"தமிழ் எக்ஸ்பிரஸ் நியுஸ்
20.092018
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 1,000 கோடி ஊழலா?

தமிழத்தின் அனல்மின் உற்பத்திக்காக இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியை கப்பலிலிருந்து வெளியே கொண்டுவந்து விநியோகித்த தனியார் நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்ட பணியில் சுமார் 1,000 கோடி ரூபாய் அளவுக்கு அதிகமாக பணத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் செலவு செய்துள்ளதை போன்று தவறாக கணக்கு காட்டியுள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு வந்த நிலக்கரியை கப்பலிலிருந்து இறக்கி விநியோகிப்பதற்கு ஒப்பந்ததாரர் துறைமுகத்திற்கு 239 கோடி ரூபாய் மட்டுமே செலுத்தியுள்ள நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியம் 1,267 கோடி அந்த பணிக்கு செலவிடப்பட்டதாக கணக்கு காண்பித்துள்ளதாக அறப்போர் குற்றஞ்சாட்டியுள்ளது.
மேலும், போதிய ஆவணங்கள் இல்லாமலே இந்த தொகை செலவிடப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.