ஷ்யாம் நீயூஸ் 30.06.22 தூத்துக்குடி மேலசண்முகபுரம் முத்துமாரியம்மன் கோவில்; கொடைவிழா மேயர் ஜெகன்பெரியசாமி பங்கேற்பு தூத்துக்குடி மேலசண்முகபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் கொடைவிழாவை கடந்த 28ம் தேதி கால்நாட்டு விழாவுடன் தொடங்கியது. இரவு நிகழ்ச்சிக்கு கோவில் தர்மகர்த்தா கோட்டுராஜா தலைமை வகித்தார். ஐயா ஸ்ரீ குரு சிவசந்திரன் அருளிசை வழிபாட்டு கச்சேரியை துவக்கி வைத்து திமுக பொதுக்குழு உறுப்பினரும் மேயருமான ஜெகன்பெரியசாமி பேசுகையில் ஆண்டு தோறும் இந்த கோவில் கொடைவிழாவிற்கு எனது தந்தை வருவதுண்டு அவரது மறைவிற்கு பின்பு கடந்த ஆண்டுகளாக இந்த கோவிலுக்கு அவரது வழியில் நான் வருகிறேன். இங்குள்ள மக்கள் எல்லோருக்கும் எல்லா செல்வங்களும் கிடைத்து வாழ்க்கையில் நலமுடன் வாழ வேண்டுகிறேன். அனைவரும் ஒற்றுமையுடன் பொது வாழ்க்கையில் ஈடுபடுபட்டு பல நல்ல பணிகளை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் கோவில் செயலாளர்கள் சுப்பிரமணியன், ஞான்ராஜ், பொருளாளர் பழனிக்குமார், துணைத்தலைவர்கள் எஸ்.பொன்ராஜ், ஜி.பொன்ராஜ், பிரபு...