியப்பநாடாா்    சீனியம்மாள்  நினைவாக    KAP  நிறுவணங்கள்  நடத்தும்  தூத்துக்குடி நாடார்கள் மகமை திருமண மண்டபத்தில் வைத்து நடைப்பெற்றது   தமிழ்நாடு மொ்க்கன்டைல்  வங்கி  இயக்குனா்    சி.எஸ்.ராஜேந்திரன்   தலைமை  தாங்கி  நினைவு பாிசு  வழங்கினாா்  தூத்துக்குடி நாடார்கள் மகமை செயலாளர் சந்திரசேகர் முன்னிலை  வகித்தார்  இந்த முகாமை தலைவர் கே ஏ பி சீனிவாசன்  துவக்கி வைத்தார் இந்நிகழ்ச்சியில் அரிமா சங்க மாவட்ட தலைவர் டி ஏ தெய்வநாயகம் தர்மசீலன் தங்கராஜ் பண்பாடு உப்பு வியாப...

பண்டித ஜவகர்லால் நேரு நினைவு தினம்!

ஷ்யாம் நீயூஸ் 27.05.2022  பண்டித ஜவகர்லால் நேரு  நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. பண்டித ஜவகர்லால் நேரு  நினைவு நாளை முன்னிட்டு அலங்காரம் செய்யப்பட்ட நேருவின் புகைப்படத்திற்கு முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் INTUC மாநில அமைப்புச் செயலாளர்K. பெருமாள்சாமி ஏற்பாட்டின் பேரில்....தூத்துக்குடி தெற்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர்  டேவிட் பிரபாகரன்,   அமைப்புசாரா தொழிலாளர் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக்கொடி, ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர் தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ்  மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்து விஜயா,மாநில பேச்சாளர் அம்பிகாபதி மீனவர் அணி மிக்கேல் குரூஸ்,மடத்தூர் தனபால்ராஜ் கலைபிரிவு மாவட்ட தலைவர் பெத்துராஜ்,INTUC முனியசாமி கலைபிரிவு மாவட்ட தலைவர் பெத்துராஜ், C.நம்பிசங்கர் முத்துராஜ், ஜான் வெஸ்லி, ஜெயமணி,  ஏசுதாஸ்,  பாலசுப்பிரமணியன், ,செல்வம்,கார்த்தி, முத்து, ரமேஷ்,சாரதி, பிரபு,கௌதம் முத்துராஜா ,கார்த்தி, முத்து, ரமேஷ்,சாரதி, பிரபு,கௌதம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

தூத்துக்குடி திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் பெரியசாமியின் 5ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு!

ஷ்யாம் நீயூஸ் 26.05.2022 தூத்துக்குடி திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் பெரியசாமியின் 5ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு! தூத்துக்குடி திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் பெரியசாமியின் 5ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏக்கள் மார்க்கன்டேயன்  சண்முகையா, மேயர் ஜெகன் பெரியசாமி மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.       தூத்துக்குடி திமுக முன்னாள் மாவட்ட செயலாளரும் எம்.எல்.ஏவுமான  பெரியசாமியின் 5ம்  ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு போல்பேட்டையில் அமைந்துள்ள மணி மண்டபத்திலுள்ள அவரது சிலைக்கு நினைவிடத்தில் பெரியசாமியின் மனைவி எபனேசர், வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் மீனவளம் மற்றும் கால்நடைதுறை அமைச்சருமான அனிதாராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏக்கள் மார்க்கன்டேயன் சண்முகையா, பொதுக்குழு உறுப்பினரும் மேயருமான ஜெகன் பெரியசாமி, ராஜாபெரியசாமி, அசோக்பெரியசாமி, அவரது மருமகன்கள் ஜீவன்ஜேக்கப், சுதன்கீலர், மகள்கள், மருமகள்கள், பேரன்கள், பேத்திகள், ஆகியோ...

திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனை இந்தியாவிற்கே வழிகாட்டுகிறது. விளாத்திகுளம் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் போச்சு.

 ஷ்யாம் நீயூஸ் 24.05.2022 திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனை இந்தியாவிற்கே வழிகாட்டுகிறது. விளாத்திகுளம் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்கள். தூத்துக்குடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அயராது உழைப்பின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் விளாத்திகுளம் காய்கறி மார்க்கெட் அருகில் ஜி.வி.மார்கண்டேயன் எம்.எல்.ஏ தலைமையில் திமுக பொதுக்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் சின்னமாரிமுத்து, வசந்தம் ஜெயக்குமார், செல்வராஜ், மும்மூர்த்தி, காசிவிஸ்வநாதன், நவநீதகண்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.     முன்னாள் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ராஜசேகரன் வரவேற்புரையாற்றினார். வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆகியோர் பேசுகiயில் தமிழகத்தில் 10 ஆண்டுகாலம் அதிமுக ஆட்சி இருந்தகாலமாக இருந்தது புதிய திட்டங்கள் எதுவும் செயல்படுத்தவில்லை. 2006 முதல் 2011 வரை முதலமைச்சராக இருந்த கலைஞர்...

தூத்துக்குடியில் தூய மாியன்னைக் கல்லூாிக்கு தன்னாட்சி புதுப்பித்தல் குழுவினா் வருகை

ஷ்யாம் நீயூஸ் 24.05.2022  தூத்துக்குடியில்  தூய மாியன்னைக் கல்லூாிக்கு  தன்னாட்சி புதுப்பித்தல்  குழுவினா் வருகை           21.05.2022  _ 22.05.2022.  ஆகிய  நாட்களில்  தூத்துக்குடி  தூய மாியன்னைக் கல்லூாி  (  தன்னாட்சியில் )    தன்னாட்சி  புதுப்பித்தல்  குழுவினா்  வருகைபுாிந்தனா்   மத்தியபிரதேசம்  இன்டோா் தேவி  அஹிலா விஷ்வ வித்யாலயாவின்  துணைவேந்தா்  பேராசிாியா்  ரேணு  ஜெயின்   தலைமையிலான  வெவ்வேறு  புகழ்பெற்ற  நிறுவனங்களிலுள்ள  ஆறுபேரைக் கொண்ட அக்குழுவினரை  கல்லூாி செயலா் புளோராமோி   முதல்வா்  முனைவா்    லூசியாரோஸ்   துனை முதல்வா்   குழந்தைதெரஸ்   சுயநிதிப்பிாிவு  இயக்குனா்  ஜோஸ்பின்ஜெயராணி  ஆகியோரும்  புலத்துறைத் தலைவா்கள்  தோ்வாணையா்  உள்ளிட்டா  பேராசிாியா்களும்  வரவேற்றனா்  மாணவியா்   அணிவ...

மாப்பிள்ளையூரணியில் வேளாண்மை வளர்ச்சி திட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கானொலி மூலம் பேசினார்

ஷ்யாம் நீயூஸ் 23.05.2022  மாப்பிள்ளையூரணியில் வேளாண்மை வளர்ச்சி திட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கானொலி மூலம் பேசினார்  தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் கலைஞரின் அனைத்து கிராம ஓருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் தமிழகம் முழுவதும் 2021 2022ம் ஆண்டு, 1997 கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்திட அத்திட்டத்தை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கானொலி காட்சி வாயிலாக பேசினார். தூத்துக்குடி மாவட்டத்தில் 48 கிராம பஞ்சயாத்துகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. மாவட்ட அளவிலான துவக்க விழா நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள 48 கிராம பஞ்சாயத்துகளில் 35 தரிசு நிலத்தொகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் முக்கிய நோக்கமானது கிராம பஞ்சாயத்துகளில் உள்ள தரிசு நிலங்களை தேர்வு செய்து தரிசு நில தொகுப்புகள் உருவாக்கப்பட்டு தரிசு நிலங்களை சாகுப்படிக்கு கொண்டு வருதல் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்ற தேவையான நீர்வள ஆதாரங்களான ஆழ்துளைக் கிணறு அமைத்தல் ஆழ்துள...

தூத்துக்குடி மாவட்ட மருத்துவர் மற்றும் முடிதிருத்துவோர் சங்கம் சார்பில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி யிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது!

  ஷ்யாம் நீயூஸ் 21.06.2032 தூத்துக்குடி மாவட்ட மருத்துவர் மற்றும் முடிதிருத்துவோர் சங்கம் சார்பில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி யிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது! தூத்துக்குடி மாவட்ட மருத்துவர் மற்றும் முடி திருத்துவோர் சங்க நிர்வாகிகள் கூட்டம் எட்டயபுரம் சாலையில் அமைந்துள்ள CITU அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இந்தக் கூட்டம்  சங்க கௌரவத் தலைவர் K. சதாசிவன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு  CITU மாநில செயலாளர் ரசல் சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் நிர்வாகிகள் சார்பில்  5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தீர்மானங்கள் 1.)முடிதிருத்தும் நிலையங்களுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்கிட வேண்டும் . 2.)தூத்துக்குடி மாநகராட்சியில் கடைகளுக்கு தொழில் வரி 500 என்று இருப்பதை 200 ஆக குறைப்பது அபராத தொகை ரத்து செய்யக் கோரியும் 3.)முடிதிருத்தும் தொழிலாளர்க்கு தொழில் உபகரணங்கள் நல வாரியம் மூலமாக உடனடியாக வழங்கிடவும் 4.) முடிதிருத்துவோர் குடும்ப சூழல் கருதி ( கடை வாடகை ) வீட்டு வாடகை குழந்தைகள் படிப்பு , வீட்டுமனைப் பட்டா கொடுக்க கோரியும் 5.) சங்க உறுப்பினர்களை வாரியத்த...

தூத்துக்குடியில் உதயநிதி நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்.

 ஷ்யாம் நீயூஸ் 20.05.2022 தூத்துக்குடியில் உதயநிதி நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்.   தூத்துக்குடி திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மகனும் திமுக மாநில இளைஞர் அணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான நெஞ்சுக்கு நீதி திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியாகியுள்ளது. தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள பெரிசன் பிளாசா திரையரங்கில் வெளியாகியுள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை மாநில திமுக பொதுக்குழு உறுப்பினரும் தூத்துக்குடி மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி டிக்கெட் வழங்கி தொடங்கி வைத்தார்.         நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ நற்பனி மன்ற மாவட்ட தலைவர் துரை, நிர்வாகிகள் ஜார்ஷ்புஷ், மணி, பாக்கியத்துரை, ரமேஷ், திமுக இளைஞர் அணி துணைச்செயலாளர் சங்கரநாராயணன், அர்ஜுன், சக்தி, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், லிங்கராஜா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாணவர்கள் கராத்தே

 ஷ்யாம் நீயூஸ் 20.05.2022 தூத்துக்குடி மாணவர்கள் கராத்தே போட்டியில் சாதனை தூத்துக்குடி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நான்கு நாள் நடைபெற்ற கராத்தே பயிற்சி முகாம் மற்றும் சாம்பியன்ஷிப் போட்டியில் தூத்துக்குடி மாவட்ட கராத்தே அணி 13 தங்கப் பதக்கமும் 11 வெள்ளிப்பதக்கமும் 7 வெண்கல பதக்கமும் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை  வென்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தனர்.     வெற்றி பெற்ற மாணவர்களை கராத்தே- இந்திய தலைமை பயிற்சியாளர் சோபுக்காய் கோஜுரியு, தொழில்நுட்ப இயக்குனர் ரென்சி சுரேஷ்குமார்,  கராத்தே பள்ளியின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் சென்சாய் செந்தில், மாவட்ட செயலாளர் சென்சாய் முத்துராஜா ஆகியோர் பாராட்டினர்.   இந்த கராத்தே போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணவர்கள் வரும் செப்டம்பர் மாதம் கோவாவில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பங்கு பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து காங்கிரஸ் அறப்போராட்டம். ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.

ஷ்யாம் நீயூஸ் 19.05.2022 பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து காங்கிரஸ் அறப்போராட்டம்.  ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராஜீவ்காந்தி கொலையாளி பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து காங்கிரஸ் அறப்போராட்டம்.  ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.  தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ராஜீவ்காந்தி படுகொலை செய்த குற்றவாளிகள் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வன்முறையை எதிர்ப்போம் என்ற தலைப்பில் வாயில் வெள்ளைத்துணி கட்டி பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற அறவழி போராட்டத்திற்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் சண்முகம், முன்னாள் எம்.எல்.ஏக்கள் சுடலையாண்டி, டேனியல்ராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் போராட்டத்தை தொடங்கி வைத்தார்..      போராட்டத்தில் மாநில இளைஞர் காங்கிரஸ் செயலாளர் நடேஷ்குமார், மாநில செயலாளர் சிந்தியா வைலட்,...

திமுகவை இன்னும் 25 ஆண்டுகள் யாரும் அசைத்து பார்க்க முடியாது அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் சூழுரை

 ஷ்யாம் நீயூஸ் 19.05.2022 திமுகவை இன்னும் 25 ஆண்டுகள் யாரும் அசைத்து பார்க்க முடியாது அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் சூழுரை.   தூத்துக்குடி திமுக திராவிட மாடல் ஆட்சியின் ஓராண்டு நிறைவு சாதனை விளக்க பொதுக் கூட்டம் மாப்பிள்ளையூரணி எம்.ஜி.ஆர் நகர் கலைஞர் திடலில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவரும் நகர கூட்டுறவு வங்கி தலைவருமான சரவணக்குமார் தலைமை வகித்தார். தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய தலைவர் வசுமதி அம்பாசங்கர் முன்னிலை வகித்தார். கிழக்கு ஒன்றிய செயலாளர் மாடசாமி வரவேற்புரையாற்றினார்.       தெற்கு மாவட்ட செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில் முதலமைச்சர் தளபதியார் 24 மணிநேரத்தில் 20 மணி நேரம் உழைக்கிறார்.  தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் பேருந்தில் மகளிருக்கு இலவசம், பால் விலை 3 குறைவு, கொரோனா உதவித்தொகை 4 ஆயிரம், பல சாதனைகளை செய்து 12ம் வகுப்பு முடித்து கல்லூரி செல்லும் மாணவிக்கு மாதம் 1000, ரேசன் பொருட்கள் சீராக விநியோகம், இந்துக்களின் விரோதி திமுக என பிஜேபி கூறுகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பல கோவி...

பிஜேபி பொய் பிரச்சாரத்தை திமுக தகவல் தொழில்நுட்ப அணி முறியடிக்க வேண்டும் .

 ஷ்யாம் நீயூஸ் 18.05.2022 பிஜேபி பொய் பிரச்சாரத்தை திமுக தகவல் தொழில்நுட்ப அணி முறியடிக்க வேண்டும் .    தூத்துக்குடி திமுக தென்மண்டல தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் எட்டையாபுரம் ரோட்டிலுள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாநில துணை செயலாளர் டாக்டர் மகேந்திரன் தலைமை வகித்தார். மாநில துணை செயலாளர் சுப்பிரமணியன், கோவி லெனின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு மாவட்ட செயலாளர் அபிராமிநாதன், வரவேற்புரையாற்றினார்.       திமுக பொதுக்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்து பேசுகையில் உங்களுடைய பணி கடந்த இரண்டு ஆண்டு காலமாக சிறப்பாக நடைபெற்று வருகிறது. திமுகவை பற்றியும் தலைவரை பற்றியும் தவறான கருத்துகளை பதிவிடுபவர்களுக்கு பதிலுரை வழங்கி வருகிறிர்கள். 10 வருடமாக ஆட்சியிலிருந்த அதிமுக செய்யாத சாதனைகளை ஓருவருடத்தில் நம்முடைய முதலமைச்சர் செய்துள்ளார். கொரோனா காலக் கட்டத்தில் அனைவருக்கும் முன் உதாரணமாக இருந்து தடுப்பு ஊசி எடுத்துக்கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதின் காரணமாக கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ள...
 ஷ்யாம் நீயூஸ் 17.05.2022 முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் வீட்டில் சி.பி.ஐ. ரைடு வன்மையாக கண்டிக்கதக்கது தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி. எஸ். முரளிதரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அண்மையில் ராஜஸ்தான் மாநிலத்தி.ல் உள்ள உதய்பூர் நகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற சிந்தனை அமர்வு மாநாடு நிறைவு பெற்று சிலநாட்கள் ஆகிய நிலையில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப சிதம்பரம் அவர்கள் வீட்டில் மத்திய அரசின் கைபாவையான சிபி.ஐ அதிகாரிகளை வைத்து ரெய்டு நடத்தியது மிகவும் கண்டிக்கத்தக்கது மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையையால் நாடு அகல பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது என்பதை தெள்ளதெளிவாக காங்கிரஸ் கட்சி தலைவர் அன்னை சோனியா காந்தி அவர்களிடம் அறிக்கை அளித்திருப்பது மட்டுமே ப.சிதம்பரம் மீது மத்திய மோடி அரசின் கோபத்திற்கு காரணமாக உள்ளது.நாட்டின் இன்றைய நிலையை பொதுமக்களிடம் எடுத்து செல்வதை தடுக்கும் வகையில் இது போன்ற எதற்கும் பயண்படாத சி.பி.ஐ வைத்து அரசியல் தலைவர்களை மிரட்டுவது எந்த விதத்திலும் மத்திய அரசுக்கு பயன் தராது. 2024 ம் ஆண்டை நோக்கி தனது ஆட்சிக்கு மோடி ...

தூத்துக்குடியில் உலக உயர்ரத்த அழுத்த தினத்தை முன்னிட்டு கனிமொழி எம்.பி. அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் சாருஸ்ரீ நடைபயிற்சி மேற்கொண்டனர்.

 ஷ்யாம் நீயூஸ் 17.05.2022 தூத்துக்குடியில் உலக உயர் ரத்த அழுத்த தினத்தை முன்னிட்டு கனிமொழி எம்.பி. அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் சாருஸ்ரீ நடைபயிற்சி மேற்கொண்டனர். தூத்துக்குடி உலக அளவில் உலக உயர் ரத்த அழுத்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் கடற்சாலை ரோச் பூங்கா முன்பு மாநகராட்சி சுகாதாரதுறை மூலம் நடைபெற்ற உயர்ரத்த  அழுத்த பரிசோதனை முகாமை கனிமொழி எம்.பி., சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ ஆகியோர் தொடங்கி வைத்து விழிப்புணர்வு நடைபயிச்சியை கொடியசைத்து துவக்கி வைத்து படகு குழாம் வரை விழிப்புணர்வு நடைபயிற்சியை மேற்கொண்டனர்.      நிகழ்ச்சியில் மாநகராட்சி பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ், (திட்டம்) ரங்கநாதன் உதவி ஆணையர்கள் சேகர், ராமசந்திரன், மாநகராட்சி நகர்நல அலுவலர் அருண்குமார், சுகாதார துறை அதிகாரி ஸ்டாலின் பாக்கியநாதன், மாநகராட்சி மண்டல தலைவர் நிர்மல்ராஜ், மாநகர திமுக ச...

மாப்பிள்ளையூரணி அற்புத ஆரோக்கிய அன்னை சிற்றாலயத்தில் அசன விருந்தை தலைவர் சரவணக்குமார் தொடங்கி வைத்தார்.

 ஷ்யாம் நீயூஸ் 15.05.2022 மாப்பிள்ளையூரணி அற்புத ஆரோக்கிய அன்னை சிற்றாலயத்தில் அசன விருந்தை தலைவர் சரவணக்குமார் தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட குடிசை மாற்று வாரியம் ராம்தாஸ்நகரில் உள்ள அற்புத ஆரோக்கிய அன்னை சிற்றாலயத்தில் 22வது ஆண்டு விழாவை யொட்டி கொடியேற்றம் நடைபெற்று நிறைவு விழாவாக ஆலயத்தில் முதல் திருவிருந்து மற்றும் தாளமுத்துநகர் பங்குதந்தை நெல்சன் ராஜ் அடிகளார் துணை பங்குதந்தை பிபின் அடிகளார் தருவைகுளம் பங்குதந்தை வின்சன்ட் அடிகளார் சிவகங்கை மறை மாவட்டத்தை சேர்ந்த தந்தை பனிமயம் அடிகளார் ஆகியோர் ஜெபம் செய்து முதல் திருவிருந்து எடுத்து கொண்ட சிறுவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டு பின்னர் நடைபெற்ற அசனவிருந்தை மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு வங்கி கடன்சங்க தலைவருமான சரவணக்குமார் தொடங்கி வைத்தார்.     விழாவில் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, ராம்தாஸ்நகர் இணைச்செயலாளர் செல்வம், நிர்வாகிகள் ஜோசப்தாஸ், ராஜேஷ், ஞானசேகர், ஜோசப் செல்வகுமார், மாய பென்சிகர், பொன்சிங்ராஜா, முன்னாள் பொருளாளர் ராஜா, திமுக கிளைச்ச...

தூய்மை சுகாதாரம் பசுமை வளர்ச்சி தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அதிரடி நடவடிக்கை

 ஷ்யாம் நீயூஸ் 15.05.2022 தூய்மை சுகாதாரம் பசுமை வளர்ச்சி தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அதிரடி நடவடிக்கை தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பெரியசாமி பதவியேற்கும் போது இந்த பொறுப்பை எனக்கு வழங்கிய முதலமைச்சர் தளபதிக்கும் கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன், ஆகியோருக்கும் நன்றியை தெரிவித்து கடந்த காலத்தில் நகர்மன்ற தலைவராக பணியாற்றிய தனது தந்தை பெரியசாமி பணிகளையும் நினைவில் கொண்டு பொறுப்பேற்றுக் கொண்ட நாள் முதல் மாநகரின் வளர்ச்சிக்கு அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் செந்தில்ராஜ், ஆணையர் சாருஸ்ரீ, ஆகியோருடன் பல்வேறு ஆலோசனைகளை பெற்று அதிகாரிகள் ஊழியர்கள் அரவணைத்து மாநகரில் உள்ள 60 வார்டு பகுதிகளிலும் மக்களின் குறைகளை தீர்ப்பதற்கு குறைதீர்க்கும் வாட்சப் எண்கள் பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்டு அதன் மூலம வரும் புகார்கள் குறைகள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் பணியாளர்களுக்கு உத்தரவு இடப்பட்டு தனது அழைபேசிக்கும் வரும் புகார்கள் குறைகள் குறித்து தனது உதவியாளர்களிடம் தகவல்கொடுக்கப்பட்டு நேரடியாக பல இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொள்வது மட்டுமின்றி பொ...

ஏபிசி மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

 ஷ்யாம் நீயூஸ் 15.05.2022 ஏபிசி மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் மருத்துவ முகாம் நடைபெற்றது. தூத்துக்குடி ஏபிசி மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் செஞ்சுருள் சங்கம் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அணி எண் 47 மற்றும் 57 சார்பாக ஓரு நாள் மருத்துவ முகாம் நடைபெற்றது. செஞ்சுருள் சங்கத்திட்ட அலுவலர் பேராசிரியர் வசந்த சேனா வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் மீனாகுமாரி வாழ்த்துரை வணங்கினார்.     நிகழ்ச்சியில் மருத்துவ துறை சுகாதார துணை இயக்குநர் பொற்செல்வன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்லீரல் ஓவ்வாமை நோயின் தன்மைகளையும் குணமாக்கும் வழிமுறைகளையும் மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். மாநகர நகர் நல அதிகாரி அருண்குமார், சுகாதாரம் முக்கியத்துவத்தை குறித்து எடுத்துரைத்தார். தொழில்நுட்ப அதிகாரி மதுரம் பிரைட்டன் ரத்ததானத்தில் முக்கியத்துவத்தையும் டாக்டர் வேனுகா புகையிலை பயன்படுத்துவதால் தீய விளைவுகளை பற்றி மாணவிகளுக்கு எடுத்துக் கூறினார்கள்.      முகாமில் 210 பேருக்கு நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் ஆசிரியர் அல்லாத அலுவலர்களுக்கு இரத்த அனுக்களில் எண்ணிக்கை கண்டறியும் சோதனை நடத...

தூத்துக்குடி எம்.ஜி.ஆர் பூங்கா ராஜாஜி பூங்கா திரேஸ்புரம் பகுதியில் தூய்மை பணி அமைச்சர் கலெக்டர் மேயர் ஆணையர் துவக்கி வைத்தனர்.

ஷ்யாம் நீயூஸ் 14.05.2022  தூத்துக்குடி எம்.ஜி.ஆர் பூங்கா ராஜாஜி பூங்கா திரேஸ்புரம் பகுதியில் தூய்மை பணி அமைச்சர் கலெக்டர் மேயர் ஆணையர் துவக்கி வைத்தனர்.  தூத்துக்குடி தமிழக அரசின் ஆணைக்கிணங்க மாதத்தின் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமை தோறும் பொதுமக்கள் மற்றும் தன்னார்வ நிறுவனங்களுடன் இணைந்து தூய்மை பணியை நிறைவேற்றும் விதமாகவும் பொதுமக்கள் மற்றும் இளம் தலைமுறையினருக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் தமிழ்சாலையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் பூங்காவில் தூய்மை படுத்தும் பணிகளையும் தேசிய தூய்மை காற்று திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை பணிக்காக வாங்கப்பட்டுள்ள நான்கு டாடா ஏசி வாகனங்களையும் கொடியசைத்து சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் சாரூஸ்ரீ ஆகியோர் துவக்கி வைத்து பொதுமக்கள் வர்த்தக நிறுவனங்கள் தன்னார்வலர்கள் தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை ஓருங்கிணைந்து நடைபெற்ற தூய்மை பணிகளை பார்வையிட்டனர்.      நிகழ்ச்சி...

திமுக எம்எல்ஏ சண்முகையா நடவடிக்கை தூத்துக்குடி சார் பதிவாளர் பணி நீக்கம் செய்யபட்டார் .

 ஷ்யாம் நீயூஸ் 13.05.2022 திமுக எம்எல்ஏ சண்முகையா நடவடிக்கை தூத்துக்குடி சார் பதிவாளர் பணிநீக்கம் செய்ய பட்டார். தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட தெற்கு சிலுக்கபட்டி, வடக்கு சிலுக்கன்பட்டி கிராமத்தை சுற்றி வீட்டு மனை மற்றும் விவசாய நிலம் சுமார் 2,200 ஏக்கர் தனிநபருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்த நிலையில் நேற்று தெற்கு சிலுக்கன்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர் இதனைத்தொடர்ந்து இச்சம்பவத்தைக் கேள்விப்பட்ட ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா  விபரத்தை அறிந்து மாவட்ட பதிவாளரை தொடர்பு கொண்டு விசாரணை நடத்தினார் விசாரணையில் தவறு நடந்திருப்பது கண்டறியப்பட்டது இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி புதுக்கோட்டை சார்பதிவாளர் மோகன்தாஸ் தற்காலிக பணி நக்கம் செய்யப்பட்டுள்ளார் மற்றும் தனிநபருக்கு 2,200 ஏக்கர் பவர் பதிவு செய்ததை செல்லாது என்று ஆணை வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது இன்று முதல் புதுக்கோட்டைக்கு புதிய சார்பதிவாளர் பணிக்குபுதியவர் நியமிக்கபடுவார்  என தெரிகிறது.

தூத்துக்குடி மாநகர திமுக பிரமுகர் அருண்குமார் மனித நேய பணிகள்

 ஷ்யாம் நீயூஸ் 13.05.2022 தூத்துக்குடி மாநகர திமுக பிரமுகர் அருண்குமார் மனித நேய பணிகள்     தூத்துக்குடி அரசியல் கட்சிகளில் இருப்பது பெருமை அதிலும் மனித நேயத்தோடு பணியாற்றுவது அதைவிட பெருமையானது திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி, வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், திமுக பொதுக்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், ஆகியோர் ஆலோசனைபடி வடக்கு மாவட்ட திமுக விற்குட்பட்ட நிர்வாகிகள் திமுக ஆட்சி அமைவதற்கு முன்பு கொரோனா காலக்கட்டத்தின் போது மனித நேயத்தோடு கீதாஜீவன் பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை மேற்கொண்டார். அவரை பின்பற்றி பல்வேறு அணியை சேர்ந்த நிர்வாகிகள் உதவி புரிந்தனர். மாநகர திமுக மருத்துவ அணி செயலாளர் அருண்குமார், கொரோனா காலக்கட்டத்தில் மு.க.ஸ்டாலினிடம் வழங்குவதற்கு என்று கீதாஜீவனிடம் 50 ஆயிரம் காசோலை வழங்கினார். பல்வேறு ஏழை எளியவர்களுக்கு அரிசியும் வழங்கி அரசியலில் நேர்மையாக முறையில் பணியாற்றி வரும் அருண்குமார் கோடைகாலத்தை முன்னிட்டு தனது அ...

தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதியை அவதூராக பேசிய நபரின் முன்ஜாமீன் மனு டிஸ்மிஸ்..

 ஷ்யாம் நீயூஸ் 12.05.2022 தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர்  கனிமொழி கருணாநிதியை அவதூராக பேசிய நபரின் முன்ஜாமீன் மனு டிஸ்மிஸ்.. தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர்  கனிமொழி கருணாநிதியை அவதூராக பேட்டி அளித்த காந்தி மள்ளர் என்பவர் மீது ஜாதி பிரிவினையை தூண்டியாதாக திமுக பிரமுகர் மகேஸ்வரன் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. காந்தி மள்ளர் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் விடுமுறை நீதிபதியிடம் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார்,மனு 12.5.22 அன்று விசாரணைக்கு வந்தபோது, மாவட்ட அரசு குற்றவியல் வழக்கறிஞர் மோகனதாஸ் சாமுவேல், அவதூறு பேசிய காந்தி மள்ளர் என்பவருக்கு முன்ஜாமீன் வழங்க கடும் ஆட்சேபனை செய்தார்.  நீதிபதி சுவாமிநாதன் அவதூறு பேசிய காந்தி மள்ளரின் முன்ஜாமீன் மனுவை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார் ..

கல்லூரி முதல்வரை மாற்ற தென்காசி மாவட்ட கலெக்டருக்கு இசக்கிராஜா தேவர் வேண்டுகோள்.

 ஷ்யாம் நீயூஸ் 12.05.2023 கல்லூரி முதல்வரை மாற்ற தென்காசி மாவட்ட கலெக்டருக்கு இசக்கிராஜா தேவர் வேண்டுகோள்.    தூத்துக்குடி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்க நிறுவன தலைவர்  இசக்கிராஜா தேவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலநீலிதநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி முதல்வரை உடனடியாக பணி மாறுதல் செய்ய வேண்டும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் 12 மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும்.     கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிஎம்டி கல்லூரி  மாணவர்கள் தங்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற கோரி வகுப்புகளை  புறக்கணிப்பு செய்தனர். அதில் பங்கு பெற்ற மாணவர்கள் மீது கல்லூரி முதல்வர் ஹரிகெங்காரம் தன்னுடைய முறைகேடுகள் மற்றும்  மோசடிகளை மறைப்பதற்காக  சதி  திட்டமிட்டு மாணவர்களுடன்  மோதலை உருவாக்கிவிட்டார். மேலும் மாணவர்கள்   மீது  காவல் துறையில்  பொய்யான புகார் கொடுத்து அவர்கள் மேல்  வழக்குகளை பதிவு செய்ய வைத்தார்.      கல்லூரியின்  முதல்வர் தன...

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது.

 தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்புதுக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றியஅலுவலகத்தில் நடைபெற்றது,ஒன்றியசோ்மன் அ.வசுமதி அம்பாசங்கா் தலைமை வகித்தார் யூனியன் ஆணையாளர் ராமராஜ்,வட்டாரவளர்ச்சி அலுவலர் நாகராஜன்,ஒன்றிய பொறியாளர் தளவாய்,உதவி பொறியாளர்கள் பல்வேறு அரசுத் துறையினர் முன்னிலை வகித்தனா், ஒன்றிய மேலாளர் மாசாணம் வரவேற்றார்,கூட்டத்தில் 27வகையான பொருட் குறிப்புகள் வாசிக்கப்பட்டது. அப்போது ஒன்றிய சேர்மன் வசுமதி அம்பாசங்கர் பேசுகையில், தூத்துக்குடி ஒன்றியம் கோரம்பள்ளம் ஊராட்சி அன்னை சதுக்கம் குறுக்கு தெருவில் பேவர் பிளாக் சாலை அமைத்தல்,முள்ளக்காடு ஊராட்சி நேசமணி நகரில் ஒரு கீ.மீ தூரம் தார் சாலை அமைத்தல்,மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் சுகாதாரப் பணிகள் மேற்கொண்டது உட்பட வளா்ச்சி திட்டப்பணிகள் குறித்து பேசினார்.தொடர்ந்து கூட்டத்தில் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் கவுன்சிலா்இரா.அந்தோணிதனுஸ்பாலன்  எழுப்பிய கேள்விகளுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜன் மற்றும்...

தூத்துக்குடி மாதாநகர் சந்தனமாரியம்மன் திருக்கோவில் வருஷாபிஷேக விழாவையொட்டி மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

 ஷ்யாம் நீயூஸ் 10.05.2022 தூத்துக்குடி மாதாநகர் சந்தனமாரியம்மன் திருக்கோவில் வருஷாபிஷேக விழாவையொட்டி மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.  தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சிகுட்பட்ட மாதாநகர் சந்தனமாரியம்மன் திருக்கோவில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு காலையில் மங்கள இசை, விக்னேஷ்வர பூஜை, புண்யாக வாசனம், பஞ்சகவ்யம், வேதிகார்ச்சனை, மூல மந்திரம் ஹோமம், திரவ்யாகுதி, வசுத்தாரா, வஸ்திராகுதி, மஹா பூர்ணாகுதி நடைபெற்றது.       சந்தனமாரியம்மன் திருக்கோவில் விமான கோபுரங்கள் மற்றும் மூலஸ்தானம் மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கு மகா வருஷாபிஷேக விழா நடைபெற்று மஹா தீபாராதணை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற அன்னதானத்தை மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார், தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி மாவட்ட செயலாளர் ரவி என்ற பொன்பாண்டி, தொழிலதிபர் சந்தனராஜ், ஆகியோர் அன்னதானத்தை தொடங்கி வைத்தனர்.      விழாவில் தொழிலதிபர் கே.பி. செல்வா, ஒன்றிய கவுன்சிலர் முத்துமாலை, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ...

தர்மபுரம் பட்டின பிரவேசம் தடையை நீக்கிய முதல்வருக்கு கோரம்பள்ளம் சித்தர் நன்றி தெரிவித்தார்

 தர்மபுரம் பட்டின பிரவேசம் தடையை நீக்கிய முதல்வருக்கு கோரம்பள்ளம் சித்தர் நன்றி தெரிவித்தார். 'குருவுக்கு செய்யும் சேவை'' என்ற உயர்ந்த தத்துவத்தின் அடிப்படையில் தருமபுரம் ஆதீனத்தின் பாரம்பரியம்மிக்க பட்டினப் பிரவேசத்திற்கு விதிக்கப்பட்ட தடையை கோரிக்கையின் அடிப்படையில் நீக்கி, உரிய அனுமதி வழங்கியுள்ள தமிழக அரசுக்கு தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் ''சாக்தஸ்ரீ'' சற்குரு சீனிவாச சித்தர் நன்றியுடன் பாராட்டு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி, கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-மஹா காலபைரவர் சித்தர் பீடத்தின் சுவாமிகள் ‘சாக்தஸ்ரீ’ சற்குரு சீனிவாச சித்தர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அனுப்பியுள்ள பாராட்டு கடிதத்தில் கூறியிருப்பதாவது, மறைந்த தமிழக முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களது வழியில், தமிழகத்தின் முதல்வராக தாங்கள் சிறப்பான ஆட்சி புரிந்து வருவது மகிழ்ச்சிக்கு உரியதாகும். தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப்பிரவேசம் ஆன்மிக நிகழ்ச்சியானது ''குருவுக்கு சிஷ்யர்கள் செய்யும் சேவை'' என்ற வாழ்வின் உய...

அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வீரசக்க தேவி அம்மன் கோவிலை தமிழக அரசின் அறநிலைத்துறை நிர்வகிக்க வேண்டும். வீரபாண்டிய கட்டபொம்மன் வாரிசுகள் கலெக்டருக்கு கோரிக்கை

 ஷ்யாம் நீயூஸ் 09.05.2022 அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வீரசக்க தேவி அம்மன் கோவிலை தமிழக அரசின் அறநிலைத்துறை நிர்வகிக்க வேண்டும். வீரபாண்டிய கட்டபொம்மன் வாரிசுகள் கலெக்டருக்கு கோரிக்கை தூத்துக்குடி வீரபாண்டிய கட்டபொம்மன் நேரடி வாரிசுகளான வீமராஜா, வீரசக்கம்மாள், ராஜமல்லம்மாள், பாஞ்சாலம்மாள், இந்துமதி, ரவீந்திரன், முத்துக்குமார், ஆகியோர் கலெக்டர் செந்தில்ராஜுடம் அளித்த மனுவில் வீரபாண்டியன் கட்டபொம்மன் நேரடி வாரிசுகள் பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள சந்ததியினர் குடியிருப்பில் வாழந்து வருகிறோம். பாஞ்சாலங்குறிச்சி, தொல்லியல் துறை கட்டுபாட்டில் இருக்கும் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டையை பழைய பாரம்பரிய நினைவு சின்னங்களை அழிப்பது சேதப்படுத்துவது மற்றும் தொல்லியல்துறை விதிகளை மீறி கட்டடம் கட்டுவது போன்ற பல விதிமுறைகளை முருகபூபதி சில ஆதரவாளர்களை வைத்துக் கொண்டு செய்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு கோட்டையில் இருக்கும் வீரசக்க தேவி அம்மன் கோவில் முன்பு அகழாய்வு செய்யப்பட்டு எடுத்த 3 அடி பழைய செங்கல் கட்டிடத்தை பூங்கா அமைக்கிறேன் என்று முழுவது தகர்த்து விட்டார்கள். தனியாக ஒரு குழு அ...