முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கடும் மின்பற்றாக்குறையை நோக்கிச் செல்கிறதா தமிழ்நாடு?

கடும் மின்பற்றாக்குறையை நோக்கிச் செல்கிறதா தமிழ்நாடு?


தமிழ்நாட்டில் சென்னை தவிர்த்த சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. தமிழகத்தின் அனல் மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்கிறது தமிழக அரசு. மீண்டும் மின் பற்றாக்குறையை எதிர்நோக்குகிறதா தமிழ்நாடு.
தமிழ்நாடுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
தமிழ்நாட்டில் சென்னையைத் தவிர்த்த சில பகுதிகளில் கடந்த செப்டம்பர் 9, 10, 11 ஆகிய நாட்களில் மின்வெட்டு இருந்தது. ஆனால், இந்த மின் வெட்டு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. மாநில மின்வாரியத்தின் மின்சார உற்பத்தி அட்டவணையிலும் இந்த மின்வெட்டு குறித்த தகவல்கள் இடம்பெறவில்லை.
இதுகுறித்துப் பதிலளித்த மின்துறை அமைச்சர் தங்கமணி, "கடந்த 10, 11-ஆம் தேதிகளில் காற்றாலை மூலம் பெறப்படும் மின்சாரத்தின் அளவு மிகவும் குறைந்து விட்டது. பராமரிப்பு பணிகளுக்காக கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. வல்லூர் அனல் மின்நிலையத்திலும் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்தக் காரணங்களால் தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது தற்காலிகமானது" என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் செப்டம்பர் 14ஆம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோதிக்குக் கடிதம் எழுதிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, தமிழ்நாட்டில் உள்ள அனல் மின் நிலையங்களில் அடுத்த மூன்று நாட்களுக்குத் தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பில் உள்ளதாகவும் உடனடியாக நிலக்கரியை அதிகரித்து வழங்காவிட்டால் அனல் மின் நிலையங்களை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்றும் குறிப்பிட்டார்.
தமிழகத்திற்கு நாள் ஒன்றுக்கு 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி தேவை என்றும் இதற்கு 20 ரேக்குகளை (ரேக் என்பது நிலக்கரியை சுமந்துசெல்லும் ரயில் தொடர்வண்டி. ஒரு ரேக்கில் 3200 டன் நிலக்கரியைச் சுமந்துசெல்ல முடியும்.) ஒதுக்கீடு செய்யவேண்டுமென்றும் ஆனால் தற்போது 7-8 ரேக் நிலக்கரி மட்டுமே கிடைத்துவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ்நாடுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
மத்திய மின்வாரிய ஆணைய இணைய தளம் தரும் தகவல்களின்படி 1830 மெகாவாட் உற்பத்தித் திறனுள்ள வடசென்னை அனல்மின் நிலையத்தில் செப்டம்பர் மாதத் துவக்கத்திலிருந்தே 2 அல்லது 1 நாள் கையிருப்பிற்கே நிலக்கரி இருந்துவந்ததுள்ளது. மேட்டூர் அனல் மின் நிலையங்களைப் பொறுத்தவரை 3-5 நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி இருந்துவருகிறது. இந்த நிலையில்தான் மத்திய மின்சாரத் துறை அமைச்சர் பியூஷ் கோயலை டெல்லியில் செவ்வாய்க்கிழமையன்று சந்தித்த தமிழக மின்வாரியத் துறை அமைச்சர் தங்கமணி, தமிழகத்திற்கு கூடுதல் நிலக்கரி ஒதுக்கீடு செய்ய வேண்டுமெனக் கோரினார்.
இதற்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய தங்கமணி, மத்திய அரசு தினமும் 16 ரேக்குகளில் நிலக்கரி சப்ளைசெய்ய மத்திய அரசு ஒப்புக்கொண்டிருப்பதாகவும் தமிழகத்தில் மின்வெட்டு இல்லையென்றும் கூறினார். விரைவிலேயே தமிழகம் கேட்டபடி கூடுதலாக நான்கு ரேக்குகள் கிடைக்குமென்றும் தெரிவித்தார். தமிழகத்தில் மின்வெட்டு என்பதே இல்லையென்றும் தங்கமணி மறுத்தார்.
ஆனால், நிலக்கரி ஒதுக்கீடு மட்டுமே தற்போது பிரச்சனையில்லை என்கிறார்கள் மின்துறையை அறிந்தவர்கள். தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மின்தேவை 13,500 மெகாவாட்டிலிருந்து 15,000 மெகாவாட் வரையில் இருந்து வருகிறது. இதில் மாநில அரசுக்குச் சொந்தமான மின் நிலையங்களிலிருந்து சுமார் 7,000 மெகாவாட்டும் மீதமுள்ள மின்சாரம் மத்திய மின் நிலையங்கள், காற்றாலைகள், தனியார் மின் நிலையங்களிடமிருந்தும் பெறப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் 8,200 மெகாவாட் உற்பத்தி செய்யும் அளவுக்கு காற்றாலைகள் நிறுவப்பட்டிருந்தாலும் செப்டம்பர் 9, 10, 11 ஆகிய தேதிகளில் காற்றாலைகளிலிருந்து கிடைக்கும் மின்சாரம் வெகுவாகக் குறைந்தது. குறிப்பாக செப்டம்பர் 10ஆம் தேதியன்று காலை நேரத்தில் அதிகபட்சமாக 169 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைத்தது. இதன் காரணமாகவே அடுத்த மூன்று நாட்களுக்கு சுமார் 2,000 மெகாவாட் அளவுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு அறிவிக்கப்படாத மின்வெட்டுக்கு இட்டுச் சென்றது.
"மே மாதத்தில் தமிழகத்தில் காற்றாலை சீசன் துவங்குகிறது. இது அக்டோபரில் முடிவுக்கு வரும் என்றாலும் செப்டம்பர் மாதத்திலேயே உற்பத்தி குறைந்துவிடும். 10 நாட்களுக்கு முன்பே இதற்கான அறிகுறிகள் தென்படும். அரசு அதனை எதிர்நோக்கி முன் ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும்" என்கிறார் தமிழ்நாடு மின்துறை பொறியாளர் சங்கத்தின் தலைவரான எஸ். காந்தி.
தமிழ்நாடுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
காற்றாலை மின் உற்பத்தி குறைந்தது ஒரு பிரச்சனை என்றால், 2000 மெகாவாட் உற்பத்தித் திறனுள்ள கூடங்குளத்தில் உள்ள இரு அணு மின் நிலையங்களும் பல்வேறு காரணங்களால் இயங்காமல் போனதும் மற்றொரு காரணமாக அமைந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் மின் தட்டுப்பாடு ஏற்பட்டதும் செப்டம்பர் 12ஆம் தேதியிலிருந்து ஓர் அணு மின் நிலையம் உற்பத்தியைத் துவங்கியுள்ளது. தற்போது சராசரியாக 700 மெகாவாட் அளவுக்கு கூடங்குளத்திலிருந்து மின் உற்பத்தி நடந்துவருகிறது.
தனியாரிடம் மின்சாரம் வாங்க திட்டமா?
ஆனால், தற்போது மின்பற்றாக்குறை என தமிழக அரசு தெரிவிப்பதற்குக் காரணம், தனியாரிடமிருந்து மின்சாரத்தை அதிக விலைக்கு வாங்குவதற்காகத்தான் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
"மின்சாரப் பற்றாக்குறை நிலவும் போது, அதை பயன்படுத்தி தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதில் ஆட்சியாளர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது. தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்குவதில் மட்டும் கடந்த 12 ஆண்டுகளில் ரூ.48 ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றிருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன" என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியிருக்கிறார்."விரைவில் கடுமையான மின்வெட்டை சந்திக்கும் அபாயகரமான சூழ்நிலைக்கு தமிழக மக்கள் இன்றைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். அதனால், மின் தேவையை சமாளிக்க "பராமரிப்பு" "ஃபால்ட்" என்ற போர்வையில் மின்வெட்டுக்களை அமல்படுத்துங்கள்" என்று வாய்மொழி உத்தரவு போயிருப்பதாகவும், அதை முன்னிட்டே திடீர் திடீரென்று, தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மின்வெட்டுகள் அரங்கேறி, மக்களை இன்னலுக்கு உள்ளாக்கி வருவதாகவும் தகவல்கள் வருகின்றன" என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினும் குற்றம்சாட்டியிருக்கிறார்.
கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்துவருவதால் மின்வெட்டு குறைந்துள்ளது. ஆனால், விரைவிலேயே காற்றாலை சீசன் முடிவடைவது, சில அனல் மின் நிலையங்கள் பராமரிப்புக்காக மூடப்பட்டிருப்பது, கூடங்குளம் அணு மின் நிலையங்கள் முழுமையாக இயங்காதது (தற்போது இரண்டாவது அணு உலை மட்டுமே இயங்கிவருகிறது) ஆகிய காரணங்களால் விரைவிலேயே நிலைமை மோசமடையக்கூடும்.
தமிழ்நாட்டில் 2008ஆம் ஆண்டிலிருந்து 2012ஆம் ஆண்டுவரை கடுமையான மின் தட்டுப்பாடு நிலவியது. இதன் காரணமாக சென்னையைத் தவிர்த்த பிற மாவட்டங்களில் 6 மணி நேரமளவுக்கும் சென்னையில் 4 மணி நேரமும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...