ஷயாம்நீயுஸ்
03.09.2019
பெரியாருக்கு பின்னர் தலித் தலைவர்கள் இல்லை : தூத்துக்குடியில் முன்னாள் எம்பி.,பிரமோத் குறில் குற்றச்சாட்டு!
தமிழகத்தில் பெரியாருக்கு பின்னர் தலித் தலைவர்கள் யாரும் இல்லை என முன்னாள் ராஜ்யசபா உறுப்பினரும் பகுஜன் சமாஜ் கட்சியின் மூத்த தலைவர் பிரமோத் குரில் தூத்துக்குடியில் தெரிவித்தார்.
ஹிட்லர் பாணியில் பிரதமர் மோடி செயல்படுகிறார். இதனால் கழுத்தளவு பிரச்சனை உள்ளது. பிரச்சனை அதிகமாகி விட்டால் பொதுமக்கள் கொதித்தெழுந்து போராட வாய்ப்புள்ளது. தமிழகத்தில் பெரியாருக்கு பின்னர் தலித் தலைவர்கள் யாரும் இல்லை. நாட்டில் 80 காேடி பேர் தலித்துகளும் பிற்படுத்தபட்டோரும் உள்ளனர். தேசிய அளவிலும் தலித்துகளுக்கு தலைவர் இல்லை. இருக்கின்ற தலித் தலைவர்கள் பெரிய கட்சிகளின் ஏஜன்ட் ஆக செயல்பட்டு ஒரு சீட்டுக்காகவும் பணத்திற்காகவும் யாசகம் செய்கின்றனர்.
மாயாவதி சிபிஐ.,க்கு பயந்து பாஜகவிடம் சரணடைந்து விட்டார். இதே நிலை தான் தமிழகத்திலும் உள்ளது. அதிமுக அரசு பாஜகவிடம் சரணடைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, பகுஜன் சமாஜ் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் லூயிஸ், இணை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பாென்னுச்சாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.