முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்திய விவசாயிகளின் கண்ணீரைக் கண்ட ஜப்பான், புல்லட் ரயில் நிதி மறுப்பு உண்மையா?

தமிழ் எக்ஸ்பிரஸ் நியுஸ்(AMMA ARASU)
26 SEP 2018


 ஜப்பானிடம் இருந்து 7000 கோடி ரூபாய்க்கு 18 புல்லெட் ரயில்களை வாங்கும் இந்தியா! 
 இந்திய விவசாயிகளின் அவலக் குரலை, நிர்வாண நிலையை, ஆதரவற்ற அறுவடைகளை இந்திய அரசு கேட்டதோ இல்லையோ, ஜப்பான் அரசு கேட்டிருக்கிறது. விளைவு இந்தியாவின் புல்லட ரயில் திட்டத்துக்கு வழங்கி வந்த நிதியை தற்காலிகமாக நிறுத்திக் கொண்டது. புல்லட் ரயில் திட்டம் குஜராத் மாநிலத்தின் அஹமதாபாத்தில் இருந்து, மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பை வரையிலான அதிவேக புல்லட் ரயில் திட்டம் வரும் ஆகஸ்ட் 2022-ல் தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்தை 2020க்குள் முடிக்க திட்டமிடப்பட்டு, நிலம் கையகப்படுத்துதல், ஜப்பானில் இருந்து நிதி உதவி வரும் தவனைகளைக் கணக்கில் கொண்டு 2022க்கு ஒத்தி வைக்கப்பட்டது. மொத்த பட்ஜெட் இந்த 508 கிலோமீட்டர் புல்லட் ரயில் திட்டத்தைச் செயல்படுத்த சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும் என்று Natioanal High Speed Rail Corporation Limited (NHSRCL) என்கிற இந்திய அரசு அமைப்பு கணக்கிட்டுச் சொன்னது. இந்த NHSRCL இந்தியாவில் புட்டல் ரயில் திட்டம் தொடர்பான விஷயங்களைக் கையாள்கிறது. ஜப்பானின் Japan International Cooperation Agency (JICA) என்கிற அமைப்பு புல்லட் ரயில் திட்டத்துக்கான நிதியில் 80,000 கோடி ரூபாய் வரையான நிதியை வழங்க ஒப்புக் கொண்டது. விவசாயிகள் போராட்டம் ரயில் பாதையின் நீளம் 508 கிலோமீட்டர். அதில் 110 கிலோமீட்டர் பல்கார் என்கிற மகாராஷ்டிர ஊருக்குள் செல்கிறது. புல்லட் ரயிலுக்குத் தேவையான பல்கார் பகுதி நிலத்தைக் கையகப்படுத்த அரசுத் தரப்பு வந்த போது ஊர் மக்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். அதே போல் குஜராத்தின் எட்டு மாவட்டங்களில் இருந்து சுமாராக 850 ஹெக்டேர் நிலத்தைக் கையகப்படுத்த வேண்டி இருக்கிறது. இதற்கும் குஜராத் விவசாயிகளும் மிகக் கடுமையாக தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறார்கள். நிலுவையில் வழக்கு குஜராத் மற்றும் மகாராஷ்டிர விவசாயிகள் தங்கள் நிலத்தைக் காப்பாற்றித் தரும் படி குஜராத் உயர் நீதி மன்றத்தை நாடி இருக்கிறது. சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று நின்றுவிடாமல், விவசாயிகள் ஒரு படி மேலே போய், புல்லட் ரயிலுக்கு நிதி கொடுக்கும் ஜப்பானின் JICA அமைப்புக்கு இந்திய விவசாயிகள் பிரச்னை குறித்து ஒரு கடிதத்தையும் எழுதி இருக்கிறார்களாம். இதை பிஜேபியினரும் ஒப்புக் கொண்டார்கள். இதுவரை எல்லாமே உண்மை தான். ஆனால் இனி வருவது எல்லாம் நடந்ததா இல்லையா என உறுதியான செய்திகள் வெளியாகவில்லை. தவனைகள் ரத்து ஜப்பானின் JICA அமைப்பு விவசாயிகளின் கடிதத்தைப் பார்த்துவிட்டு மேற்கொண்டு கொடுக்க வேண்டிய தவனைகளை ரத்து செய்திருக்கிறதாம். இதுவரை JICA இடம் இருந்து வெறும் 125 கோடி ரூபாய் மட்டுமே வந்திருக்கிறதாம். "இந்திய விவசாயிகள் பிரச்னைக்கு ஒரு தீர்வு கண்டுவிட்டு இந்த திட்டத்துக்கான் நிதியை கேட்கலாம் என்று சொல்லி இருக்கிறதாம் ஜப்பானின் JICA".ஜப்பானின் இந்த பதிலுக்குப் பின் ஒரு தனி கமிட்டி அமைத்து விவசாயிகள் பிரச்னையை தீர்குமாறு பிரதமர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்திருக்கிறது என நிதி அமைச்சக வட்டாரங்கள் சொல்கின்றன. நஷ்ட ஈடு உயர்த்த முடியாது இந்த நிலங்களை கைப்பற்றியே ஆக வேண்டும். இந்த ரூட்டைத் தவிர வேறு ரூட் எடுப்பது எல்லாம் புல்லட் ரயிலின் பட்ஜெட்டைப் பாதிக்கும். அதோடு நிலங்களுக்கான நஷ்ட ஈடும் உயர்த்த முடியாது. அப்படி உயர்த்தினாலும் புல்லட் ரயிலின் பட்ஜெட் இடிக்கும் என்று செய்திகள் கசிகின்றன. NHSRCL மறுப்பு NHSRCL அமைப்பும், மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயலும் இந்த செய்திகளை மறுக்கின்றனர். எங்களுக்கு ஜப்பானிடம் இருந்து வர வேண்டிய நிதி முழுவதும் வந்துவிட்டது" என்கிறார்கள். ஆனால் அதற்கான எந்த ஒரு ஆதாரத்தையும் பத்திரிகையாளர்களிடம் சமர்பிக்கவில்லை .

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...