முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முக்கானி தடுப்பனை உடைப்பு ஆட்சியர்மீது விவசாயிகள் குற்றச்சாட்டு!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு . சந்தீப் நந்தூரி இ .ஆ .ப .அவர்களின் பொய் அறிக்கையை தமிழக அனைத்து விவசாயகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு வன்மையாக கண்டிக்கிறது
          சமீபத்தில் உடைந்த முக்காணி தடுப்பனையானது தரமற்ற முறையால் கட்டப்பட்டது இது குறித்து ஊடகங்கள் வழியே செய்திகள் வெளியானது இதனையடுத்து ஸ்ரீவைகுண்டம் சட்ட மன்ற உறுப்பினர் திரு.S.P. சண்முகநாதன் M.L.A .முக்காணி தடுப்பணைக்குள் நேரில் சென்று ஆய்வு செய்தார் அப்போது ஆற்றுக்குள் இருந்த சிப்பி கலந்த உவர்மன் உள்ள மணலை கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தியதை கண்டறிந்து பொதுப்பணித் துறையினரை வன்மையாக கண்டித்தார் தடுப்பனை தரமற்றதாக கட்டப்பட்டுள்ளது என்பதை நேரில் பார்த்த சாட்சியாக சட்ட மன்ற உறுப்பினரே உள்ள போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு .சந்தீப் நந்தூரி இ.ஆ .ப அவர்கள் 3.9.18 அன்று நடைபெற்ற திங்கள்கிழமை மக்கள் குறை தீர்ப்பு கூட்ட முடிவில் முக்காணி தடுப்பனை கட்டியதில் எவ்வித முறைகேடுகளும் இல்லை தடுப்பணை பணியானது 90% வீதம் முடிவடைந்து விட்டது என்றும் இந்த தடுப்பணை பொறியாளர்களால் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டதாகவும் தடுப்பணை கட்டும் போது தண்ணீர் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்கால்வாய் சிறிதளவு உடைப்பு ஏற்பட்டதாகவும் தடுப்பனைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று தட்டு சோற்றில் முழு பூசணிக்காயை மறைத்து விடலாம் என்று பொய்யான தகவலை தெரிவித்துள்ளார்
       தடுப்பனை கட்டும் பணிக்காக சுமார் 25 .75 கோடி கடந்த 20l4_15-ம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதில் தடுப்பணையில் ஏழு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூட பணிகள் நடக்கவில்லை ஊழல் முறைகேடே காரணமாகும் நான் விசாரித்த வரையில் ஆட்சியாளர்கள் காண்டிராக்ட் எடுத்த நபர்களிடமிருந்து 25% கமிஷன் தொகை கை மாறிய பின்னரே ஒப்பந்தகாரர் முடிவு செய்யப்பட்டுள்ளார்
  அதன் பின்னர் ஒப்பந்தம் எடுத்தM/sரெனால்டஸ் என்ற ஈரோட்டை சார்ந்த நிறுவனம் தடுப்பனை பணிகளை செய்யும்போது உள்ளூர் MLA மற்றும் M.P அரசியல் பிரமுகர்களுக்கு தேவைக்கேற்ப கமிஷனை கொடுத்து சரிகட்டிய பிறகே தடுப்பனை பணிகளை செய்ய சப்-காண்டிராக்ட்திரு.நந்தகோபால் என்பவரிடம் கொடுத்து விட்டு ஒதுங்கி விட்டது
      காண்டிராக்ட்டர் மற்றும் சப்கான் டிராக்டர் ஆகியோரின் லாப கணக்கீட்டின்படி தடுப்பணை பணி நடைபெற்று வந்தது
    தடுப்பணை கட்டப்படும் பகுதியானது கடலும் ஆறும் சந்திக்கும் கழிமுக பகுதியாகும் ஆகவே உவர் உள்ள பகுதியானது இந்த உப்பு கலந்த ஆற்று மணலை வைத்தே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது தடுப்பணைக்கான எஸ்டிமேட் படி கட்டப்படவில்லை
      தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கூறுகின்ற படி தடுப்பணை கட்டும் போது தண்ணீர் செல்வதற்காக அமைக்ப்பட்ட கால்வாய் சிறிதளவு உடைப்பு ஏற்பட்டதாக கூறுவது முற்றிலும் தவறானது
     கட்டப்பட்டு வருகின்ற தடுப்பணையில் காண்கீரிட் சுவர் ஆற்று நீரில் பாதியளவு அடித்து செல்லப்பட்டுள்ளது தடுப்பனையின் தென்புற கிழக்கும் மேற்கும் கட்டப்பட்டுள்ள சுவர் 3 அடி ஆழத்திற்கு பூமிக்குள் புதைந்தும் சுவர் இரண்டாக பிளந்தும் போய் உள்ளது இதையெல்லாம் நான் கடந்த 29.8.18 அன்று எனது விவசாய சங்க பிரதிநிதிகளோடு சென்று நேரில் ஆய் அட செய்து ஆவண படுத்தி மு கநூல் மற்றும் வாட் ஸ்அப் வழியாக ஊழல் தடுப்பணை குறித்து செய்தி வெளி யிட்டுள்ளேன் பல்வேறு தினசரி பத்திரிக்கையிலும் தடுப்பனை சம்பந்தமான செய்திகள் வெளியாகி உள்ளது
  தடுப்பணை எஸ்டிமேட் படி கட்டப்படவில்லை பூமியின் தன்மை குறித்து முழு மையாக ஆய்வு செய்யப்படவில்லை
    தடுப்பனை பூமியில் எங்வளவு ஆழம் கட்டப்பட வேண்டுமோ அவ்வளவு ஆழத்தில் கட்டப்படவில்லை ஆழம் குறைவாக கட்டி ஊழல் முறைகேட்டில் காண்ட் டிராக்டர் ஈடுபட்டுள்ளார் பூமியின் மேல் கான் கீரிட் போடப்பட்டதில் தரக்கட்டுபாடு குறைவாக இருந்ததால் ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது என்பதை கண்கூடாக அறியலாம்
    மாவட்ட ஆட்சியர் கூறியபடி பொறியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர் ஏற்கனவே பொதுப்பணித் துறையின் பொறியாளரின் கண்காணிப்பில் இந்த தடுப்பணை கட்டப்பட்டது
  ஒரு பொறியாளரை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள போது தவறு எவ்வாறு நடந்தது?
  முக்காணி தடுப்பனையில் ஆற்றின் குறுக்கே இரு கரைகளையும் இணைக்க வில்லை மாறாக குறைந்த அளவு தூரத்தில் தான் தடுப்பனை கட்டப்பட்டுள்ளது இதிலும் ஊழல் நடைப்பெற்றுள்ளது
     தடுப்பனை பணிக்காக மணலை ஆற்றுக்குள் இருந்தே எடுத்து கொள்ள விதிமுறை உள்ளதை வைத்து தடுப்பனை பணிக்காக மணல் எடுக்கிறோம் என்று பல கோடி ரூபாய்க்கு மணல் அள்ளிவிற்பனை செய்து வந்துள்ளனர் இதற்கு பொதுப்பணித் துறை பினர் உடந்தையாக செயல்பட்டுள்ள னர் தற்போது மணல் அள்ளிய ஆழமான பகுதிகள் குளத்து மண்ணை கொண்டு வந்து மூடி வருகின்றனர் இதெல்லாம் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்த போது அவர் கண்களுக்கு புலப்படவில்லையா?
   ஏற்கனவே கடந்த 10 .7 2017 அன்று இந்த தடுப்பணை இப்பகுதியில் கட்ட வேண்டாம் என்றும் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு எவ்வித பயனும் கிடையாது சுற்று வட்டார பகுதி மக்களின் கருத்துகளை அறிந்து அதற்கேற்ப ரெகுலேட்டரோடு கூடியதடுப்பணையை புன்னக்காயல் பகுதியில் கட்ட வேண்டி முன்னாள் மாவட்ட ஆட்சியர் திரு .ந.வெங்கடேஷ் இ .ஆ .ப அவர்களிடம் நேரில் மனு கொடுக்கப்பட்ட பிறகும் தட்டுப்பனை முக்காணிய்ல கட்டுவதற்கு ஒரு தனியார் நிறுவனத்திற்கு உதவுவதற்கே பல்வேறு கட்ட போராட்டத்திற்கும் மாவட்ட நிர்வாகம் மதிப்பு கொடுக்கவில்லை
      தரமற்ற தடுப்பனை கட்டி முடிக்கப்பட்டால் வரும் மழைக்காலத்தில் தரமற்ற தடுப்பனையால் விபரீதம் ஏற்படும் புன்னக்காயல், சேர்ந்த மங்கலம் போன்ற சுற்றுவட்டார மக்கள் பெருந்துன்பத்திற்கும் உயிரிழப்புகளும் ஏற்பட நேரிடும்
      ஊழல் தடுப்பனையை முற்றிலுமாக இப் பகுதியில் இருந்து அகற்றி தரமான கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேறு காண்டிராக்டரிடம் ஒப்படைக்க வேண்டும் தரமற்ற கட்டுமாண பணிகளை செய்து வந்த காண்டிராக்டரின் ஒப்பந்த லைசென்சை ரத்து செய்ய வேண்டும்
மாவட்ட ஆட்சியர் திரு . சந்தீப் நந்தூரி இ.ஆ .ப . யாரையோ காப்பாற்ற அவர்களின் சொல்படி இந்த அறிக்கையை கொடுத்துள்ளார் மக்களின் உயிரோடு விளையாட மல் மக்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு தரமான முறையில் தடுப்பனை கட்டப்பட வேண்டி என்னால் பொது நல வழக்கு விரைவில் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் இரண்டொரு தினத்தில் தாக்கல் செய்யபடவுள்ளது

இவன் : S.M. A காந்மதி நாதன்
மாவட்ட செயலாளர்
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு

தூத்துக்குடி மாவட்டம்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...