தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் பணியாளர்களுக்குள் ஜாதி சண்டை ! மாவட்ட மேலாளாரை கண்டித்து தொழிற்சங்கம் கண்டனம் !
ஷ்யாம் நியூஸ்
31.10.2019
- தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் பணியாளர்களுக்குள் சண்டை ! மாவட்ட மேலாளாரை கண்டித்து தொழிற்சங்கம் கண்டனம் !
- தூத்துக்குடியில் ஏ ஐ டி யு சி தொழிற்சங்கதின் 100 வது ஆண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி சிபிகாட் வளாகத்தில் உள்ள மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பு ஏ ஐ டி யு சி தொழிற்சங்க உறுப்பினர்கள் கொடி ஏற்றினர் .உழைக்கும் தொழிலார்களுக்கு அவர்களின் உரிமையை நிலைநாட்டவும் தொழிலார்களின் பாதுகாப்பை உறுதி படுத்தவும் ஏ ஐ டி யு சி தொடர்ந்து பாடுபட்டு வருகிறது .தொழிலார்களுக்காக இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் தாய் சங்கம் இது . டாஸ்மாக் நிர்வாகம் தொழிற்சங்கங்கள் உருவாக்க கூடாது என பணியாளர்களை மிரட்டும் நேரத்தில் அதற்க்கு அஞ்சாமல் தமிழகத்திலே முதன் முதலாக தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்களுக்காக உருவாக்கப்பட்ட தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் ஏ ஐ டி யு சி சங்கம் ஆகும் பணியாளர் நலனுக்காக தொடர்ந்து போராடும் எனவும் தெரிவித்தனர் .எட்டயாபுரம் பகுதி பணியாளர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனைக்கு சுமுகமான தீர்வு காணாமல் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் வடமலை முத்து இரு சமூகத்தை சார்ந்த பணியாளர்களுக்கு இடையே ஜாதி காழ்ப்புணச்சியை தூண்டிவிட்டு குளிர் காய்ந்து வருகிறார் இது கண்டிக்கத்தக்கது இது குறித்து பலமுறை பேசியும் அவர் போக்கை மாற்றாமல் சரியான நடவடிக்கை எடுக்காமல் மெத்தன போக்கை கடைபிடிக்கிறார் இதனால் தென்மாவட்டங்களில் டாஸ்மாக் பணியாள்களிடையே ஜாதிய சண்டை ஏற்பட வாய்ப்பு உள்ளது ஆகவே பணியாளர்கள் சுமுகமாக செயல்பட சரியான நடவடிக்கை எடுக்கவேண்டும் இல்லையானால் மேலாளர் வடமலைமுத்துவை கண்டித்து மாநில முழுவதும் ஏ ஐ டி யு சி சார்பில் தர்ணா போராட்டம் நடத்தப்படும் என டாஸ்மாக் ஏ ஐ டி யு சி சங்க மாநில துணை தலைவர் நெல்லை நெப்போலியன் தெரிவித்தார் .பின்பு ஏ ஐ டி யு சி சங்க அகில இந்திய செயலாளர் குருதாஸ் மறைவிற்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர் .இதில் நெல்லை நெப்போலியன் தலமை தாங்கினார் ஏ ஐ டி யு சி மாவட்ட பொதுச்செயலாளர் கிருஷ்ணராஜ் கொடி ஏற்றினார் மற்றும் உறுப்பினர்கள் முத்து ,காளிமுத்து ,முத்துகிருஷ்ணன் ,கோவில்பட்டி முத்துராஜ் ஸ்ரீவைகுண்டம் சகாயம் துறைமுக சங்க உறுப்பினர் பல்சிங் மற்றும் பல உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் .