முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குற்றங்களை தடுக்க அவசர அழைப்பு எண் 100 பயன் படுத்த வேண்டும் பொதுமக்களுக்கு தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் அருண் கோபாலன் வேண்டுகோள்!

ஷ்யாம் நியூஸ்
17.09.2019

குற்றங்களை தடுக்க அவசர  அழைப்பு எண் 100 பயன் படுத்த வேண்டும்   பொதுமக்களுக்கு  தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் அருண் கோபாலன் வேண்டுகோள்!

 


பொதுமக்கள் தங்களுக்கான பாதுகாப்பு தொடர்பாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை சம்மந்தமாகவும் போலீஸ் அவசர இலவச எண்ணான 100 ஐ தொடர்பு கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருன்கோபாலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று ( 16.9.2019) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருன்பாலகோபாலன் :

அவசர உதவிக்கு அழைக்கும் பொதுமக்களின் நோக்கம் முழுமையாக நிறைவேற, அனைத்து மாவட்டங்களையும் இணைக்கும் வகையில் சென்னையில் மாடர்ன் கன்ட்ரோல் ரூம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் அழைப்பு, அங்கு சென்று, அதன்பின், சம்பந்தப்பட்ட ஊரில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வரும்.அங்கு பணியில் உள்ள போலீசாரின் கம்ப்யூட்டரில் உள்ள 'டயலாக்' பாக்ஸ் அலர்ட் செய்யும். தகவலை பெற்று கொண்டு, சம்பந்தப்பட்ட நபரின் மொபைல் நம்பரை தொடர்பு கொண்டு, உடனே போலீசார் விரைந்து செல்லும் வகையில் செயல்பட்டு வருகிறது.ஆகவே பொதுமக்கள் தயங்காமல் 
தங்களுக்கான பாதுகாப்பு தொடர்பாகவும், தங்களை சுற்றி நடைபெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை சம்மந்தமாக போலீஸ் அவசர இலவச எண்ணான 100 ஐ தொடர்பு கொள்ள வேண்டும்.

கடந்த ஜூலை மாதத்தில் 11 கொலை வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன .மொத்தம் 11 வழக்குகளில் 29 எதிரிகள் கைது செய்யப்பட்டு புலன் விசாரணையில் இருந்து வருகிறது.கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 4 கொலை வழக்குகள் பதிவாகி உள்ளன. அவற்றில் 17 எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.5 எதிரிகள் சரணடைந்துள்ளனர்.

செப்டம்பர் மாதத்தில் 3 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன.இவற்றில் 14 எதிரிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஒருவர் சரணடைந்துள்ளார்.

நேற்று நடந்த தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட முருகேசன் மற்றும் விவேக் கொலை வழக்கில் 8 எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை புதுக்கோட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட சொரிமுத்து கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .ஒருவர் மதுரை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 5ல் சரணடைந்துள்ளார்.

12 .9. 2019 அன்று நடைபெற்ற முறப்பநாடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட இசக்கி பாண்டி கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஒருவர் முருகன் என்பவர் மதுரை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 5ல் சரணடைந்துள்ளார்.

இவற்றை கடந்த காலத்தோடு ஒப்பிடும்போது குறைந்து கொண்டு வந்து கொண்டிருக்கிறது. 2015ஆம் ஆண்டு 76 வழக்குகளும் , 2016 ஆம் ஆண்டில் 64 வழக்குகளும் ,2017 ஆம் ஆண்டு 67 வழக்குகளும் ,2018ம் ஆண்டில் 60 வழக்குகளும் ,2019 இதுவரை 54 வழக்குகளும் பதிவாகியுள்ளது.

கடந்த 2 மாதங்களில் மட்டும் 10 வழக்குகளில் 19 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரண்டு வழக்குகளில் இரண்டு குற்றவாளிகளுக்கு 10 வருடம் சிறை தண்டனையும் இரண்டு வழக்குகளில் 2 குற்றவாளிகளுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் திருட்டு மற்றும் வழிப்பறி ஆகியவை 35 வழக்குகள் பதிவாகி உள்ளன. அவற்றில் 20 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு 21 எதிரிகள் கைது செய்யப்பட்டு பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.அவற்றின் மதிப்பு ரூபாய் 7 ,73, 230 ஆகும்.இது 57% ஆகும்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 40 வழக்குகள் பதிவாகி உள்ளன .அவற்றில் இதில் 22 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு 38 எதிரிகள் கைது செய்யப்பட்ட ரூபாய் 5,65, 100 மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இன்று (16.9.2019) வரை 264 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 167 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு எதிரிகள் கைது செய்யப்பட்டு
ரூபாய் 73, 37 ,75 7 மதிப்புள்ள பொருட்கள் மற்றும் பணம் மீட்கப்பட்டுள்ளது 63% ஆகும்.

கடந்த 2 மாதங்களில் 9 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் அவற்றில் 2  பேர் போதை தடுப்பு சட்டத்தின் கீழ் ஒருவர் பாலியல் குற்றத்திற்காக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதை தடுப்பு குற்றத்தில் 45 வழக்குகள்

பதிவு செய்யப்பட்டு 340 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிட்டு பார்க்கும்போது 59 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 111 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

கடந்த 2 மாதங்களில் மட்டும் 47 வழக்குகளில் 59 ரவுடிகள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இதுவரை 119 வழக்குகளில் 160 ரவுடிகள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தெரிவித்தார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...