கடல் விபத்து சாலை விபத்தில் இறந்த மீனவர்களுக்கு காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்கவேண்டும் -தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
ஷ்யாம் நியூஸ்
06..09.2019
கடல் விபத்து சாலை விபத்தில் இறந்த மீனவர்களுக்கு காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்கவேண்டும் -தூத்துக்குடி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
தூத்துக்குடி மாவட்டம் கடல் விபத்து மற்றும் சாலை விபத்தில் இறைந்தவர்களுக்காக மீனவர்களிடம் இருந்து காப்பீடு தொகை வசூலித்து மீன்வாரியம் உதவி இயக்குனர் சார்பாக ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு செலுத்தபப்ட்டது .ஆனால் தூத்துக்குடி மாவட்ட மீனவ மக்களுக்கு இழப்பீடு வழங்காமால் தேவைல்லாத கரணம் சொல்லி இன்சூரன்ஸ் நிறுவனம் தட்டிக்கழித்து வந்தது இந்த நிலையில் மீனவர்கள் நலன்கருதி தூத்துக்குடி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கறிஞ்சர் ஜெ .ஆலன் அரிஸ்டாட்டில் வழக்கு தொடுத்து வாதாடி வந்தார் .இருதரப்பு வாதங்களை கருத்தில் கொண்ட நுகர்வோர் நீதி மன்ற அமைப்பை சார்ந்த நீதி அரசர்கள் .நாராயண சாமி ,சங்கர் , சரஸ்வதி .ஆகியோர் ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு கடல் விபத்து மற்றும் சாலை விபத்தில் இறந்த மீனவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கவேண்டும் எனவும் மீனவர்கள் நலன் பாதுகாக்க படவேண்டும் எனவும் தூத்துக்குடி நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது .
ReplyForward
|