- தூத்துக்குடி 18செப் 2018:
தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமம் காலாங்கரை இங்கு சுமார் 300 குடும்பங்களுக்கும் அதிகமான மக்கள் வாழ்ந்து வருகின்றனர் .கோரம்பள்ளம் பாளை ரோட்டில் இருந்து காலாங்கரை வழியாக அத்திமரப்பட்டி முத்தையாபுரம் வழியாக திருச்செந்தூர் சாலையை எளிதில் அடைந்து விடலாம் .அதனால் இந்த சாலையில் காலாங்கரை கிராமத்திற்கு வரும் அரசு பேருந்து, பள்ளி மாணவ மாணவிகளை அழைத்து செல்ல வரும் பள்ளி பேருந்துகள் மற்றும் விவசாய விலை பொருட்களை ஏற்றி இறக்க வரும் லாரிகள் அதிகமாக வந்து போகும் பகுதியாகும் .கோரம்பள்ளம் காலாங்கரை சாலை நெடுகிலும் மின்சாரவயர் தாழ்ந்த நிலையில் உள்ளது .மற்றும் அரசு பேருந்து மேல் வயர்கள் உரசி உள்ளது நல்ல வேலையாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை . மற்றும் தினமும் காற்றில் வயர்கள் உறசி தீப்பற்றி எரிகிறது இரவுநேரத்தில் ரோட்டில் நடக்கவே திக் திக் என்று இருக்கிறது .இந்த அரசு பேருந்தில்தான் அதிகமான மாணவ மாணவிகள் வந்து செல்வார்கள் .தற்பொழுது அரசு பேருந்து காலாங்கரை வரமுடியாத சூழல் இருப்பதால் பள்ளி கல்லூரிகளுக்கு மாணவர்கள் செல்லமுடியாத நிலை உள்ளது .புதுக்கோட்டை மின்சாரத்துரை அதிகாரிகள் உடனடியாக சரிசெய்து தர வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் வைத்தனர் .