ஷ்யாம் நியூஸ்
21.09.2019
ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக ஒரு நபர் ஆணையத்தின் அதிரடி!
தூத்துக்குடியில் கடந்த மே22 ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது. போலீசாரால் பொதுமக்களில் 13பேர் சுட்டு கொல்லப்பட்டனர். எந்தவித ஆதாரமும் இன்றி 400க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்களை கொண்டு ஒருநபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது 14 அமர்வுகளில் 300க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்திய கமிஷன் தனது தீர்ப்பை விரைவில் தமிழகமுதல்வரிடம் சமர்பிக்க உள்ளது.
ஆதாரமின்றி பதிவுசெய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யபட வேண்டும். வழக்கில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தலா ரூபாய் 1.5லட்சம் வழங்கவும் , காவல்துறை மூலம் தடையில்லா சான்று வழங்கவும் ஒருநபர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக தெரியவருகிறது.