ஜெயலலிதா வீட்டில் 2016 செப்டம்பர் 22-ந்தேதி நடந்தது என்ன?
'ஜெயலலிதா வீட்டில் 2016 செப்டம்பர் 22ஆம் தேதி நடந்தது என்ன?'
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டில் 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி நடந்தது என்ன? என்ற மர்மங்களை வெளிப்படுத்த வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் கூறினார்
"ஆணையத்தில் நான் ஏற்கனவே அளித்த சாட்சியத்தின் தொடர்ச்சியாக சில சந்தேகங்களை எழுப்பினேன். போயஸ் கார்டனில் ஜெயலலிதா கீழே விழுந்தார் என்பது சாட்சியங்களின் அடிப்படையில் நிரூபணமாகி இருக்கிறது. போயஸ் கார்டனில் இருந்து ஜெயலலிதாவை ஆம்புலன்சில் கொண்டு சென்றது யார்? ஆம்புலன்சுக்கு போன் செய்தது யார்? என்ற மர்மம் நீங்கவில்லை.
போயஸ் கார்டனில் ஜெயலலிதா கீழே விழுந்த போது, வீட்டின் உள்ளே சசிகலாவுடன் 2 பணிப்பெண்கள் இருந்துள்ளனர். அந்த பணிப்பெண்கள் எங்கே? அவர்கள் ஏன் விசாரிக்கப்படவில்லை. அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதாவை பார்க்க சசிகலாவும், அவரது குடும்பத்தினரும் யாரையும் அனுமதிக்கவில்லை என்பதை எடுத்துரைத்துள்ளேன்.
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
ஆம்புலன்சில் சென்றபோது, ஜெயலலிதா மயங்கிய நிலையில் எடுத்து சென்றதாக சாட்சியங்கள் கூறி உள்ளனர். இது சசிகலா சொன்ன வாக்குமூலத்துக்கு எதிராக உள்ளது. சசிகலாவின் பிரமாண பத்திரத்தில், ஆம்புலன்சில் சென்றபோது, ஜெயலலிதா "நான் எங்கே போகிறேன்" என்று கேட்டதாக குறிப்பிட்டு உள்ளார். மயக்க நிலையில் அப்பல்லோ ஆஸ்பத்திரி வரை கொண்டு செல்லப்பட்டதாக மற்றவர்கள் குறிப்பிட்டுள்ளனர்." என்று நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகிய பின் செய்தியாளர்களிடம் மனோஜ் பாண்டியன் பேசி உள்ளார்.
'பெண் வக்கீலுக்கு பாலியல் தொல்லை'
பெண் வக்கீலுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சத்தியமங்கலம் மாஜிஸ்திரேட்டு பணிஇடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார் .
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
"சத்தியமங்கலம் கோர்ட்டில் திருமணம் ஆன இளம்பெண் ஒருவர் வக்கீலாக பணியாற்றி வருகிறார். அந்த பெண்ணுக்கு மாஜிஸ்திரேட்டு ராஜவேலு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இந்த நிலையில் ஒருநாள் ராஜவேலு செல்போனில் பாலியல் ரீதியாக பேசியதை பெண் வக்கீல் பதிவு செய்துகொண்டார். அதன்பின்னர் அந்த பேச்சு பதிவையும், நடந்தவைகளையும் மனுவாக எழுதி சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளிடம் புகார் அளித்தார். இதுபற்றி ராஜவேலுவிடம் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் தொடர்ந்து விசாரணை நடத்த உள்ளனர். அதன்பின்னர் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது."
'கருணாஸின் எம்எல்ஏ பதவிக்கு ஆபத்து'
கருணாஸின் எம்எல்ஏ பதவிக்கு ஆபத்து இருப்பதாக அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார் .
படத்தின் காப்புரிமைYOUTUBE
"சட்டத்தின் முன் அனைவரும் சமம். கருணாஸைப் பொறுத்தவரை ஜாதிக் கலவரத்தை தூண்டும் வகையில் அவரது பேச்சு இருந் தது. இதை ஆரம்ப நிலையிலேயே களையெடுக்க வேண்டும். சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் மொழி, ஜாதி, மதப் பிரச்சினை இல்லை. சட்டப்பேரவை உறுப்பினர் பொறுப்பு மிகப்பெரியது. அரசியலமைப்பு சட்டப்படி பதவி யேற்றவர்கள் அதை மதிக்க வேண் டும். பதவியேற்கும்போது ஜாதி மதத் துக்கு அப்பாற்பட்டவனாக இருப்பேன் என்றுதான் பதவி ஏற்கின்றனர். அதை அவர் கடைபிடிக்கவில்லை.
இந்த போக்கால் அவரது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியே கேள்விக்குறியாகி உள்ளது. அவர் ஏன் சட்டப்பேரவை உறுப்பினராக நீடிக்க வேண்டும் என்று மற்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்புகின்றனர். பால்தாக்கரே ஒருமுறை இதுபோன்ற கருத்தை கூறியபோது, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி பால்தாக்கரேவின் ஓட்டுரிமை பறிக்கப்பட்டது." என்று அவர் கூறி உள்ளார்.
'குட்கா ஊழல்: தமிழக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி கைது'
குட்கா வழக்கில் சி.பி.ஐ அதிகாரிகள் திங்கட்கிழமை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி இ சிவக்குமாரை கைது செய்துள்ளனர் . இந்த வழக்கில் இது ஆறாவது கைதாகும். சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிவகுமாருக்கு அக்டோபர் 4-ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிடப்பட்டு உள்ளது .
'மூச்சுத் திணறுகிறது!'
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஒரு பெண் உட்பட 10 துப்புரவுத் தொழிலாளிகள் கழிவுநீர் தொட்டிகளையும், கழிவுநீர் வடிகால்களையும் துப்புரவு செய்யும்போது விஷவாயு தாக்கி இறந்திருக்கிறார்கள். எந்தவிதப் பாதுகாப்புக் கவசமும் இல்லாமல் கழிவுநீர்த் தொட்டியில் இறங்கியதால்தான் அவர்கள் மரணமடைய நேரிட்டது என்கிறது தினமணி நாளிதழ் தலையங்கம்.
"நம்மால் செவ்வாய் கிரகத்துக்கும் சந்திரனுக்கும் விண்வெளிக்கலங்களை செலுத்தும் அளவுக்குத் தொழில்நுட்ப முன்னேற்றம் அடைய முடிந்திருக்கிறது என்பது பெருமைக்குரிய சாதனைதான். ஆனால், துப்புரவுத் தொழிலாளர்களுக்கு விஷவாயு தாக்காமல் இருப்பதற்கான அடிப்படைப் பாதுகாப்புக் கவசங்களைக்கூட வழங்க முடியாத நிலைமை காணப்படுவது எத்தகைய நகைமுரண்? எந்தவித பாதுகாப்புக் கவசமும் இல்லாமல் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலம் தொடரும் வரை, தூய்மை இந்தியா திட்டமும், கழிப்பறைகள் கட்டும் திட்டமும் நடைமுறைப்படுவதில் மகிழ்ச்சியடைய என்ன இருக்கிறது? இந்தியா எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்னை துப்புரவுத் தொழிலாளர்களின் மரணம்தான். இது தொடரும் வரை மானுட சமுதாயத்தின் முன்னால் நமக்குத் தலைகுனிவுதான்."
ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள், 2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய பணியாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை பெற்றுள்ளார் என்ற குற...
ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...
ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல் தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு பணிகளை வழ...