தொழிலாளர் உரிமைகளை பாது காத்திடுட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்தல் !
தமிழ் எக்ஸ்பிரஸ் நியுஸ்(AMMA ARASU)
25 செப்டம்பர் 2018
தொழிலாளர் உரிமைகளை பாது காத்திடுட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்தல் !
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது .
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஏராளமான தொழிற்சாலைகள் உருவாகி வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. பன்னாட்டு நிறுவனங்களில் உருவாகும் வேலைவாய்ப்புகள் நிரந்தரமானதாக, சங்கம் வைக்கும் உரிமை, கூட்டுப்பேர உரிமைகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டு என்பதை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கார், மோட்டார் பைக் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் உதிரிபாக உற்பத்தி நிறுவனங்கள் ஆலைகளை செயல்படுத்தி வருகிறது. 20 முதல் 50 சதவிகிதம் தொழிலாளர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பையும், மற்றவர்களுக்கு காண்ட்ராக்ட் அடிப்படையிலும் வேலைவாய்ப்பு உள்ளது. சங்கம் வைக்கும் உரிமை, கூட்டு பேர உரிமை மறுக்கப்பட்டு வருகிறது. அடிப்படையான இந்த உரிமைகள் மறுக்கப்படுவது ஜனநாயக உரிமை பறிப்பு செயலாகும் .
யமஹா ஜப்பான் நாட்டு நிறுவனம், இங்கு பணிபுரியும் 800க்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்களிடையே, தொழிற்சங்கம் வைத்ததற்காக, 2 நிர்வாகிகள் எந்த முன்னறிவிப்பும் இன்றி சட்டவிரோதமாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து தொழிலாளர்கள் 3 நாட்களாக உள்ளிருப்பு வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். அதே போல எம்.எஸ்.ஐ. என்ற கொரிய நிறுவனத்தில் 17 நாட்களாக வேலைநிறுத்தம் நடந்து வருகிறது. நிரந்தர தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை தொடர்ந்து ஆலைக்குள் பயிற்சி, காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் உற்பத்தியில் ஈடுபடுத்தப்படுவதால், விபத்துகள் நடைபெறுவது அதிகரித்துள்ளது. இதை தடுத்து, தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாப்பதில் தமிழக அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும் ,
எனவே : மேற்கண்ட பிரச்சனைகளில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு சம்பள உயர்வு உள்ளீட்ட அடிப்படை கோரிக்கைகளை தீர்த்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் . என்று காயல் அப்பாஸ் கூறியுள்ளார் .