சாக்கடையில் மிதக்கும் அரசு மருத்தவமணை!பொறுப்பில்லாத அதிகாரிகள்!நடவடிக்கை எடுப்பாரா ஆட்சியர்?
தண்ணீரில் சூழ்ந்த தூத்துக்குடி மாநகரம்! தூத்துக்குடி நகரில் நேற்றிரவு 33மீமி கனமழை பெய்தது. தூத்துக்குடி நகரின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி வீடுகளுக்குள்ளும் மழை நீர் புகுந்துள்ளது. ஏற்கனவே கடந்த வாரம் பெய்த மழைநீர் இதுவரை பல்வேறு இடங்களில் அப்புறப்படுத்தாத சூழ்நிலையில்.தற்போது பெய்த மழையில் தூத்துக்குடி நகரத்தில் பல்வேறு இடங்கள் நீர் சூழ்ந்து தீவு போல் காட்சி அளிக்கிறது. தூத்துக்குடி திருச்செந்தூர் சாலை நீதிமன்ற குடியிருப்பு அருகில் உள்ள பிரதான சாலையில் ஒரு அடிக்கு மேல் தண்ணீர் உள்ளது.இந்த சாலையானது பள்ளி,கல்லூரி,வேலைக்கு செல்பவர்களுக்கு இது பிரதான சாலையாகும் .இந்நிலையில் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளம் மேடு தெரியாமல் கீழே விழுந்து செல்லும் நிலமைக்கு ஆளாகினார்கள். அதே போல் மாநகரை சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தண்ணீரில் சூழ்ந்து தீவு போல் உள்ளது.அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பிரசவ வார்டு,பிணவரை,காய்ச்சல் தடுப்பு பிரிவு வார்டு உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து உள்ளது. இதில் சாக்கடை நீரும் கலந்து உள்ளது. நோய் போக்க மருத்துவமனைக்கு சிகைச்சைக்கு வரும் பொதுமக்களுக்கு நோய் உருவாக்கும் வகையில் இருப்பதால் நோயாளிகள் தரப்பில் வருத்தம் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக காலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகளை இது தொடர்பாக சந்திக்க சென்ற போது சுமார் காலை 11 மணி வரை அலுவலகம் திறக்கப்படவில்லை. பின்னர் அவர்களை போனில் தொடர்பு கொண்டு இது தொடர்பாக கூறியபோது அவர்கள் விரைவாக சரி செய்வோம் என கூறினார். ஆனால் சாயங்காலம் 5 மணி வரை சரி செய்ய படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.