முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பஞ்சயாத்து தலைவர் வேட்பாளருக்கு செலவு செய்யும் ஸ்டெர்லைட் நிர்வாகம் ?

SHYAM NEWS   25.12.2019 பஞ்சயாத்து தலைவர் வேட்பாளருக்கு செலவு செய்யும் ஸ்டெர்லைட் நிர்வாகம் ? கடந்த ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில்  தூத்துக்குடியில் 13 பேர் சுட்டு கொல்லப்பட்டனர் .அதனை தெடர்ந்து ஆலைக்கு  தமிழக அரசு சீல் வைத்து அடைக்க உத்தரவிட்டது .அதனை தொடர்ந்து ஆலை நிர்வாகம் ஏழை மக்களின் ஏழ்மையை பயன்படுத்தி ஆலையை திறக்க சொல்லி அவர்களை போராட தூண்டிவிட்டது அது நடக்கவில்லை .தற்பொழுது பஞ்சாயத்து தேர்தல் நடக்க இருப்பதால் ஆலையை சுற்றி உள்ள பஞ்சயாத்து தலைவர்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு செலவு செய்துவருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர் .குறிப்பாக தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் அய்யநடப்பு முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மனைவிக்கும் ஆளும் கட்சி நிர்வாகி  மனைவிக்கும் சுமார் 50 லட்சம் செலவு செய்ய தயாராக இருப்பதாகவும்  இருவரில் யார் பதவிக்கு வந்தாலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தீர்மானம் நிறைவேற்றி தர வேண்டும் என உடன்படிக்கை செய்து உள்ளனர் எனவும்  ஸ்டெர்லைட் ஆலை எதிப்பு கூட்டமைப்புப்பை சார்ந்தவர்கள்  குற்றம் சுமத்துகின்றனர் ....

தூத்துக்குடி அருகில் பெண் சிசு உடல் தோண்டி எடுப்பு:தாசில்தார் முன்னிலையில் பரிசோதனை!!!

ஷ்யாம் நீயூஸ்  18.12.2019 தூத்துக்குடி அருகே புதைக்கப்பட்ட பெண் சிசு உடல் தோண்டி எடுப்பு: தாசில்தார் முன்னிலையில் பரிசோதனை!! தூத்துக்குடி அருகே பாலியல் பலாத்காரத்தால் மாணவிக்கு பிறந்த குழந்தை புதைக்கப்பட்ட விவகாரத்தில், இன்று அந்த குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.  தூத்துக்குடி அருகேயுள்ள முடிவைத்தானேந்தல் கீழத்தெருவை சேர்ந்த டி.வி. மெக்கானிக் ராஜூ (48) என்பவர் அப்பகுதியைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பமானார். இந்நிலையில் அந்த சிறுமிக்கு 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை மாணவியின் குடும்பத்தினர் வீட்டின் பின்புறத்தில் புதைத்தனர். இந்நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜூவை கைது செய்தனர். மேலும் குழந்தை உயிருடன் புதைக்கப்பட்டதா? என சிறுமியின் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில், புதைக்கப்பட்ட குழந்தையின் உடல் இன்று மதியம் 1 மணியளவில் தூத்துக்குடி த...

குடியுரிமை மசோதாவை திரும்ப பெறக்கோரி தூத்துக்குடியில் ஆர்பாட்டம்! ஆயிரத்துக்கும் அதிகமான இஸ்லாமியர்கள் கைது!

ஷ்யாம் நீயூஸ் 16.12.2019 குடியுரிமை சட்ட மசோதாவை எதிர்த்து தூத்துக்குடியில் ஆர்பாட்டம்! தூத்துக்குடியில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்திய குடியுரிமை சட்ட  மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி  தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்ட  ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கைதுசெய்து தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

ஆட்சியர் சந்தீப் நந்தூரி-ன் முயற்சிக்கு ஒரு புதிய மைல் கல் !தூத்துக்குடியில் நிலத்தடி நீர் 20 ஆண்டுகளுக்கு பின் உயர்வு !

ஷ்யாம் நியூஸ் 21.11.2019 தூத்துக்குடியில் நிலத்தடி நீர் 20 ஆண்டுகளுக்கு பின் உயர்வு !ஆட்சியர்  சந்தீப் நந்தூரி-ன்  முயற்சிக்கு ஒரு புதிய  மைல் கல்  ! தமிழகத்தில் அரசின் நல திட்டங்களை செயல்படுத்துவதில் தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி சிறப்பாக செயல்பட்டு வருகிறார் .தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் கலவரத்தில் தூப்பாக்கி சூடு நடத்தியதில் பொதுமக்கள் 13 பேர் சுட்டு கொல்லப்பட்டனர் அதனால் தூத்துக்குடி மாவட்டமே போர்க்களமாக கட்சி அளித்தது .அந்த இக்கட்டான சூழ்நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக சந்தீப் நந்தூரி பொறுப்பேற்றார் .பொறுப்பேற்ற நிமிடம் முதல் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கு  மிக அரும்பாடு பட்டார் அவருக்கு துணையாக மாவட்ட முன்னாள்  கண்காணிப்பாளர் முரளிரம்பாவின் செயல்படும் மிக சிறப்பாக இருந்ததால் தூத்துக்குடி மக்கள் மீண்டும் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திருப்பினர் என்பதை அனைவரும் அறிந்ததே ... இந்த நிலையில் அரசின் திட்டங்களை செயல் படுத்துவதில் தனது முழுக்கவனத்தையும் செலுத்தியத்தின் விளைவு நகரின் அணைத்து பகுதிகளிலும் மின் விளக்...

2021 ஆம் ஆண்டு தூத்துக்குடி -நாசரேத் திருமண்டல தேர்தலுக்கு அச்சாரமிடும் டி எஸ் எப் துரைராஜ் !

ஷ்யாம் நியூஸ் 20.11.2019 2021 ஆம் ஆண்டு தூத்துக்குடி -நாசரேத் திருமண்டல தேர்தலுக்கு அச்சாரமிடும் டி எஸ் எப் துரைராஜ்? தூத்துக்குடி ஒய் எம் சி ஏ  சார்பில் 15.10.2019 அன்று குழந்தைகள் தினம் ஒய் எம் சி ஏ  வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பள்ளி குழந்தைகளில் கலந்து கொண்டு தங்கள் திறமையை காட்டினர் இதில் அனன்யா என்ற குழந்தை தூத்துக்குடி ஒய் எம் சி ஏ 2019 தின் அழகி பட்டத்தை வென்றார் . டி எஸ் எப்  துரைராஜ் அவர்கள் தலைமை தாங்கினார். எஸ் டி ஆர்  பொன்சீலன் ஒரு இளம் தொழில் அதிபர் அவர் இந்த சமூகத்திற்கு பல நல்ல காரியங்களை செய்து வருகிறார்  அவருடைய சேவை நம் நாட்டிற்கு தேவை என புகழாரம் சூட்டினார் .இவ்விழாவிற்கு அபி குரூப் ஆப் கம்பெனியின் தலைவர் . எஸ் டி ஆர். பொன்சீலன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினார். அதில் பேசிய  எஸ் டி ஆர் பொன்சீலன் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்தின் முதல் லே செயலர்   டி எஸ் எப். துரைராஜ் அவர்கள் காலத்தில் திருமண்டலத்தில் பல புதிய கல்லூரிகள் துவக்கப்பட...

சாக்கடையில் மிதக்கும் தூத்துக்குடி அரசு மருத்தவமணை!நடவடிக்கை எடுக்க நோயாளிகள் வேண்டுகோள்!

சாக்கடையில் மிதக்கும் அரசு மருத்தவமணை!பொறுப்பில்லாத அதிகாரிகள்!நடவடிக்கை எடுப்பாரா ஆட்சியர்? தண்ணீரில் சூழ்ந்த தூத்துக்குடி மாநகரம்! தூத்துக்குடி நகரில் நேற்றிரவு 33மீமி கனமழை பெய்தது. தூத்துக்குடி நகரின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி வீடுகளுக்குள்ளும் மழை நீர் புகுந்துள்ளது. ஏற்கனவே கடந்த வாரம் பெய்த மழைநீர் இதுவரை பல்வேறு இடங்களில் அப்புறப்படுத்தாத சூழ்நிலையில்.தற்போது பெய்த மழையில் தூத்துக்குடி நகரத்தில் பல்வேறு இடங்கள் நீர் சூழ்ந்து தீவு போல் காட்சி அளிக்கிறது. தூத்துக்குடி திருச்செந்தூர் சாலை நீதிமன்ற குடியிருப்பு அருகில் உள்ள பிரதான சாலையில் ஒரு அடிக்கு மேல் தண்ணீர் உள்ளது.இந்த சாலையானது பள்ளி,கல்லூரி,வேலைக்கு செல்பவர்களுக்கு இது பிரதான சாலையாகும் .இந்நிலையில் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளம் மேடு தெரியாமல் கீழே விழுந்து செல்லும் நிலமைக்கு ஆளாகினார்கள். அதே போல் மாநகரை சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தண்ணீரில் சூ...

தூத்துக்குடியில் நீதிபதியை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!

ஷ்யாம் நியூஸ் 05.11.2019 தூத்துக்குடியில் நீதிமன்ற பெண் ஊழியரை தாக்கிய நீதிபதியை எதிர்த்து மாதர்சங்கம் ஆர்பாட்டம்! தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற  நீதிபதி நிலவேஷ்வரன் தன் கீழ் பணிபுரிந்த பெண் சுருக்கு எழுத்து ஊழியர் சாரதி பணியில் கவணகுறைவாக இருந்ததாக கூறி எழுது அட்டையை தூக்கி எறிந்ததில் அந்த பெண் ஊழியர்க்கு தலையில் காயம் ஏற்ப்பட்டது. இதை எதிர்த்து தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகில் பெண்களுக்கு நாட்டில் மற்றும் பணிபுரியும் இடங்களில் பாதுகாப்பு இல்லை.நீதி வழங்கவேண்டிய நீதி பதியே பெண்ணுக்கு எதிரான குற்றம் செய்தது கண்டிக்க தக்கது.அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்பாட்டம் நடத்தினர். இதை அடுத்து தூத்துக்குடி நீதி மன்ற ஊழியர்கள் தூத்துக்குடி நீதி மன்ற வளாகம் அருகில் நீதிபதி நிலவேஷ்வரன் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என  ஆர்பாட்டம் நடத்தினர்.

செய்தியாளர் பாரதி மீது தாக்குதல் :காயல் அப்பாஸ் கண்டணம்!

ஷ்யாம் நியூஸ் 02.11.2019 செய்தியாளர் பாரதி மீது தாக்குதல் : காயல் அப்பாஸ் கண்டனம் !  ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது. நெல்லை மாவட்டம், கடையத்தை சேர்ந்த செய்தியாளர் பாரதி செய்தியை சேகரிக்க சென்ற போது அவதூறாக பேசி தாக்குதல் நடத்திய அப்பகுதி உட்பட்ட காவல் துறை உதவி ஆய்வாளர் சின்னத்துரை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வன்மையாக கண்டிக்கிறது. மக்கள் நலன் கருதி இரவு பகலும் பார்க்காமல் சில நேரங்களில் அவர்களின் உயிரை பணியவைத்து செய்தியை சேகரிக்கும் பத்ரிக்கையாளர்கள் மீது தொடர் தாக்குதல் நடை பெறுவதை தடுத்து நிறுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற் கொள்ள வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது. எனவே : செய்தியாளர் பாரதி மீது தாக்குதல் நடத்திய காவல் துறை உதவி ஆய்வாளர் சின்னத்துரை மீது துறை ரீதியான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும், செய்தியாளர்கள் எந்த வித அச்சமின்றி சுதந்திரமாக செய்தியை சேகரிக்க தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் . ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் ...

தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் பணியாளர்களுக்குள் ஜாதி சண்டை ! மாவட்ட மேலாளாரை கண்டித்து தொழிற்சங்கம் கண்டனம் !

ஷ்யாம் நியூஸ் 31.10.2019 தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் பணியாளர்களுக்குள் சண்டை ! மாவட்ட மேலாளாரை கண்டித்து தொழிற்சங்கம் கண்டனம் ! தூத்துக்குடியில் ஏ ஐ டி யு சி தொழிற்சங்கதின் 100 வது ஆண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி சிபிகாட் வளாகத்தில் உள்ள மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பு ஏ ஐ டி யு சி தொழிற்சங்க உறுப்பினர்கள் கொடி ஏற்றினர் .உழைக்கும் தொழிலார்களுக்கு அவர்களின் உரிமையை நிலைநாட்டவும் தொழிலார்களின் பாதுகாப்பை உறுதி படுத்தவும் ஏ ஐ டி யு சி  தொடர்ந்து பாடுபட்டு வருகிறது .தொழிலார்களுக்காக இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் தாய் சங்கம் இது . டாஸ்மாக் நிர்வாகம் தொழிற்சங்கங்கள் உருவாக்க கூடாது என பணியாளர்களை மிரட்டும் நேரத்தில்  அதற்க்கு அஞ்சாமல் தமிழகத்திலே முதன் முதலாக  தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்களுக்காக உருவாக்கப்பட்ட தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள்  ஏ ஐ டி யு சி  சங்கம் ஆகும் பணியாளர் நலனுக்காக  தொடர்ந்து போராடும் எனவும் தெரிவித்தனர் .எட்டயாபுரம் பகுதி பணியாளர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனைக்கு சுமுகமான தீர்வு காணாமல் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ...

தூத்துக்குடியில் முதியோர்கள் தின கொண்டாட்டம்!

ஷ்யாம் நீயூஸ் 25.10.2019 தூத்துக்குடியில் முதியோர்கள் தின கொண்டாட்டம் நடைபெற்றது! உலக முதியோர் தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட சமூக நலத்துறையின் சார்பாக முதியோர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திரு. விஷ்ணு சந்திரன், (இ.ஆ.ப) கூடுதல் ஆட்சியர், வருவாய்த்துறை, அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக ரஜினியிடம் விசாரணை நடத்தவேண்டும்-சீமான் வலியுறுத்தல் .

SHYAM NEWS 16.10.2019 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக நடிகர் ரஜினியிடம் விசாரணை நடத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தினார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. தூத்துக்குடியில் உள்ள இந்த விசாரணை ஆணைய அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதற்காக சீமான் இன்று தூத்துக்குடி வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்  கூறியதாவது, "தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பந்தமாக விசாரணை கமிஷன் முன்பு ஆஜராகி எனது கருத்துகளை கூற வந்துள்ளேன்.  ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராக மக்கள் தான் போராடினார்கள். ஆனால் போராட்டத்தில் சமூகவிரோதிகள் புகுந்து விட்டதாக நடிகர் ரஜினிகாந்த் கூறுகிறார். அவருக்கு எப்படி சமூகவிரோதிகள் புகுந்தது தெரியும். எனவே ரஜினியையும் விசாரணை கமிஷன் முன்பு ஆஜர்படுத்த வேண்டுமென நீதிபதியிடம் வலியுறுத்துவேன். எனக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வர...

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி ஏ கிரெடில் இருந்து சி கிரெடாக தரம் குறைந்ததா ?கல்லுரி நிர்வாகத்திற்கு உச்ச நீதிமாற்றம் தடை!

ஷ்யாம் நியூஸ் 09.10.2019 தூத்துக்குடி   காமராஜ் கல்லூரி ஏ கிரெடில் இருந்து  சி கிரெடாக தரம் குறைந்ததா ?கல்லுரி நிர்வாகத்திற்கு உச்ச நீதிமாற்றம் தடை! காமராஜ் கல்லூரி (Kamaraj College)  தமிழ்நாட்டின், தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடியில் அமைந்துள்ள மிகப் பழமையான மற்றும் புகழ்பெற்ற கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஒன்றாகும். இது 1966 ஆம் ஆண்டில் தூத்துக்குடி கல்வி சங்கத்தால் நிறுவப்பட்டது. இக்கல்லூரியின் பெயரானது கல்வித்தந்தை பாரத் ரத்னா கு.காமராஜ் அவர்கள் நம் தேசத்திற்கு குறிப்பாக கல்வி பணிக்கு ஆற்றிய சேவைக்காக அவரது நினைவாக வைக்கப்பட்டது. இந்த கல்லூரி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது.  இந்த கல்லூரியானது கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது. இக்கல்லூரியானது இரண்டு பணி நேரங்களில் இயக்கப்படுகிறது. இக்கல்லூரி தூத்துக்குடி வட திசை காரப்பேட்டை  நாடார் மகமை சங்கம் .விருதுநகர் நாடார் மகிமை ,தூத்துக்குடி நாடார் மகிமை ,திருமங்கல நாடார் மகமை ,அருப்புக்கோட்டை நாடார் மகமை  சங்கங்கள் ஒன்றிணைந...

தூத்துக்குடியில் மாணவனுக்கு பாலியல் தொல்லை:ஆசிரியர் கைது!

ஷ்யாம் நியூஸ்  24.09.2019 தூத்துக்குடியில் மாணவனுக்கு பாலியல் தொல்லை : ஆசிரியர் கைது தூத்துக்குடியில் பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.   தூத்துக்குடி பீச் ரோட்டில் இயங்கி வரும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருச்செந்தூர் அருகே உள்ள காயாமொழி கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் திருமணி (25) என்பவர் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். மேலும் அவர் பள்ளி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியுள்ளார். இரவு நேரங்களில் விடுதியில் தங்கியுள்ள ஒரு மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.  இதனால் பாதிக்கப்பட்ட அந்த மாணவர் சைல்டு லைனுக்கு தொலைபேசி மூலம் தகவல் அளித்துள்ளார். இதையடுத்து சைல்டு லைன் அதிகாரிகள் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இதில் ஆசிரியர் திருமணி, மாணவர்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிந்து ஆசிரியர் திருமணியை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் ப...

தூத்துக்குடியில் மீன் குழம்புக்காக குடி நீரை தடுத்து கடலுக்கு அனுப்பும் P W D அதிகாரி !

ஷ்யாம் நியூஸ் 24.09.2019 தூத்துக்குடியில்  மீன் குழம்புக்காக குடி நீரை தடுத்து கடலுக்கு அனுப்பும் P W D அதிகாரி ! தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் குளத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்ணீர் திறந்துவிட தூத்துக்குடி ஆட்சி தலைவர் உத்தரவிட்டு இருந்தார் .அதன் படி தண்ணீர் திறந்து விடப்பட்டது .கோரம்பள்ளம் குடிநீர் குளத்திற்கு வரும் வழியில் தாமிர பரணி ஆறு செயற்பொறியாளர் ரகுநாதன் அங்கு மண் அள்ளும் ஒப்பந்ததாரர்க்கு வசதியாக நீர் வரும் கால்வாயை அடைத்து விட்டார் . .கால்வாயில் தண்ணீர் வந்தால் மண் அள்ளும் லாரிகள் செல்லமுடியாது .இதனால் கோரம்பள்ளம் குடிநீர் குளத்திற்கு (ரிசெர்வ் ) தண்ணீர் வராமல் காய்ந்து கிடக்கிறது .இந்த குளத்து குடிநீரை  நம்பி  தூத்துக்குடி சுற்றுவட்டாரதில்  ஆட்சியர் அலுவலகம் உட்பட பல கிராமங்கள் உள்ளன .மற்றும் செயற்பொறியாளர் ரகுநாதன்  13 வருடங்களுக்கு மேலாக ஒரே இடத்தில் பணிபுரிந்து வருகிறார் .ஆண்டுதோறும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் இந்த குளத்திற்கு பல கோடிகளை ஒதுக்கி விவசாய நலன்களை மேன்படுத்த உதவி வருகிறது .ஆனால் இதுவரை ஒரு உருப்படியான மடைக...

கோவில் கணக்கு விவகாரம் கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை!

ஷ்யாம் நியூஸ்  23.09.2019 கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை: 7பேர் கும்பல் வெறிச் செயல் திங்கள் 23, செப்டம்பர் 2019 4:14:36 PM (IST)   செய்துங்கநல்லூர் அருகே முன் விரோதத்தில் கல்லூரி மாணவர் ஒருவரை 7பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் அருகேயுள்ள சந்தையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன் மகன் அபிமன்யூ (எ)திலீப் (19), இவர் செய்துங்கநல்லூரில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வருகிறார். இன்று மதிய உணவிற்காக கல்லூரியில் நடந்து வீட்டிற்கு சென்றுள்ளார். கல்லூரிக்கு சிறிது தொலைவில், ரயில்வே தண்டவாளம் அருகே நடந்து வந்த அவரை, அங்கு மறைந்து நின்று கொண்டிருந்த 7பேர் கொண்ட கும்பல் சராமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியோடியது.  இதுகுறித்து தகவல் அறிந்து செய்துங்கநல்லூர்  இன்ஸ்பெக்டர் ரகுராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவரின் உடலை மீட்டு பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருததுவமனைக்கு அனுப்பி வைத்தனர...

ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக ஒரு நபர் ஆணையத்தின் அதிரடி!

ஷ்யாம் நியூஸ் 21.09.2019 ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக ஒரு நபர் ஆணையத்தின் அதிரடி! தூத்துக்குடியில் கடந்த மே22 ம் தேதி  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது. போலீசாரால் பொதுமக்களில்  13பேர் சுட்டு கொல்லப்பட்டனர். எந்தவித ஆதாரமும் இன்றி  400க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்களை கொண்டு ஒருநபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது 14 அமர்வுகளில் 300க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்திய கமிஷன் தனது தீர்ப்பை விரைவில் தமிழகமுதல்வரிடம் சமர்பிக்க உள்ளது. ஆதாரமின்றி பதிவுசெய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யபட வேண்டும். வழக்கில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தலா ரூபாய் 1.5லட்சம் வழங்கவும்  , காவல்துறை மூலம் தடையில்லா சான்று வழங்கவும் ஒருநபர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக தெரியவருகிறது.

தூத்துக்குடி பெரியநாயகிபுரம் சுடலைமாடசாமி கோவில் குருபூஜை!

ஷ்யாம் நியூஸ் 21.09.2019 தூத்துக்குடி பெரியநாயகிபுரம் சுடலைமாடசாமி கோவில் குருபூஜை இன்று நடைபெறுகிறது. தூத்துக்குடி மாவட்டம் பெரியநாயகி புரம் ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோயிலுக்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு சுடலை மாடசாமி கோயில் சுமார் 200 வருடங்களுக்கு மேலாக சுற்றியுள்ள கிராம மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். மேற்படி 10/9/19 அன்று அருள்மிகு சுடலை மாடசாமி புதியதாக 11 அடி பீடமாக உயர்த்தப்பட்டு குருபூஜை நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக பெரியநாயகபுரம், சோரீஸ்புரம் காலான்கரை, வீர நாயக்கன் தட்டு, அய்யனடைப்பு, கைலாசபுரம், ஸ்ரீனிநகர், இந்திரா காலனி, கோரம்பள்ளம் பொது மக்களால் 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. இன்று 21/9/19 சோரீஸ்புரம் ஊர் சார்பாக 11வது நாள் மண்டல பூஜை மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பூஜை மற்றும் அன்னதானம் நடைபெறும் பக்தகோடிகள் வந்து அய்யன் அருள் பெற்றுச்செல்ல கோவில் நிர்வாகம் பக்தகோடிகளுக்கு அழைப்பு விடுத்தனர். 

மூன்று தெருவிற்க்கு ஒரு காவலர்!அவசர போலீஸ் எண் 100ஐ பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும்.DSP பிரகாஷ் வேண்டுகோள்!

ஷ்யாம் நியூஸ் 20.09.2019 மூன்று தெருவிற்க்கு ஒரு காவலர் .இலவச தலைகவசம் வழங்கிய விழாவில் தூத்துக்குடி மாநகர துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் பேட்டி! தூத்துக்குடியில் நடிகர் சூர்யாவை நடித்த காப்பான் திரைப்படம் வெளியானதையொட்டி தூத்துக்குடி மக்களுக்கு இலவச தலைகவசம் வழங்க  தூத்துக்குடி   சூர்யா ரசிகர்மன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு வழங்கினார்.தூத்துக்குடி மாநகர பகுதியில் மூன்று தெருவிற்க்கு ஒரு காவலர் வீதம் பாதுகாப்பு பணியில் ஈடுபட நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் பொதுமக்கள் எந்த குற்ற பிரச்சனைகள் என்றாழும் அவசர போலீஸ் 100 ஐ தயங்காமல் தொடர்பு கொள்ளவேண்டும் இரு சக்கர வாகனங்களில் செல்லும் போது கட்டாயமாக தலைகவசம் அணிந்து செல்லவேண்டும் மனித உயிர் விலைமதிக்கமுடியாதது  பொதுமக்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

கோரம்பள்ளம் குளத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது -விவசாயிகள் ஆட்சியர் சந்திப் நந்தூரிக்கு நன்றி தெரிவித்தனர் !

கோரம்பள்ளம் குளத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது -விவசாயிகள் ஆட்சியர் சந்திப்  நந்தூரிக்கு நன்றி தெரிவித்தனர் ! தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் பகுதி விவசாயிகளின் கோரிக்கையை  ஏற்று கோரம்பள்ளம் குளத்திற்கு வரும் மதகுகளை திறக்க ஆணையிட்டார் ..அதன்படி இன்று காலை குலையன்கரிசல் ,முள்ளக்காடு பொட்டல்காடு ,அத்திமரப்பட்டி ,காலாங்கரை ,பெரியநாயகிபுரம் ,மற்றும் கோரம்பள்ளம் ஆகிய பகுதி விவசாயிகள் ,விவசாய சங்க தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மதகுகளுக்கு பூஜை வழிபாடு செய்து தண்ணீரை வரவேற்றார்கள் .தாமிரபரணி ஆறுகள் கோட்டம் செயற்பொறியாளர் ரகுநாதன் திறந்து வைத்தார் .விவசாயிகள் தங்கள் வாழைப் பயிர்களை காக்கவும் தூத்துக்குடி சுற்றுவட்டார கிராமங்களின் குடிநீர் பஞ்சத்தை போக்கவும் சரியான நேரத்தில் தண்ணீர் திறக்க ஆணையிட்ட தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரிக்கு நன்றி தெரிவித்தனர் .

குற்றங்களை தடுக்க அவசர அழைப்பு எண் 100 பயன் படுத்த வேண்டும் பொதுமக்களுக்கு தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் அருண் கோபாலன் வேண்டுகோள்!

ஷ்யாம் நியூஸ் 17.09.2019 குற்றங்களை தடுக்க அவசர  அழைப்பு எண் 100 பயன் படுத்த வேண்டும்   பொதுமக்களுக்கு  தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் அருண் கோபாலன் வேண்டுகோள்!   பொதுமக்கள் தங்களுக்கான பாதுகாப்பு தொடர்பாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை சம்மந்தமாகவும் போலீஸ் அவசர இலவச எண்ணான 100 ஐ தொடர்பு கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருன்கோபாலன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று ( 16.9.2019) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருன்பாலகோபாலன் : அவசர உதவிக்கு அழைக்கும் பொதுமக்களின் நோக்கம் முழுமையாக நிறைவேற, அனைத்து மாவட்டங்களையும் இணைக்கும் வகையில் சென்னையில் மாடர்ன் கன்ட்ரோல் ரூம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் அழைப்பு, அங்கு சென்று, அதன்பின், சம்பந்தப்பட்ட ஊரில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வரும்.அங்கு பணியில் உள்ள போலீசாரின் கம்ப்யூட்டரில் உள்ள 'டயலாக்' பாக்ஸ் அலர்ட் செய்யும். தகவலை பெற்று கொண்டு, சம்பந்தப்பட்ட நபரின் மொபைல் நம்பர...

தூத்துக்குடியில் தொடரும் படு கொலைகள். ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் கண்டனம்!

ஷ்யாம் நியூஸ் 16.09.2019 தூத்துக்குடியில் தொடரும் படு கொலைகள் : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் கண்டனம் ! ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது. தூத்துக்குடி ,  சிவந்தாகுளம் 2வது தெருவைச் சேர்ந்த முருகேசன். அவர்கள் மோட்டார் வாகனத்தில் அதி வேகமாக சென்ற மணிகன்டனை  தடுத்து நிறுத்தி  அறிவுரை கூறியதற்க்காக ஆத்திரடைந்த மணிகன்டன் நண்பர்களை அழைத்து வந்து    முருகேசன்.  விவேக். ஆகிய  இருவரையும் நேற்று மதியம் 3 மணியளவில் ஏழு பேர் கொண்ட கும்பல்  சரமாரியாக அரிவாளில் வெட்டி படு கொலை செய்யபட்டதை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மிகவும் வண்மையாக கண்டிக்கிறது.  தூத்துக்குடியில் 12மணி நேரத்தில் முருகேசன் . விவேக் .சொரிமுத்து . ஆகிய 3 படு கொலை சம்பவங்கள்   பரப்பரைப்பையும் மக்களிடையே பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது . இந்த படு கொலை செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுத்துகிறது. முருகேசன். விவேக். சொரிமுத்து. மூவரையும் இழந்து வாடும் அவர...

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஊழியரோடு வந்து மனு கொடுத்த ஆதரவாளர்கள் !எதிராக மனுகொடுத்த பொதுமக்கள் ! இருதரப்பும் ஆட்சியரிடம் மனுஅளித்தனர் .

ஷியாம் நியூஸ் 09.09.2019 தூத்துக்குடியில்  ஸ்டெர்லைட்  ஊழியரோடு வந்து மனு கொடுத்த  ஆதரவாளர்கள் !எதிராக மனுகொடுத்த பொதுமக்கள் ! இருதரப்பும் ஆட்சியரிடம் மனுஅளித்தனர் . தூத்துக்குடியில் மீண்டும் ஸ்டெர்லைட் வேண்டும் அலையை மூடியதால் தூத்துக்குடியில் வாழும் 80000 க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும் அலையை இயக்க தடை விதித்து 15 மாதங்கள் ஆனா நிலையில் தொழில்த்துறையை சார்ந்த பல தரப்பட்ட மக்கள் செய்வதறியாது நிற்கிறோம் .ஆதலால் எங்கள் கோரிக்கை மனுவை ஏற்று ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று மனு கொடுக்க வந்ததாக ஸ்டெர்லைட் ஊழியருடன் வந்த வேல்குமார் உட்பட சிலர்  மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்குள்  செய்தியாளர்களிடர் கூறினார் . ஸ்டெர்லைட் அலையை தமிழக அரசு தூத்துக்குடியில் மிக பெரிய அளவில் மாசு ஏற்படுத்தி விட்டதாகவும் மக்கள் பாதிப்பு அடைந்து உள்ளனர் என்றும் ஆலையை மூட உத்தரவிட்டது .இந்த உத்தரவை எதிர்த்து  ஆலை நிர்வாகம் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில் . தூத்துக்குடியில் ...

கடல் விபத்து சாலை விபத்தில் இறந்த மீனவர்களுக்கு காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்கவேண்டும் -தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

ஷ்யாம் நியூஸ் 06..09.2019 கடல் விபத்து சாலை விபத்தில் இறந்த மீனவர்களுக்கு காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்கவேண்டும் -தூத்துக்குடி நீதிமன்றம் அதிரடி  தீர்ப்பு! தூ த்துக்குடி மாவட்டம் கடல் விபத்து மற்றும் சாலை விபத்தில் இறைந்தவர்களுக்காக  மீனவர்களிடம் இருந்து காப்பீடு தொகை  வசூலித்து மீன்வாரியம் உதவி இயக்குனர் சார்பாக ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு செலுத்தபப்ட்டது .ஆனால் தூத்துக்குடி மாவட்ட மீனவ மக்களுக்கு  இழப்பீடு வழங்காமால் தேவைல்லாத கரணம்  சொல்லி இன்சூரன்ஸ் நிறுவனம்  தட்டிக்கழித்து வந்தது இந்த நிலையில்  மீனவர்கள் நலன்கருதி தூத்துக்குடி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கறிஞ்சர் ஜெ .ஆலன் அரிஸ்டாட்டில் வழக்கு தொடுத்து வாதாடி வந்தார் .இருதரப்பு வாதங்களை கருத்தில் கொண்ட  நுகர்வோர்  நீதி மன்ற அமைப்பை சார்ந்த நீதி அரசர்கள் .நாராயண சாமி ,சங்கர் ,  சரஸ்வதி .ஆகியோர் ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு  கடல் விபத்து மற்றும் சாலை விபத்தில் இறந்த  மீனவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கவேண்டும் எனவும் மீனவர்கள் நலன் பாதுகாக்க படவேண...

தூத்துக்குடியில் தேசிய அரசியல் கருத்தரங்கம்-பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னால் செயலாளர் பிரோமத் குறில் கலந்துகொண்டார்

ஷயாம்நீயுஸ் 04.09.2019 தூத்துக்குடியில் தேசிய அரசியல் கருத்தரங்கம்-பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னால் செயலாளர் பிரோமத் குறில் கலந்துகொண்டார். பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தேசிய செயலாளரும், முன்னாள் ராஜ்யசபா உறுப்பினருமான  பிரமோத் குறில்  நேற்று முன்தினம் (02-09-2019) அன்று தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கைலாசபுரம், கீழக்கோட்டை மற்றும் காசிலிங்கபுரம் கிராமங்களில் மக்களை சந்தித்து பகுஜன் கருத்தியல் குறித்தும் தேசிய அளவிலான அரசியல் போக்கு குறித்தும் வகுப்பு நடத்தினார்...  காசிலிங்கபுறம் மக்கள் சாதிய ஆணவத்தால் பல ஆண்டுகளாக மூடிக்கிடந்த சுதந்திர போராட்ட வீரர் சுந்தரலிங்கனார் அவர்களின் சிலையை, 2011ம் ஆண்டு ஜனவரி 15ம் நாளன்று பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய செயலாளராகவும் ராஜ்யசபா உறுப்பினராகவும் இருந்த பிரமோத் குறில்  திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினார்.. அதன் பின்னரே மக்களின் ஒருங்கிணைப்பில் மண் சிலை வெண்கலம் பூசப்பட்ட சிலையானது என்பது குறிப்பிடத்தக்கது..  ஆனாலும் இன்னும் சிலை திறப்பு விழா விழா நடத்தப்படாமல் பூட்டியே கிடப்பதாக பொத...

பெரியார் , கன்ஷிராம்க்கு பின்னர் தலித்களுக்கு நல்ல தலைவர்கள் இல்லை : தூத்துக்குடியில் முன்னாள் எம்பி.,பிரமோத் குறில் குற்றச்சாட்டு!

ஷயாம்நீயுஸ் 03.09.2019 பெரியார் , கன்ஷிராம்க்கு    பின்னர் தலித்களுக்கு நல்ல  தலைவர்கள் இல்லை : தூத்துக்குடியில் முன்னாள் எம்பி.,பிரமோத் குறில் குற்றச்சாட்டு! தமிழகத்தில் பெரியாருக்கு பின்னர் தலித் தலைவர்கள் யாரும் இல்லை என முன்னாள் ராஜ்யசபா உறுப்பினரும் பகுஜன் பாதுகாப்பது இயக்க தலைவர்  மூத்த தலைவர் பிரமோத் குரில் தூத்துக்குடியில் தெரிவித்தார். முன்னாள் ராஜ்யசபா உறுப்பினரும் பகுஜன் பாதுகாப்பது இயக்க   மூத்த தலைவர் பிரமோத் குரில் இன்று தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறும் போது, இந்தியாவில் பொருளாதார நிலை அதல பாதாளத்தில் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் பிரதமர் மோடி இதைப்பற்றி கவலையின்றி நாடு நாடாக சுற்றுகிறார். காஷ்மீரில் அடிப்படை தேவைகளுக்கே பாெதுமக்கள் திண்டாடி வருகின்றனர். ஆனால் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக மோடி கூறுகிறார். ஹிட்லர் பாணியில் பிரதமர் மோடி செயல்படுகிறார். இதனால் கழுத்தளவு பிரச்சனை உள்ளது. பிரச்சனை அதிகமாகி விட்டால் பொதுமக்கள் கொதித்தெழுந்து போராட வாய்ப்புள்ளது. தமிழகத்தில் பெரியாருக்கு பின்னர் ...

பெரியாருக்கு பின் தலித்களுக்கு நல்ல தலைவர்கள் இல்லை!தூத்துக்குடியில் பிரோமத் குறில் குற்றச்சாட்டு!

ஷயாம்நீயுஸ்  03.09.2019 பெரியாருக்கு பின்னர் தலித் தலைவர்கள் இல்லை : தூத்துக்குடியில் முன்னாள் எம்பி.,பிரமோத் குறில் குற்றச்சாட்டு! தமிழகத்தில் பெரியாருக்கு பின்னர் தலித் தலைவர்கள் யாரும் இல்லை என முன்னாள் ராஜ்யசபா உறுப்பினரும் பகுஜன் சமாஜ் கட்சியின் மூத்த தலைவர் பிரமோத் குரில் தூத்துக்குடியில் தெரிவித்தார். முன்னாள் ராஜ்யசபா உறுப்பினரும் பகுஜன் சமாஜ் கட்சியின் மூத்த தலைவர் பிரமோத் குரில் இன்று தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறும் போது, இந்தியாவில் பொருளாதார நிலை அதல பாதாளத்தில் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் பிரதமர் மோடி இதைப்பற்றி கவலையின்றி நாடு நாடாக சுற்றுகிறார். காஷ்மீரில் அடிப்படை தேவைகளுக்கே பாெதுமக்கள் திண்டாடி வருகின்றனர். ஆனால் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக மோடி கூறுகிறார். ஹிட்லர் பாணியில் பிரதமர் மோடி செயல்படுகிறார். இதனால் கழுத்தளவு பிரச்சனை உள்ளது. பிரச்சனை அதிகமாகி விட்டால் பொதுமக்கள் கொதித்தெழுந்து போராட வாய்ப்புள்ளது. தமிழகத்தில் பெரியாருக்கு பின்னர் தலித் தலைவர்கள் யாரும் இல்லை. நாட்டில் 80 காேடி பேர் தலித்துகள...

தூத்துக்குடியில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த தலையாரி-பொதுமக்கள் குற்றச்சாட்டு!

தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் 1கிராம நிர்வாக அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் தலையாரி ஏகாந்தலிங்கம். இவர் ஆரம்ப காலம் தொட்டு இப்பகுதி தலையாரியாக பணிபுரிந்து வருகிறார் . இவர் கோரம்பள்ளம் கிராமம் 1பகுதியில் உள்ள புறம்போக்கு நிலம். விவசாய நீர்நிலை கால்வாய்கள் ஆக்கிறமிப்பு செய்து கட்டிடம  கட்டியதை புதிதாக வரும் கிராம நிர்வாக அதிகாரிகளிடம் தெறிவிக்காமல் மறைப்பது,விவசாயம்கோரம்பள்ளம் குளத்தில் இருந்து கரிசல் மண் இலவசமாக விவசாயிகளுக்கு

வி ஏஓ பணியிடங்களுக்கு ஓய்வு பெற்ற அலுவலர்களை நியமிக்க கோரிக்கை!

ஷயாம்நீயுஸ்  28.08.2019 விஏஓ பணியிடங்களுக்கு ஓய்வு பெற்ற அலுவலர்களை நியமிக்க வேண்டும்: ஆட்சியரிடம் கோரிக்கை தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கு ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக தமிழ்நாடு ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சங்கம் மாநில செயலாளர் ரெங்கராஜ், மாவட்ட தலைவர் சின்னதங்கம், மாவட்ட செயலாளர் சுப்பையா ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதில், "காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களில் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை பணியமர்த்திட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 25க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளது. அந்த காலிப் பணியிடஙக்ளை ஏற்கனவே மனு செய்துள்ள, ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணி வழங்கிட உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ஜெயசீலனை மாற்ற அதிமுக நிர்வாகிகள் முயற்சி?

ஷ்யாம் நியூஸ் 13.08.2019 தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ஜெயசீலனை  மாற்ற அதிமுக நிர்வாகிகள் முயற்சி ? தமிழகத்தில் தற்போது வேகமான முன்னேற்றம் அடைந்துவரும் மாவட்டம் தூத்துக்குடி மாவட்டமாகவும்.அதற்கு இளம் IAS மற்றும் IPS அதிகாரிகளின் கடும் உழைப்பே ஆகும்.நேர்மையான அதிகாரிகளை எப்போதும் அரசியல்வாதிகளுக்கு பிடிப்பது இல்லை என்பதை நிருபிக்கும் வகையில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையரை மாற்ற தூத்துக்குடி அதிமுக நிர்வாகிகள் அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம்  அழுத்தம் கொடுத்துள்ளனர். தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி வருவதையொட்டி பழைய பஸ்நிலையம் இடிப்பது சம்மந்தமாக 15லட்சம் டெண்டர் விடப்பட்டது ஆனால் ஆளும்கட்சி உறுப்பினர்கள் சிண்டிகேட் அமைத்து 15லட்சம் டெண்டரை 5லட்சத்திற்க்கு எடுத்து அதையே 31லட்சத்திற்கு கைமாத்திவிட்டதால் ஆணையர் பழைய பஸ்நிலையத்தை இடிப்பதற்கான ஆணையை வழங்கவில்லை என தெறிகிறது. மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள சைக்கிள் ஸ்டான்டையும் அரசே நடத்தும் என்ற தகவலும் தெறிகிறது ஆகவே ஆணையர் நேர்மையாய் இருப்பதால் ஒன்றும் செய்ய முடித அதிமுக நிர்வாகிகள் அமைச்சர் கடம்பூர் ராஜுவுடன் சேர்ந்து ஆ...

தூத்துக்குடியில் கனிமொழி எம்பி -கீதாஜீவன் எம்எல்ஏ ஆய்வு!

ஷ்யாம் நியூஸ் 12.08.2019 தூத்துக்குடி பேருந்து நிலையம் பணிகளை கனிமொழி எம்பி - கீதாஜீவன் எம்எல்ஏ ஆய்வு தூத்துக்குடி அரசு மருத்துவமனை மற்றும் பழைய பேருந்து நிலையம் மேம்படுத்தும் பணிகளை கனிமொழி எம்பி - கீதாஜீவன் எம்எல்ஏ ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெறும் பழைய பேருந்து நிலையப் பணிகளை கனிமொழி எம்பி, கீதாஜீவன் எம்எல்ஏ ஆகியோர் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அரசு மருத்துவமனையில் அவசர கால சிகிச்சை பிரிவில் நோயாளிகளைச் சந்தித்து ஆறுதல் கூறிய அவர்கள், நோயாளிகளின் தேவைகள், குறைகளை கேட்டறிந்தனர். முன்னதாக அரசு மருத்துவமனைக்கு வந்த கனிமொழி எம்பியை மருத்துவ கல்லூரி முதல்வர்  ராமசுப்பிரமணியன், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி, உதவி உறைவிட மருத்துவர் இன்சுவை, டாக்டர் பாலவன் மற்றும் மருத்துவர்கள் வரவேற்றனர்  தொடர்ந்து அவர்கள், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெறும்  தூத்துக்குடி பழைய பேருந்து நிலைய இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஸ்மார்ட்...

35ஏ: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் சட்டப்பிரிவு என்ன? 5 கேள்வி பதில்கள்..

SHYAM NEWS 06.08.2019 35ஏ: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் சட்டப்பிரிவு என்ன? 5 கேள்வி பதில்கள்... தை பகிர ஃபேஸ்புக்கில்   இதை பகிர Messenger   இதை பகிர டுவிட்டரில்    பகிர மின்னஞ்சல படத்தின் காப்புரிமை காஷ்மீர் மக்களுக்கு சிறப்புரிமை வழங்கும் அரசமைப்புச் சட்டத்தின் உறுப்புரை 35-ஏ தொடர்பான சர்ச்சை பல பதிற்றாண்டுகளாக நீடிக்கிறது. இது தொடர்பான சில முக்கியத் தகவல்கள்: 35-ஏ என்ன சொல்கிறது? இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்புரை 35-ஏ காஷ்மீர் மக்களுக்கு பிரத்யேக சலுகைகள் வழங்கியுள்ளன. அதன்படி, காஷ்மீர் மாநில மக்களே அங்கு நிரந்தர குடிகள். எனவே, வெளிமாநிலத்தைச் சேர்ந்த மக்கள் காஷ்மீரில் எந்தவொரு அசையா சொத்தையும் வாங்க முடியாது; மாநில அரசின் நலத்திட்டங்களால் பயனடைய முடியாது. படத்தின் காப்புரிமை இந்த பிரிவின் கீழ் யாரெல்லாம் அடங்குவர்? இந்த சட்டப்பிரிவு அமலுக்கு வந்த நாளான மே 14, 1954 முதல் இருந்து அங்கு யாரெல்லாம் வாழ்கிறார்களோ, அவர்கள் அனைவரும் இந்த சட்டத்தின் கீழ் வருவார்கள். மேலும், அப்போதில் இருந்து 10 ஆண்டுகள் வாழ்ந்தவர்கள் ஜம்மு...